இஸ்ரோ வெற்றிக்கு பின்னால் இருக்கும் 'பெண்கள்' சக்தி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வழக்கமான மரபுகளை உடைத்து இந்தியாவில் தங்களைச் சுய-உருவாக்கம் (Self-Made) செய்து கொண்ட பெண்கள் எந்த வகையான படிப்பும் பாலினத்தைச் சார்ந்தது அல்ல என்பதை நமக்கு அடிக்கடி நினைவுபடுத்துகிறார்கள்.

சில வாரங்களுக்கு முன்பு ஐஎஸ்ஆர்ஓ(இஸ்ரோ), பிற நாட்டு மற்றும் தனியார் நிறுவனங்களின் செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு ஏவுதல் மூலம் எத்தனை கோடி வருமானம் பெறுகிறது என்று வியந்தோம்.

இந்நிலையில் ஐஎஸ்ஆர்ஓ(இஸ்ரோ) சமீபத்தில் 104 செயற்கைக் கோள்களை ஏவி ஒரே பயணத்தில் அனுப்பிய சாதனையில், பெண்களின் பங்கு உள்ளதா என்றால்.. கண்டிப்பாக உள்ளது. இந்த வகையில் இந்தியாவின் "ராக்கெட் பெண்கள்" எனக் கூறப்படும் 8 பெண்களையே தமிழ் குட்ரிட்டன்ஸ் தளம் கொண்டாட போகிறது.

இந்தக் கட்டுரையில் நாம் அறிவியலில் பெண்களின் சாதனைகளைக் கொண்டாடப் போகிறோம்.

ராக்கெட் பெண்கள்

ராக்கெட் பெண்கள்

104 செயற்கைக் கோள்களை ஓரே நேரத்தில் விண்வெளிக்கு ஏவிய உலகச் சாதனையைப் படைத்த பிறகு இந்தப் பெண்கள் வெளிச்சத்திற்கு வந்தார்கள். அவர்களால் செய்யப்பட்ட வியக்கத்தக்க இந்தச் செயல்களுக்கு இறுதியாகப் பாராட்டுதல்களைக் குவித்தது.

இருப்பினும் இவர்களில் சிலரை, புகழ்பெற்ற செவ்வாய் சுற்றுவழிப் பாதை ஆய்வுப் பணிகள் அல்லது மங்கள்யான் செயல் திட்டம் ஆகியவற்றின் மூலம் உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கலாம். வாருங்கள், இவர்கள் எல்லோரைப் பற்றியும் ஒரே நேரத்தில் தெரிந்து கொள்ளலாம்.

 

1.மினால் சம்பத்

1.மினால் சம்பத்

இரண்டு வருடங்களுக்கு மினால் சம்பத் இந்தியாவின் செவ்வாய் கிரக ஆய்வுப் பணியில் சிஸ்டம் இன்ஜினியராகப் பணியாற்றினார். ஜன்னல்கள் இல்லாத அறையில் ஒரு நாளுக்கு 18 மணி நேரம் அதிவேகமாக வேலை செய்து, இன்றைய தேதியில் நாட்டின் லட்சிய விண்வெளி செயல் திட்டத்திற்குத் தயாராக இருந்தார்.

"நாங்கள் மிகச்சிறந்த அணியைக் கொண்டிருந்தோம். அங்கே எங்களுக்கிடையில் சிறந்த புரிதல் இருந்ததால் காலக்கெடுவை எதிர்கொண்டு பணியை முடிக்க முடிந்தது" என்று அவர் கூறுகிறார்.

இந்தியாவின் மங்கள்யானை விண்வெளியில் செலுத்துவதற்கு முன்பு திருமதி. சம்பத் மற்றும் அவருடன் இருந்த அனைத்து ஆய்வாளர்களும் எந்த விதமான விடுமுறையும் எடுத்துக் கொள்வதிலிருந்து விலக்கப்பட்டார்கள், அதுவும் கிட்டத்தட்ட இரண்டு வருட காலத்திற்கு.

 

2. அனுராதா டி கே

2. அனுராதா டி கே

அவர் முதல் முறையாக நீல் ஆர்ம் ஸ்ட்ராங் நிலவில் நடப்பதைப் பார்த்த போது அவர் ஆச்சிர்யமடைந்தார் மற்றும் கவர்ந்திழுக்கப்பட்டார். அப்போது அவர் தான் ஒரு விண்வெளி ஆராய்ச்சியாளராக வேண்டுமென்று முடிவு செய்தார்.

