'ரஷ்யா' உடனான ரூ.35,000 கோடி ஆயுத ஒப்பந்தம் முடங்கியது.. இந்திய வங்கிகளுக்கு 'செக்' வைத்த அமெரிக்கா!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய பொருளாதாரம் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வரும் தற்போதைய சூழ்நிலையில், நாட்டின் பாதுக்காப்பை உறுதிப்படுத்தவும், வலிமைப்படுத்தவும் ஆயுதங்களையும், போர் கருவிகளையும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்தது.

 

இதன்படி ரஷ்ய உடன் கூட்டணி சேர்ந்து இந்நாட்டிடம் இருந்து ஆயுதங்களை இறக்குமதி செய்வது மட்டுமல்லாமல் இந்தியாவில் இக்கூட்டணி ஆயுதங்களை உற்பத்தி செய்ய முடிவு செய்தது.

இவை அனைத்தும் அமெரிக்க விதித்துள்ள தடைகளால் தற்போது கேள்விக்குறியாகி நிற்கிறது.

இந்திய சட்டங்கள்

இந்திய சட்டங்கள்

இந்திய பாதுகாப்புத் துறை சார்ந்த எந்த ஆயதங்கள், உபகரணங்களை வாங்க வேண்டும் என்றாலும், வெளிநாட்டு நிறுவனங்கள் முதலில் மத்திய அரசால் தேர்வு செய்யப்படும் இந்திய வங்கிகள் இந்த நிறுவனத்திற்கு உத்திரவாதங்கள் அளிக்க வேண்டும். அதற்கான அனைத்துத் தகுதிகளையும் அந்த வெளிநாட்டு நிறுவனம் பெற்றிருக்க வேண்டும்.

அதன் பின்னரே ஏலத்திலோ அல்லது கொள்முதல் பேச்சுவார்த்தையிலோ இறங்க முடியும். இதுவே இந்திய அரசு பின்பற்றி வரும் விதிமுறைகள்.

அமெரிக்காவின் தலையீடு

அமெரிக்காவின் தலையீடு

ரஷ்யாவின் யுனைடெட் ஷிப்பில்டிங் கார்பரேஷன் மற்றும் அதன் கிளை நிறுவனங்கள் மீது அமெரிக்கா அரசு Specially Designated Nationals (SDN) தடைகளைக் கடந்த வருடம் விதித்திருந்தது. இந்தத் தடை மேலும் நீட்டிக்கப்பட்டதால் இந்திய வங்கிகளால் ரஷ்ய நிறுவனங்களுக்கு உத்திரவாதம் அளிக்க முடியவில்லை.

எஸ்டிஎன் தடை
 

எஸ்டிஎன் தடை

அமெரிக்கா, உலகில் எந்த நாடுகளில் இருக்கும் தனிநபர், நிறுவனங்கள் மீதும் இத்தடையை விதக்கலாம். இத்தடை விதிக்கப்பட்டால் அமெரிக்க நாட்டின் தனிநபரோ அல்லது நிறுவனமோ அவர்களிடம் வர்த்தகத் தொடர்பை வைத்துக்கொள்ளக் கூடாது. இதுவே எஸ்டிஎன் தடை.

இது அமெரிக்கா மற்றும் ரஷ்ய நாடுகள், நிறுவனங்கள் மத்தியில் இருக்கும் பிரச்சனை என்றாலும், மறைமுகமாக இந்தியா இதன் பாதிக்கப்படுகிறது.

மிகப்பெரிய ஆபத்து

மிகப்பெரிய ஆபத்து

எஸ்டிஎன் தடை விதிக்கப்பட்ட எந்த ஒரு நாட்டிடமோ, நிறுவனத்திடமோ, தனிநபரிடமோ இந்திய வங்கிகள் வர்த்தகம் செய்ய முடியாத நிலையில் தற்போது இந்தியா உள்ளது.

இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்குச் செய்யப்படும் அனைத்துப் பரிமாற்றங்களும் அமெரிக்க டாலரின் வாயிலாகச் செய்யப்படுவதால், அமெரிக்க அரசின் தடையைக் கருத்தில் கொள்ள வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது இந்திய வங்கிகள்.

