எதையும் சாதிக்கலாம்.. திருபாய் அம்பானி-யின் வியப்பூட்டும் கதை..! #HDB #DhirubhaiAmbani

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: நாம் பேச்சு வழக்கில் பலரை நீ பெரிய அம்பானியா என்று கேட்டிருப்போம். காரணம் அம்பானி இந்திய சந்தையிலும் இந்திய மக்கள் மத்தியிலும் ஏற்படுத்திய தாக்கம் அப்படிப்பட்டது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் சரிவையும் உயர்வையும் பார்த்தாலே போதும் இந்திய பொருளாதாரத்தைக் கணித்து விடலாம் என கிண்டலடிப்பது உண்டு. இது மிகைப்படுதலாக இருந்தாலும் அது தான் உண்மை.

இந்தியா மட்டுமல்லாமல் உலகின் முன்னணி தொழிலதிபர்களும் வியந்துபார்க்கும் திருபாய் அம்பானி-க்கு இன்று (டிசம்பர் 28ஆம் தேதி) பிறந்த தினம். இவரின் பிரம்மிக்க வைக்கும் வளர்ச்சி பாதையை தான் நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.

ரிலையன்ஸின் துவக்கம்

ரிலையன்ஸின் துவக்கம்

ரிலையன்ஸின் தொடக்கக் கால வரலாற்றை மிக எளிதாக, குடிசையிலிருந்து கோபுரத்திற்கு வந்த கதையாகச் சுருக்கமாகச் சொல்லி விடலாம்.

திருபாய் அம்பானி ஏடன் மாகாணத்தில் ஒரு எரிவாயு நிலையத்தில் கணக்காளராக இருந்தார். அவர் புர்னா ஷெல்லில் (Burnah Shell) விற்பனை மேலாளராக ஆகி தனது வேலையின் பாதையை உயர்த்திக் கொண்டார்.

 

வர்த்தகக் கால் பதித்தார்..

வர்த்தகக் கால் பதித்தார்..

வேலையில் தனது உயர்த்திய பிறகு, அவர் காப்பீடு மற்றும் இறக்குமதி தொழில் களமிறங்கினார். இதன் படி மசாலாப் பொருட்கள் மற்றும் துணி மணிகளை ஏடன் நகருக்கு இறக்குமதி செய்து வர்த்தகச் சந்தையில் முதல் முறையாகக் கால் பதித்தார்.

தந்திரம்

தந்திரம்

ஜவுளி வியாபாரம் இலாபகரமாக இருந்ததால் இறக்குமதி வர்த்தகத்திற்கு ஏதுவாக இருக்கத் திருபாய் அவரது வியாபார பொருட்களுக்காக இந்தியாவின் அரசியல் தலைவர்களுடன் நல்லுறவை வளர்த்துக் கொள்வதில் நிபுணராக ஆனார்.

ஜவுளி உற்பத்தி

ஜவுளி உற்பத்தி

அன்று வரை இந்திய சந்தையில் வாங்கி வெளிநாடுகளிலும், உள்நாட்டிலும் விற்பனை செய்து வந்த திருபாய். 1966 இல் அவர் ஜவுளி தயாரிப்பில் நுழைந்து, தனது வாடிக்கையாளர்களை விட விரைவான மற்றும் மிகப்பெரிய அளவிலான வளர்ச்சியை அடைந்தார்.

இதன் மூலம் யாரும் எதிர்பார்க்காத வகையில் திருபாய் மிகவும் குறைந்த நேரத்தில் விரைவான வெற்றியை அனுபவித்தார்.

 

பொருளாதாரமும்.. வர்த்தகக் குடும்பங்களும்..

பொருளாதாரமும்.. வர்த்தகக் குடும்பங்களும்..

அந்த நேரத்தில் இந்தியாவின் பொருளாதாரத்தைச் சில சக்தி வாய்ந்த குழுமங்கள், குடும்பங்கள் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் இவர்களுக்கு அரசாங்கமும் மிகப்பெரிய அளவிலான ஆதரவை அளித்தது.

திருபாய் பங்குச்சந்தையில் துணிகர முதலீட்டைச் செய்து ஏதேனும் புரட்சிகரமான மாற்றத்தைக் கொண்டு வரத் திட்டமிட்டார். தொடக்கக் காலப் பொது வழங்கல்கள் (IPO) மூலம் 2.8 மில்லியன் பங்குகள் 1.8 மில்லியன் டாலர் அளவிலான முதலீட்டை ஈர்த்தார்.

