7வது சம்பள கமிஷன்: தனியார் ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

விரைவில் தனியார் ஊழியர்களுக்கும் 10 லட்சம் ரூபாயாக இருக்கும் பணிக் கொடையை 20 லட்சம் ரூபாயாகப் பெற முடியும். பணிக் கொடை என்பது ஒரு நிறுவனத்தில் இருந்து ஐந்து வருடம் வேலை செய்த பிறகு ராஜிநாமா செய்யும் போது பெறக் கூடிய தொகையாகும்.

 

மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 வது சம்பள கமிஷனில் 10 லட்சமாக இருந்த கிராஜூவிட்டி தொகை 20 லட்சமாக உயர்த்தியதை அடுத்து தனியார் மற்றும் அரசு ஊழியர்கள் இடையே பாகுபாடு இருக்கக் கூடாது என்பதற்காக எடுக்கப்பட்ட முடிவு என்று கூறுகின்றனர்.

ஆலோசனைக் கூட்டம்

ஆலோசனைக் கூட்டம்

தொழிலார் அமைச்சகம் வியாழக்கிழமை தொழிற்சங்கங்கள், தொழிற்சாலைகள் மற்றும் மாநில அரசுகளை அழைத்து இது குறித்துக் கூட்டம் ஒன்றை நடத்தியது மத்திய அரசு, அதில் கிராஜூவிட்டி சட்டம் 1972-ல் திருத்தம் கொண்டு வர விவாதித்துள்ளது.

7வது சம்பள கமிஷன்

7வது சம்பள கமிஷன்

7வது சம்பள கமிஷன் அமலுக்கு வந்ததை அடுத்து கிராஜூவிட்டி தொகை 20 லட்சம் ரூபாயாக உள்ளது. முன்பு கிராஜூவிட்டி சட்டம், 1972 கொடுப்பனவைப் பின்பற்றி வந்ததாக ஊழியர்கள் அமைச்சகம் பிப்ரவரி 15-ம் தேதி கூறியது.

தனியார் ஊழியர்களின் கிராஜூவிட்டி

தனியார் ஊழியர்களின் கிராஜூவிட்டி

அப்படியானால் ஊதிய உயர்வு, பண வீக்கம் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு தனியார் ஊழியர்களின் கிராஜூவிட்டியும் திருத்தப்பட வேண்டும்.

 6வது பே கமிஷனின் போது திருத்தப்பட்ட விதி
 

6வது பே கமிஷனின் போது திருத்தப்பட்ட விதி

தற்போது இருக்கும் விதி முறைகளின் படி ஊழியர் ஒருவர் 5 வருடம் ஒரு நிறுவனத்தில் பணிபுரிகிறாகள் என்றால் 3.5 லட்சம் முதல் 10 லட்சம் வரை கிராஜூவிட்டி பெற இயலும். இந்த வீதி 2010-ம் ஆண்டுக் கொண்டு வரப்பட்ட 6வது பே கமிஷனின் போது திருத்தப்பட்ட விதியாகும்.

வரம்பில் சிறு மாற்றம் செய்ய வாய்ப்பு

வரம்பில் சிறு மாற்றம் செய்ய வாய்ப்பு

பங்குதாரர்களின் விவாதங்களைத் தொடர்ந்து இதற்கான விவரங்கள் மத்திய அமைச்சகத்திற்கு அனுப்பப்படும் பின்னர் இது குறித்துப் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படும். பாராளுமன்றத்தில் உள்ள சிக்கல்களைக் குறைக்க மத்திய அரசு கிராஜூவிட்டி வரம்பில் சிறு மாற்றம் செய்ய வாய்ப்புள்ளதாகவும் அது வருங்காலத்தின் வரும் அறிவிப்பில் தெரியவரும் என்றும் கூறுகின்றனர்.

தொழிற்சங்கங்களின் கோரிக்கை

தொழிற்சங்கங்களின் கோரிக்கை

தொழிற்சங்கங்கள் இரண்டு கூடுதல் கோரிக்கைகளை வைக்க இருப்பதாக ஆர்எஸ்எஸ் சார்ந்த பாரதிய மஸ்தூர் சங்கம் மண்டல அமைப்பு செயலாளர் பவன் குமார் தெரிவித்தார்.

முதல் கோரிக்கை

முதல் கோரிக்கை

தற்போது உள்ள கணக்கின் படி 15 நாட்களாக உள்ள கிராஜூவிட்டி கொடுப்பனவு 30 நாட்களாக உயர்த்த வேண்டும். இதனால் குறைந்த அளவு ஊதியம் பெறும் ஊழியர்களும் பயன்பெறுவார்கள்.

இரண்டாவது கோரிக்கை

இரண்டாவது கோரிக்கை

கிராஜூவிட்டி பெறுபவர்கள் குறைந்தது 5 வருடம் ஒரு நிறுவனத்தில் பணிபுரிய வேண்டும் என்பதை 3 வருடமாகக் குறைக்க வேண்டும் ஆகிய ரண்டு விதிகளைக் கோரிக்கையாக அளிக்க இருக்கின்றது பாரதிய மஸ்தூர் சங்கம். இப்போது இருக்கும் விதிப்படி பணிபுரிந்த வருடங்களில் இருந்தும் ஒவ்வொரு மாதமும் 15 நாட்கள் சம்பளத்தைக் கிராஜூவிட்டியாக அளிக்க வேண்டும்.

பிற தொழிற்சங்க கோரிக்கைகள்

பிற தொழிற்சங்க கோரிக்கைகள்

கிராஜூவிட்டி கொடுப்பனவு வரம்பு 2016, ஜனவரி 1-ம் தேதி முதலே அமலுக்குக் கொண்டு வர வேண்டும் என்று அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் செயலாளர் டி.எல்.சச்தேவ் கூறினார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Private sector gratuity to soar

Private sector gratuity to soar,Workers in private firms could see maximum payout double to Rs. 20 lakh
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X