தளர்வுகள்

தளர்வுகள்

மத்திய அரசு ரஷ்ய நிறுவனங்களுக்கு வங்கி உத்திரவாதங்கள் தேவையில்லை என்று சொன்னால் மட்டுமே இந்த ஒப்பந்தங்கள் நடைமுறைக்கு வரும்.

உத்திரவாதங்கள் இல்லாமல் இந்தியாவில் ஒரு நிறுவனம் வர்த்தகச் செய்தால், அது இந்தியா பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய பாதிப்பாக அமையும். அதுமட்டும் அல்லாமல் தற்போது இந்தியா ரஷ்யா செய்துள்ள ஒப்பந்தங்கள் அனைத்தும் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலானது.

35,000 கோடி ரூபாய்

35,000 கோடி ரூபாய்

இந்கியா - ரஷ்யா இணைப்பில் உருவாக உள்ள மிகப்பெரிய திட்டமென்றால் 5.5 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் போர்கப்பல் தயாரிக்கும் தளத்தை உருவாக்குவது தான். இந்த ரூபாய் மதிப்பில் இதன் மதிப்பு 35,000 கோடி ரூபாய்.

இத்திட்டம் நிறைவேறினால் இந்திய கடற்படை வரலாறு காணாத அளவிலும் அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளுக்கு இணையாக அளவிற்கு வளர்ச்சி அடையும்.

எஸ்-400 ஏவுகணை

எஸ்-400 ஏவுகணை

பாகிஸ்தான் எல்லை பகுதியில் வான்வெளி தாக்கல்களை முழுமையாகக் கட்டுப்பட்டுத்தப் பயன்படும் எஸ்-400 ஏவுகணைகளையும் வாங்க இந்தியா மற்றும் ரஷ்யா ஒப்பந்தம் செய்திருந்தது.

இதுவும் தற்போது தடைப்பட்டுள்ளது.

போர்கப்பல்

போர்கப்பல்

2016ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியா- ரஷ்யா நாடுகள் மத்தியில் 4 1135.6 ரக ஷில்த் போர்கப்பல் வாங்க ஒப்பந்தம் செய்தது. இதில் 2 இந்தியாவிலேயே தயாரிக்கவும் முடிவு செய்யப்பட்டு, தயாரிப்புக்கான அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளையும், தொழில்நுட்பத்தை ரஷ்யா அளிக்கவும் ஒப்புதல் அளித்தது.

இந்தத் திட்டமும் தற்போது தடைப்பட்டுள்ளது.

கேள்விக்குறி

கேள்விக்குறி

இந்தத் தடை குறித்து விவாதங்கள் இருநாடுகளிலும் நடந்து வருகிறது. அமெரிக்கா விதித்துள்ள தடையின் காரணமாக இந்தியாவின் பாதுகாப்பு மட்டும் அல்லாமல் ஆயுத உற்பத்தி சந்தையின் வர்த்தகமும் கேள்விக்குறியாகியுள்ளது.

யுனைடெட் ஷிப்பில்டிங் கார்பரேஷன்

யுனைடெட் ஷிப்பில்டிங் கார்பரேஷன்

ரஷ்ய அரசின் முழுக் கட்டுப்பாட்டில் இயங்கும் யுனைடெட் ஷிப்பில்டிங் கார்பரேஷன் கப்பல் கட்டுமானம், பழுது பார்த்தல், எனப் பல பணிகளில் இயங்கி வருகிறது.

மேலும் இந்நிறுவனத்தின் கீழ் 3 கிளை நிறுவனங்கும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

அனில் அம்பானி

அனில் அம்பானி

இந்தியாவில் போர்கப்பல் கட்டுமானத்திலும், அதனைச் சார்ந்த வர்த்தகத்தையும் செய்ய மிகப்பெரிய முதலீட்டில் இறங்கியுள்ள அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் டிபென்ஸ் நிறுவனத்திற்கு இது மிகப்பெரிய தடையாக விளங்குவது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India banks on roadblock to procure defence equipment from russia

India banks on roadblock to procure defence equipment from russia
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X