பத்து வருடத்தில் பகட்டான வளர்ச்சி.. சிசிடி உடன் போட்டி போடும் ப்ரூபெர்ரி..!

By Jeevan Raj
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குஜராத்தில் உள்ள வதோதரா, என்ற சிறிய நகரில் 2008ம் ஆண்டு ஒரே ஒரு காபி கடை துவங்கி இன்று இந்தியா முழுவதும் 70 நகரங்களில், 110 கடைகள் - 50 கஃபேக்கள் மற்றும் 60 சிற்றுண்டி விடுதிகள் என்று கிளை பரப்பி இருக்கும் ப்ரூபெர்ரி நிறுவனத்தின் வெற்றி சரித்திரமானது.

காபி தயாரிப்பாளர்களான அதன் இணை நிறுவனர்கள் மற்றும் இயக்குனர்கள் அங்கூர் குப்தா மற்றும் ரோனக் கபடேல் இருவரிடமும் அடங்கியுள்ளது. இருவருக்கும் வயது 36.

அங்கூரின் "ஆர்வமோடு செய். இல்லையெனில் செய்யாதே" என்ற தாரகமந்திரத்துடன், சில நுட்ப தொழில் உத்திகளை இணைத்து ஆரம்பிக்கப்பட்ட ப்ரூபெர்ரி நிறுவனமானது நாட்டின் மிக வேகமாக வளர்ந்து வரும் சங்கிலி தொடர் நிறுவனமானது. இன்றைய நிலையில் Cafe Coffee day (சிசிடி) உடன் போட்டி போடும் அளவிற்கு உயர்ந்துள்ளது.

10 மில்லியன் வாடிக்கையாளர்கள்
 

10 மில்லியன் வாடிக்கையாளர்கள்

ஒரு ஆண்டிற்கு 10 மில்லியன் வாடிக்கையாளர்களுடன் அதிக லாபத்தை ஈட்டி தருகிறது. இந்த நிறுவனமானது அவர்களின் கடின வருமானமான சேமிப்பான 12 லட்சமும் மற்றும் பெற்றார் சேமிப்பில் இருந்து சில நிதிகளும் சேர்த்து தொடங்கப்பட்டது, இன்று ப்ரூபெர்ரியின் விற்றுமுதல் ஏற்கனவே ரூ 8.3 கோடியை தொட்டுவிட்டது.

கதையின் தொடக்கம்

கதையின் தொடக்கம்

முதலாவதாக ஆரம்பிக்கப்பட்ட வதோரா புறநகரில் மாகாபுரா சாலையில் அமைந்துள்ள ப்ரூபெர்ரி கபே தான் இந்தக் கதையின் தொடக்கம். இங்கு தான் குஜராத் ராஜ்கோட்டில் அமைந்துள்ள "விவேகானந்தா சுற்றுலா மற்றும் உணவு விடுதி மேலாண்மை கல்வி நிலையத்தில் " உணவு விடுதி மேலாண்மை பயின்ற பட்டதாரிகளான இந்த இரண்டு நண்பர்களும், தங்களுடைய தொழிலை ஆரம்பித்த இடம்.

வித்தியாசமான முயற்சி

வித்தியாசமான முயற்சி

நறுமணத்துடன், புதிதாகத் தயாரிக்கப்பட்ட பானத்துடன் கூடிய சிற்றுண்டி, புத்தகங்கள், விளையாட்டுகள் மற்றும் அதோடு கூட வைப்பை இணைப்பும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டது.

ஒரு பிரகாசமான வண்ணமயமான சுவர், பார்வைக்கு வைத்திருக்கும் டி-சர்டுகள். பரவியிருக்கும் மெத்தைகளில் நகைச்சுவையான மேற்கோள்கள் என அருகில் இருக்கும் நகரங்களில் உள்ள கபே பிராண்ட் நிறுவனங்கள் மத்தியில் தன்னை நிலை நிறுத்திகொள்ள இது ஒரு ஏதுவானது.