 

இந்திய பங்குச்சந்தை

இந்திய பங்குச்சந்தை

இந்தியாவின் தற்போதைய பங்குச் சந்தை வளர்ச்சிக்கு மேடை அமைத்துக் கொடுத்த அத்தனை பெருமையும், ஒரு முதன்மை தொழில் துறை மையமாக மாநில மூலதனம் முதலீட்டை நம்பியிருந்த மரபை உடைத்தது ரிலையன்ஸ் நிறுவனத்தையே சேரும்.

ஜாம்பவான்கள் அறிமுகம்

ஜாம்பவான்கள் அறிமுகம்

1980 ஆம் ஆண்டு அம்பானியின் இரண்டு மகன்களான முகேஷ் மற்றும் அனில் அமெரிக்காவில் அவர்களது கல்வியை முடித்துப் பின் தொடர்ச்சியாகக் குடும்பத் தொழிலுக்கு வருகை தந்ததைக் குறிப்பிடுகிறது.

அவர்களது நிறுவனத்தை வெற்றியை நோக்கிய பாதையை வகுக்கத் துவங்கினர். அதுவரை ரிலையன்ஸ் குழுமம் ஜவுளி தயாரிப்பில் மட்டுமே இருந்த நிலையில் பெட்ரோலிய வேதிப் பொருட்கள் உற்பத்தியை நோக்கி நகர்த்தும் பணியில் முக்கியப் பங்கை முகேஷ் மற்றும் அனில் அம்பானி வகித்தனர்.

 

எண்ணெய் துறை

எண்ணெய் துறை

இந்தியாவில் எண்ணெய் துறை மாநில மற்றும் மத்திய அரசுகளின் பிடியில் மட்டுமே இருந்த நிலையில் 1997ல் இத்துறையை இத்தொழில் துறையைத் தாராளமயமாக்க ரிலையன்ஸ் களமிறங்கியது.

இதற்காக ரிலையன்ஸ் 6 பில்லியன் அமெரிக்க டாலர்களைச் செலவழித்து உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் நவீன எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் ஒன்றான குஜராத் ஜாம் நகரிலுள்ள சுத்திகரிப்பு நிலையத்தைக் கட்டமைக்க நடவடிக்கைகள் எடுக்கத் தயாராக இருந்தது.

 

திருபாய் அம்பானியின் மறைவு

திருபாய் அம்பானியின் மறைவு

1986 ல் ஏற்பட்ட ஒரு பக்கவாதத்தைத் தொடர்ந்து திருபாய் அம்பானியின் உடல் ஒரு பகுதி செயல் இழந்தது. அவரது இரு மகன்கள் ரிலையன்ஸ் நிறுவனத்தில் தினசரி நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

ஆனால் அவர் 2002 ல் மீண்டும் ஒரு பெருத்த பக்கவாதம் ஏற்பட்டு இறக்கும் வரை நிறுவனத்தின் தலைவராகவும் மற்றும் நிறுவனத்தைப் புதிய பாதையில் வழி காட்டுபவராகவும் இருந்தார்.

 

முகேஷ் அம்பானி

முகேஷ் அம்பானி

ரிலையன்ஸ் நிறுவனம் யார் பெயரிலும் உயில் எழுதப்படாமல் விடப்பட்டதால் சகோதரர்கள் மத்தியில் அதிகாரப் போட்டி உடனடியாகத் தொடங்கியது.

இந்நிலையில் மூத்த மகன் முகேஷ் அம்பானி அன்றைய ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலைவராகவும் மற்றும் நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டார். அனில் துணை தலைவர் ஆனார்.

அதே வருடத்தில், முகேஷ் தனது சகோதரனைக் குழுமத்திலிருந்து வெளியேற்ற முயற்சித்ததாகக் கூறப்படுகிறது.

 

மாறுபட்ட கருத்து

மாறுபட்ட கருத்து

முகேஷ் மற்றும் அனில் மத்தியில் மிகப்பெரிய வேற்றுமை இருப்பதாகப் பேசப்பட்டாலும், நிறுவனத்தில் சகோதரர்கள் தொழிலில் ஒருவரை ஒருவர் நன்றாகப் பாராட்டிக் கொள்கின்றனர். குணநலனின் அடிப்படையில் அவர்களுக்குள் பெரிய வித்தியாசம் இல்லை என்று அவர்களுக்கு நெருக்கமான சிலர் கூறுகின்றனர்.

