24 சதவீத எம்பி, எம்எல்ஏ-களுக்கு வருமானமே 'இல்லை'யாம்.. அதிர்ச்சி ரிப்போர்ட்..!

4910 எம்பி மற்றும் சட்ட மன்ற உறுப்பினர்களில் 4848 பேரிடம் இருந்து வாக்குமூலங்களைப் பெற்று இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் 72 சதவீத பாஜக மற்றும் காங்கிரஸ் எம்பி-கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களுக்கு 10 லட்சத்திற்கும் குறைவாகவே வருமானம் உள்ளதாகக் கூறுகின்றனர் என்று இந்தியா ஸ்பெண்டு ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

 

இதற்காக 4910 எம்பி மற்றும் சட்ட மன்ற உறுப்பினர்களில் 4848 பேரிடம் இருந்து வாக்குமூலங்களைப் பெற்று இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

தேசிய அளவில் 75 சதவீதம் எம்பி மற்றும் சட்ட மன்ற உறுப்பினர்கள் 10 லட்சத்திற்கும் குறைவாகத் தங்களது வருமானத்தைக் காண்பித்துள்ளது அறிக்கையின் படி தெரியவந்துள்ளது.

இதில் 35 சதவீத நாடாளுமன்ற உறுப்பினர்கள் 2.5 லட்சத்திற்கும் குறைவாகத் தங்களது ஆண்டு வருமானத்தைக் குறிப்பிட்டுள்ளனர். 40 சதவீதத்தினர் 2.5 லட்சம் முதல் 10 லட்சம் வருமானம் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

வருமானமே இல்லை என்று கூறும் எம்பி மற்றும் எம்எல்ஏ

வருமானமே இல்லை என்று கூறும் எம்பி மற்றும் எம்எல்ஏ

4910 எம்பி மற்றும் எம்எல்ஏ-க்களில் 24 சதவீதத்தினர் அதாவது 1141 நபர்கள் தங்களுக்கு வருமானமே இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர். இதில் தமிழகத்தின் அதிமுகக் கட்சியில் இருந்து 32 பேர் உள்ளனர். தமிழகத்தில் இருந்து மொத்தம் 33 பேர் உள்ளனர்.

வரி செலுத்தாத சமுகம்

வரி செலுத்தாத சமுகம்

2017 பிப்ரவரி 1-ம் தேதி பட்ஜெட் வாசிப்பின் போது அருண் ஜெட்லி அவர்கள் நாம் மிகப் பெரிய வரி செலுத்தாத சமுகமாக உள்ளோம் என்று கூறியிருந்தார்.

2016-2017 நிதி ஆண்டில் வருமான வரி செலுத்தியவர்கள் விவரங்கள்
 

2016-2017 நிதி ஆண்டில் வருமான வரி செலுத்தியவர்கள் விவரங்கள்

வருமான வரி தரவை வெளியிட்ட அருண் ஜெட்லி 2016-2017 நிதி ஆண்டில் 37 மில்லியன் தனிநபர்கள் வருமான வரி தாக்கல் செய்துள்ளதாகவும், 9.9 மில்லியன் அதாவது 27 சதவீதத்தினர் 2.5 லட்சத்திற்கும் குறைவான அளவே வருமான பெறுவதாகவும், 19.5 மில்லியன் அதாவது 53 சதவீதத்தினர் 2.5 லட்சம் முதல் 5 லட்சம் வருமான பெறுவதாகவும், 7.6 மில்லியன் அதாவது 20 சதவீதத்தினர் ஆண்டு வருமானம் 5 லட்சத்திற்கும் அதிகமாக உள்ளதாக வரி தாக்கல் செய்துள்ளதாகவும் கூறினார்.

10 லட்சத்திற்கும் குறைவாக வருமானம் உள்ள எம்பி மற்றும் எம்எல்ஏ-க்கள்

10 லட்சத்திற்கும் குறைவாக வருமானம் உள்ள எம்பி மற்றும் எம்எல்ஏ-க்கள்

எம்பி மற்றும் எம்எல்ஏ-க்களில் 62 சதவீதத்தனரின் மொத்த குடும்ப வருமானத்தையும் சேர்த்தால் கூட 10 லட்சம் வரவில்லை என்று அந்த ஆய்வு கூறுகின்றது.

குடும்ப வருமானம் குறைவாக இருந்தாலும் சொத்து மதிப்புக் கோடியில்

குடும்ப வருமானம் குறைவாக இருந்தாலும் சொத்து மதிப்புக் கோடியில்

2410 எம்பி மற்றும் எம்எல்ஏ-க்களில் அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் மதிப்பு 2 கோடிக்கும் அதிகமாக உள்ளது. ஆனால் 912 பேர் 32 சதவீதத்தினர் குடும்ப வருமானம் 10 லட்சத்திற்கும் குறைவாக உள்ளது என்று கூறியவர்கள்.