அவருடைய இந்தப் பயணம், நாம் ஒருபோதும் நமக்குள் இருக்கும் குழந்தைத்தனத்தை மரணிக்க விடக்கூடாது மற்றும் நம் கனவுகள் ஏதுவாக இருந்தாலும் அதைத் தேடிக்கொண்டே இருக்க வேண்டும் என்பதற்கான ஒரு நிரூபணமாகும்.

இப்போது ஐ எஸ் ஆர் ஓ வில் ஒரு மூத்த பெண் அதிகாரியாக அனுராதா அங்கே வேலை செய்யும் அனைத்துப் பெண்களுக்கும் மற்றும் இந்தத் திட்டத்தில் பங்கெடுக்க விரும்பும் மற்றவர்களுக்கும் ஒரு ஊக்கமளிக்கும் தூண்டுதலாக மாறியுள்ளார்.

 

3. ரிது கரிதால்

3. ரிது கரிதால்

இரண்டு குழந்தைகளுக்குத் தாயான ரிது அவரது அறிவியல் மற்றும் விண்வெளி ஆய்வுப் பணிகளின் மீதான காதலுக்கு அவரது தனிப்பட்ட வாழ்க்கைத் தடையாக இருக்க ஒருபோதும் அனுமதிக்கவில்லை. ஒரு குழந்தையாக இருந்த போது அவர் மொட்டை மாடியில் தினமும் பல மணி நேரங்களைக் கழித்தார். சில நேரங்களில் புத்தகங்களைப் படித்துக் கொண்டும் சில நேரங்களில் நட்சத்திரங்களையும் படித்துக் கொண்டும் இருந்தார்.

"எனக்கு எப்பொழுதும் விண்வெளிக்கு அப்பாற்பட்ட இரகசியங்கள் மீது பேரார்வம் இருந்தது. நான் என்னவாக விரும்புகிறேன் என்பது அப்போதே தெரியும்" என்று அவர் கூறுகிறார்.

பின்னாளில் அவர் செவ்வாய் சுற்றுவழிப் பாதை ஆய்வுப் பணியின் துணை செயல்பாட்டின் இயக்குனர் ஆனார்.

 

4. மௌமிதா தத்தா

4. மௌமிதா தத்தா

ஒரு நல்ல நாளில், மௌமிதா கொல்கத்தாவிலுள்ள தனது சொந்த ஊரில் ஆனந்த பஜார் பத்திரிக்கா என்ற பத்திரிகையில் இந்தியாவின் முதல் நிலவு ஆய்வான சந்திராயன் 1 ஐ பற்றிப் படித்துக் கொண்டிருந்தபோது "இந்தத் திட்டத்தில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெற்ற மக்கள் எவ்வளவு அதிர்ஷ்டசாலிகள்!" என்று நினைத்தார்.

2015 க்கு வேகமாக முன்னேறி சென்று பார்த்தால், தத்தா இந்தியாவின் பாராட்டுதல்களைப் பெற்ற செவ்வாய் சுற்றுவழிப் பாதை ஆய்வுப் பணியில் பணியாற்றிய குழுவில் பங்கேற்று ஐ எஸ் ஆர் ஓ தலைமை ஆராய்ச்சியாளர்களில் ஒருவராக ஆனார்.

இன்று "மேக் இன் இந்தியா" முயற்சியில் ஒரு பங்கான இன்டி ஜீனஸ் ஆக்ராஸ் எனும் ஒளியியல் அறிவியலின் ஆய்வுக் குழுவைத் தலைமை ஏற்று நடத்திக் கொண்டிருக்கிறார்.

 

5. நந்தினி ஹரிநாத்

5. நந்தினி ஹரிநாத்

ஒரு துணை இயக்குனராக நந்தினி, புதிய 2000 ரூபாய் நோட்டுத் தாளில் செவ்வாய் சுற்றுவழி ஆய்வுப் பணி அச்சிடப்பட்டுள்ளதைப் பார்த்துப் பெருமையாக உணர்கிறார். ஐ எஸ் ஆர் ஓ அவரது முதல் வேலையாகும். மற்றும் அவர் கிட்டத்தட்ட சுமார் 20 ஆண்டுகள் இதற்காக வேலை செய்துள்ளார்.