பள்ளி நாட்களில் இருந்து
 

பள்ளி நாட்களில் இருந்து

அங்கூர் மற்றும் ரோனக் அவர்களின் பள்ளி நாட்களில் இருந்து நண்பர்கள். அங்கூர் சேவை துறை (உணவு மற்றும் பானங்கள்) முன்னுரிமை அளித்தார். ரோனக்கிற்கு உணவு உற்பத்தி துறை (சமையலறை) பிடித்திருந்தது.

கல்லூரி படிப்பு முடிந்த பிறகு, அங்கூர் அய்ன் ரேண்டின் பிரபல புத்தகமான "ஃபவுண்டைன்ஹெட்" படித்து அப்புத்தகத்தின் கதாநாயகன் ஹோவார்ட் டின் தனித்தன்மையால் ரோர்க் கவரப்பட்டார்.

விளையாட்டு வீரர்

விளையாட்டு வீரர்

28 வயது நிரம்பிய அங்கூர் ஒரு முன்னாள் தேசிய பேஸ்பால் விளையாட்டு வீரர். முதலில் இந்தத் தொழிலை தொடங்க ஒரு ஆர்வம் இருந்தது. அவர் அதை பற்றி அவரது பெற்றோர்களைச் சம்மதிக்க வைத்தபின் ரோனக்கை அழைத்து தனது தொழில் முனைவோர் கனவுகளை பகிர்ந்து கொண்டார்.

இறுதி ஆண்டு புராஜெக்ட்

இறுதி ஆண்டு புராஜெக்ட்

அவர்கள் முதலில் ஒரு உணவகம் திறப்பது பற்றி நினைத்தனர், ஆனால் அது மூலதன நலனைக் கொண்டிருந்ததால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது. இவர்களின் ஹோட்டல் மேலாண்மை பட்ட படிப்பில் நான்காவது மற்றும் இறுதி ஆண்டில் நடந்ததை நினைவுகூரும் ரோனக். "அங்கூர் மற்றும் நான் ஒரு காபி திட்டத்தினை எங்களது இறுதி ஆண்டு புராஜெக்ட்காக வடிவமைத்துக் கொண்டிருந்தோம்.

பயிற்சி

பயிற்சி

இதுவே எங்களது கனவு திட்டமாக அமைந்து விட்டது என்று நினைவுபடுத்தியுள்ளார் 2005ம் ஆண்டு தங்களது பட்டப்படிப்பை முடித்த இவர்களில், அங்கூர் மும்பையில் உள்ள "காபி டே கபே" வில்( இது ஹாயாத் ரிஜென்ஸி பின் புறம் உள்ளது) தனது பயிற்சியை முடித்தார். ரோனாக் அமெரிக்காவில் உள்ள மேரியாட் ஹோட்டலில் வேலை செய்து கொண்டே ஸ்டார் பக் கியோஸ்கில் வேலை செய்தார், இந்தக் காபி தான் அவர்களுக்கு அழைப்பு விடுத்தது.

ஹயத்தில் துவங்கிய வாழ்க்கை

ஹயத்தில் துவங்கிய வாழ்க்கை

ஹயத்தில் ஒரு மேலாண்மை பயிற்சியாளராக இருந்த அங்கூர் ஒரு வாடகை குடியிருப்பில் அவருடன் படித்த சக மாணவர்கள் 4-5 பேர்களுடன் வசித்து வந்தார். ஒரு நாளைக்குச் சராசரியாக 17-18 மணி நேரம் அவர் செய்த வேலை அவருக்கு ஒரு ஆரோக்கியமான வங்கி இருப்பை ஏற்படுத்தியது. ரோனக்கும் தனது அமெரிக்கா மற்றும் லண்டனில் தனது சம்பாத்தியத்தில் இருந்து விவேகத்துடன் சேமித்து வந்தார். அவர் அங்கு மரியாட் செஸ்ஹண்ட்டில் வேலை பார்த்தார்.