10 லட்சத்திற்கும் அதிகமாக வருமானம் உள்ளதாகக் கணக்கு கண்பித்துள்ள 1,843 எம்பி மற்றும் எம்எல்ஏ-க்கள் 1 கோடிக்கும் குறைவாகவே தங்களுக்குச் சொத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

 

10 லட்சத்திற்கும் அதிகமாகச் சொத்து உள்ள எம்பி மற்றும் எம்எல்ஏ-க்கள்

10 லட்சத்திற்கும் அதிகமாகச் சொத்து உள்ள எம்பி மற்றும் எம்எல்ஏ-க்கள்

4,848 ம்பி மற்றும் எம்எல்ஏ-க்களில் 25 சதவீதத்தினர் அதாவது 1,236 பேர் மட்டும் 10 லட்சத்திற்கும் அதிகமாக வருமானம் உள்ளதாகவும், 35 சதவீதத்தினர் 2.5 லட்சத்திற்கும் குறைவாக வருமானம் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

மக்களவை மற்றும் மாநிலங்களவை

மக்களவை மற்றும் மாநிலங்களவை

63 சதவீத மக்களவை மந்திரிகள் 10 லட்சத்திகும் குறைவான வருமானம் உள்ளதாகவும், 13 சதவீத மாநிலங்களவை மந்திரிகள் 10 லட்சத்திற்கும் குறைவான வருமானம் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

வருமானமே இல்லை என்று கூறிய நாடாளுமன்ற உறுப்பினர்கள்

வருமானமே இல்லை என்று கூறிய நாடாளுமன்ற உறுப்பினர்கள்

1676 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களுக்கு வருமானமே இல்லை என்று குறிப்பிட்டுள்ளனர். இதில் காங்கிரஸ் கட்சியில் இருந்து 266 நபர்களும், பாஜக கட்சியில் இருந்து 212 பேரும் உள்ளனர். தமிழகத்தில் என்று பார்த்தால் அதிமுகக் கட்சியில் மட்டும் 32 உறுப்பினர்கள் தங்களுக்கு வருமானம் இல்லை என்று குறிப்பிட்டு உள்ளனர்.

மாநிலங்கள் வாரையாகப் பார்த்தால்

மாநிலங்கள் வாரையாகப் பார்த்தால்

உத்தரப் பிரதேச மாநில நாடாளுமன்ற உறுப்பினர்கள் 111 நபர்கள், மற்றும் கேரளாவில் இருந்து 84 நபர்கள், மேற்கு வங்கத்தில் இருந்து 84 நபர்கள் என நீளும் பட்டியலில் தமிழகத்தில் இருந்து 33 உறுப்பினர்கள் தங்களுக்கு வருமானமே இல்லை என்று குறிப்பிட்டுள்ளனர்.

Rs 10 லட்சம் Rs 5-10 லட்சம் Rs 2.5-5..." data-gal-src="http:///img/600x100/2017/02/17-1487321683-24-1456306206-loksabha.jpg">
நாடாளுமன்ற உறுப்பினர்கள் சொத்து விவரங்களின் இணையுறவு

நாடாளுமன்ற உறுப்பினர்கள் சொத்து விவரங்களின் இணையுறவு

 

 "ஆண்டு குடும்ப வருமானம்
வீட்டு சொத்து மதிப்பு > Rs 10 லட்சம் Rs 5-10 லட்சம் Rs 2.5-5 லட்சம் < Rs 2.5 லட்சம்
<ரூ 1 கோடி 106 289 297 778
ரூ 1-2 கோடி 239 313 160 256
ரூ 2-5 கோடி 474 286 127 192
ரூ 5-10 கோடி 388 87 34 63
ரூ 10-30 கோடி 402 43 17 42
ரூ 30-50 கோடி 88 6 0 5
ரூ 50-100 கோடி 76 2 0 3
> 100 கோடி ரூபாய் 70 1 0 4
நாடாளுமன்ற உறுப்பினர்கள் வருமான விவரங்களின் இணையுறவு

நாடாளுமன்ற உறுப்பினர்கள் வருமான விவரங்களின் இணையுறவு

 

வீட்டு சொத்து மதிப்புஆண்டு குடும்ப வருமானம்    
  > Rs 10 crore Rs 1-10 crore Rs 50 lakh to Rs 1 crore Rs 20-50 lakh Rs 10-20 lakh
> Rs 100 crore 16 35 12 5 2
Rs 50-100 crore 2 44 11 9 10
Rs 30-50 crore 1 31 26 17 13
Rs 10-30 crore 3 64 72 159 104
Rs 5-10 crore 0 16 40 140 192
Rs 2-5 crore 0 6 23 138 307
Rs 1-2 crore 0 1 7 46 185
< Rs 1 crore 0 0 0 16 90

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

24% India’s MPs and MLAs Say They Don’t Need To Pay Tax Or Have No Income

24% India’s MPs and MLAs Say They Don’t Need To Pay Tax Or Have No Income
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X