குழந்தையாக இருந்தபோது நட்சத்திர அணி வரிசையின் மீது தூண்டுதல் ஏற்பட்டு ஈர்க்கப்பட்டார். விண்வெளி மீது இவ்வளவு கவனம் செலுத்துவார் என்பதை அவர் சிறிதளவும் அறிந்திருக்கவில்லை.

"நீங்கள் விண்வெளி ஆய்வுப் பணியை மேற்கொள்பவராக இருந்தால் நீங்கள் அறிவியல் கற்பனைத் திரைப்படங்களைப் பார்க்கத் தேவையில்லை, நாங்கள் தினசரி வாழ்க்கையில் அத்தகைய உணர்ச்சியைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்." - நந்தினி ஹரிநாத், ஆய்வுப் பணி வடிவமைப்பு செயல்திட்ட மேலாளர், துணை செயல்திட்ட இயக்குனர், செவ்வாய் சுற்றுவழிப் பாதை ஆய்வுப் பணி, ஐ எஸ் ஆர் ஓ.

 

6. க்ரிதி ஃபாட்ஜர்

6. க்ரிதி ஃபாட்ஜர்

க்ரிதி ஃபாட்ஜர் பெண்கள் வேலை செய்வதற்கு ஆதரவான இடமாக ஐ எஸ் ஆர் ஓ வைக் கருதுகிறார். - ஆனாலும் அங்கே நிறையப் பெண்கள் இல்லை.

செயற்கைக் கோள்கள் மற்றும் பல்வேறு இதர ஆய்வுப் பணிகளைத் தொடர்ச்சியாகக் கண்காணிக்கும் குழுவின் ஒரு பகுதியாக அவர் இருக்கிறார்.

 

7. N. வளர்மதி

7. N. வளர்மதி

RISAT -1 இந்தியாவின் முதல் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட மின்காந்த செயற்கைக் கோள் உருவரைவின் செயல்திட்ட இயக்குனராகத் தமிழ்நாடு அரசாங்கத்தால் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களைக் கௌரவிக்கும் விதமாக 2015 ல் தமிழ்நாடு அரசாங்கத்தால் நிறுவப்பட்ட அப்துல் கலாம் விருதை வாங்கிய முதல் நபர் வளர்மதி ஆவார்.

முன்பு 1984 ல் அவர் ஐ எஸ் ஆர் ஓ வில் இணைந்தார். பிறகு INSAT 2A, IRS, IC IRS ID, TES போன்ற பல விண்வெளி ஆய்வுப் பணிகளில் பங்கேற்று வருகிறார்.

TK அனுராதாவிற்குப் பிறகு, இந்தியாவின் பெருமைமிகு செயல்திட்டமான GSAT-12, 2011 ல் விண்வெளி ஆய்வுப் பணியைத் தலைமையேற்ற இந்திய விண்வெளி ஆய்வுக் கழகத்தின் (ISRO) இரண்டாவது பெண் ஆராய்ச்சியாளர் ஆவார்.

 

8. டெஸ்ஸி தாமஸ்

8. டெஸ்ஸி தாமஸ்

1963 ல் பிறந்த இவர் ஒரு பொறியாளர் ஆவார் மற்றும் தற்காப்பு ஆய்வு மற்றும் மேம்பாட்டு அமைப்பின் அக்னி-IV ஏவுகணை செயல் திட்டத்தின் இயக்குனர் ஆவார். இந்தியாவில் ஒரு ஏவுகணை செயல்திட்டத்தைத் தலைமையேற்று நடத்திய முதல் பெண் பொறியாளர் டெஸ்ஸி ஆவார். அவர் இந்தியாவின் "ஏவுகணைப் பெண்மணி" என்று அறியப்படுகிறார்.

அவர் DRDO விற்காக வேலை செய்கிறார். ISRO வில் அல்ல. நமக்கு ஊக்கமளிக்கும் இந்தப் பெண்களின் பணிகள் மேன்மேலும் தொடரட்டும்!

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

8 Superwomen behind the ISRO success

8 Superwomen behind the ISRO success
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X