முதலீடு

முதலீடு

அவர்கள் தங்கள் சேமிப்பு மற்றும் பெற்றோர்கள் அளித்த சில நிதிகள் சேர்த்து, ரூ 12 லட்சம் முதலீட்டை ஏற்படுத்தினர்.

ப்ரூபெர்ரி ஹாஸ்பிடாலிடி பிரைவேட் லிமிடெட், என்ற இவர்களது நிறுவனம் 2008ம் ஆண்டு செப்டம்பர் 17 இல் அமைக்கப்பட்டது . அங்கூர் மற்றும் இரண்டு உறுப்பினர் குழுவை அமைத்து வாடிக்கையாளர்களுக்குச் சூடான காபி மற்றும் சாண்ட்விட்ச் ரொட்டி தயாரித்தனர்.

வதோதரா தேர்வு

வதோதரா தேர்வு

ஆனால் ஏன் எல்லா இடங்களையும் விட்டு வதோதராவை தேர்வு செய்தனர்? சுவாரஸ்யமாக, இவர்கள் எவரும் வதோதராவை சேர்ந்தவர்கள் அல்ல; அங்கூர் குஜராத்தில் உள்ள கேதா பகுதியையும் ரோனாக் சண்டிகர் பகுதியையும் சேர்ந்தவர். இவர்கள் குஜராத்தில் படித்தவர்கள் எனினும் பாதுகாப்பான, நல்ல உள்கட்டமைப்பு மற்றும் ஒரு ஆரோக்கியமான தொழில் முனைவோருக்கான உட்வேகத்தை வதோரா கொண்டு இருந்தது.

வாடகை

வாடகை

"எங்கள் சவால் உயர் வாடகையாக இருந்தது," ரோனாக் நினைவுகூர்ந்தார், "எங்களுக்கு போதுமான நிதிவசதி இல்லை . எனவே இரண்டு அடுக்கு நகரங்களில் தொடங்கி அதை இரண்டு மற்றும் மூன்று அடுக்கு நகரங்களில் விரிவடையச் செய்வது என்பது நல்லதாகப் பட்டது. இதற்கு எல்ல வகையிலும் வதோரா சரியான தேர்வாக அமைந்தது.

ரிலாக்ஸாக ஒரு கப் காபி

ரிலாக்ஸாக ஒரு கப் காபி

அங்கூர் மற்றும் ரோனக் ப்ரூபெர்ரியை எல்லாத் தரப்பு மக்களும் அணுக முடிந்த ஒரு வணிக மாதிரியாக உருவாக்கினர். அங்கு நண்பர்கள் தனக்கு பிடித்தமானவர்களுடன் வந்து அல்லது குடும்பமாக ரிலாக்ஸாக ஒரு கப் காபி அருந்தவும் ஏற்ற இடமாக மாற்றினர்.

உரிமையைகிளையை நிறுவ முடிவு

உரிமையைகிளையை நிறுவ முடிவு

தேவையான நிதி இல்லாமல் இருந்தபோதும், அங்கூர் விரிவாக்க முடிவு செயிது அடுத்த 2009ம் வருடமே கடை மீதான உரிமையைகிளையை நிறுவ முடிவு செய்தார்.

அவர் நெட்வொர்க்கிங் மூலம் மக்களை இணைக்க தொடங்கி, ஒரு முறை கட்டணமான ரூ 3.5 லட்சம் செலுத்தினால் தனது உரிமையை விற்க இந்தியா மூலம் விரிவாகப் பயணம் செய்தார்.

முதல் தனியுரிமை கடை, ஜெய்ப்பூர்ரில் ஆரம்பிக்கப்பட்டது அதன் பின் சூரத், அகமதாபாத் என தொடர்ந்தது. 2002ம் ஆண்டு அவர்களுக்கு மைல்கல்லாக அமைந்தது. இப்போது அவர்களுக்குச் சொந்தமாக ஒரு கடையும் 25 நகரங்களில் 25 தனியுரிமை கடைகளும் ஆரம்பிக்கப்பட்டன.

திடீர் அழைப்பு

திடீர் அழைப்பு

திடீரென அவர்களுக்கு வந்த அழைப்பு அவர்கள் தலைவிதியை மாற்றியது. அவர்கள் கற்பனை செய்வதற்கும் அதிகமாக இது அமைந்தது. அது டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) அழைப்பு, இவர்கள் தனது மென்பொருள் சேவையை இந்தியா முழுவதும் இருந்த பாஸ்போர்ட் அலுவலகமான பாஸ்போர்ட் சேவா கேந்திரா (PSKs) வில் அளித்து வந்தனர். இவர்கள் ஒரு காபி கடையை தேடி வந்தனர்.

எனவே இந்த பாஸ்போர்ட் சேவா கேந்திராவில் தங்கள் கபே பங்காளியாக இருக்க ப்ரூபெர்ரிக்கு அழைப்பு விடுத்னர். டிசிஎஸ் பாஸ்போர்ட் சேவா கேந்திராவில் ப்ரூபெர்ரிக்கான இடத்தை அளிக்கும் அதற்கான வாடகை பணத்தை இவர்கள் செலுத்த வேண்டும்.

120 நேரடி பணியாளர்கள்

120 நேரடி பணியாளர்கள்

"நாங்கள் நான்கு மாதங்களில் 50 நகரங்களில் 63 கஃபேக்கள் அமைத்தோம், பின்னர் வதோதராவில் ஒரு ஆறு பேர் கொண்ட குழு உள்ளது என அங்கூர் நினைவு கூர்ந்தார். மேலும் ஆறு பேர் பணியமர்த்தப்பட்டனர் பின்னர் இவர்களின் நிறுவனம் இந்தியாவின் வரை படத்தில் இடம் பிடித்தது.

இப்போது 16 முக்கிய அணியினருடன் 120 நேரடி பணியாளர்களும், ப்ரூபெர்ரியில் பணியாற்றுகின்றனர். இவர்களுடைய ஒரு வருட விற்று முதல் 75 லட்சத்தில் இருந்து 4.5 கோடியாக உயர்ந்தது.

இந்திய அரசு

இந்திய அரசு

இந்திய அரசாங்கத்தின் காபி வளர்ச்சி நிறுவனம் இவர்களது நிறுவனத்தை வளர்ந்து வரும் நிறுவனமாக அங்கீகரித்தது. 2015-2016ம் ஆண்டு இவர்களது விற்று முதல் ரூ8.5 கோடியாக அதிகரித்தது.

கிளைகள்

கிளைகள்

இப்போது 63 கிளைகள் பாஸ்போர்ட் சேவா விலும், 45 தனியுரிமை கிளைகளாகவும், எஸ்ஸார் மற்றும் மைண்ட் தொழில் நுட்ப கிளையிலும் இவர்களது நிறுவனம் அமைந்துள்ளது. கடந்த வருடம் , ஹைதரபாத் மெட்ரோ நிலையங்களில் 20 கிளைகளைத் திறக்க ஆர்டர் கிடைத்துள்ளது.

இவர்களுடை நேரடி விற்பனை மாதத்திற்கு ரூ 4 லட்சத்தைத் தாண்டுகிறது.

வெற்றி கிட்டும்

வெற்றி கிட்டும்

காபியும் கேக்கும் ஒரு நல்ல இணைவு. இதை ஒரு நிறுவனமாக மாற்றினால் வெற்றி கிட்டும் என்பதற்கு இது ஒரு உதாரணம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How a small town coffee shop became one of the fastest growing coffee chains in the countr

How a small town coffee shop became one of the fastest growing coffee chains in the country
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more