முகேஷ் மற்றும் அனில் அம்பானி

முகேஷ் மற்றும் அனில் அம்பானி

முகேஷ் அடக்கமானவர், தீவிரமானவர், விவரங்களைக் குறித்து அற்புதமான பார்வையைக் கொண்ட பணியில் தீவிரத் தன்மையுடையவர் என்று அறியப்படுகிறார். அவர் ஜாம் நகர் சுத்திகரிப்பு நிலையம் அத்துடன் ரிலையன்ஸ் தொலைத் தொடர்பு கட்டுமானத்தைத் தொலை நோக்குப் பார்வையுடன் திட்டமிட்டு அமைத்தார்.

மறுபுறம் அனில் மிகப் பிரகாசமான பண்பட்ட தனிப்பட்ட மனிதராவார். இந்திய மூலதன பங்கு சந்தையில் இவரது கண்டுபிடிப்புகள் மற்றும் நிறுவனத்தின் முக மதிப்பீட்டு நிலை அன்னிய பங்கு சந்தை முதலீட்டில் ரிலையன்ஸின் மதிப்பை உயர்த்தவதில் உதவியாக இருந்தது.

எது எப்படி இருப்பினும் இந்த உயர்ந்த ஆடம்பர வாழ்க்கை முறையே இந்த இருவருக்கிடையில் ஏற்பட்ட உராய்வின் தொடக்கக் காரணமாக நம்பப்படுகிறது.

 

வாரிசுத் தகராறுகள்

வாரிசுத் தகராறுகள்

மூடிய கதவுகளுக்குள் இருந்த இரு சகோதரர்களுக்கு இடையே இருந்த ரத்தம் கொதிப்படைய செய்யும் மோசமான வாரிசுத் தகராறுகள் விரைவில் 2004 ல் CNBC தொலைக்காட்சிக்கு முகேஷ் அளித்த ஒரு பேட்டியில் "ஆமாம், முதலாளித்துவப் பிரச்சினை எங்களுக்குள் இருக்கிறது" என்று விளக்கிய போது பொதுவெளிக்கு வந்தது.

இவையெல்லாம் தனிப்பட்ட அதிகாரத்தின் கீழ் இருந்தது ஆனால் இதுவரை ரிலையன்ஸ் மிக மிக உறுதியான தொழில் துறை நிறுவனமாகக் கருதப்படுகிறது.

 

சாம்ராஜியத்தின் பிளவு

சாம்ராஜியத்தின் பிளவு

ரிலையன்ஸின் குழுமத்தின் நவீன வரலாறு அதன் தொடர்ச்சியான வெற்றியைக் கொண்டு வரையறுக்கப்படுகிறது என்றாலும் திருபாய் அம்பானி அவர்களின் மகன்களான முகேஷ் மற்றும் அனில், அவர்களுக்கு இடையில் ஏற்பட்ட ஒரு கசப்பான வம்சாவளி சண்டை ஒரு பிளவை ஏற்படுத்தி அது நிறுவனத்தையும் பாதிக்கும் வகையில் நீட்டிக்கப்பட்டு இறுதியில் நிறுவனத்தின் இயக்கங்கள் இரண்டாகப் பிரிவடைந்தது.

இந்த முடிவின் தாக்கம் இந்தியாவின் வர்த்தகச் சந்தை மட்டும் அல்லாமல் உலகம் சந்தைகளையும் மிகப்பெரிய அளவில் தாக்கியது.

 

கோகிலா பென்

கோகிலா பென்

பேட்டி, செய்திகளைத் தொடர்ந்து அவர்களது தாயார் திருமதி. கோகிலா பென் தலையிட்டு ரிலையன்ஸ் தொழில் துறையைச் சகோதரர்களுக்குப் பிரித்துக் கொடுக்க ஏற்பாடு செய்தார்.

இறுதியில் முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் IPCL ஐ பெற்றார். அதே சமயம் அனில் ரிலையன்ஸ் தகவல் தொடர்பு, ரிலையன்ஸ் எனர்ஜி, ரிலையன்ஸ் கேபிடல் ஆகியவற்றைப் பெற்றார். இருப்பினும் இந்த முடிவானது தொழிலை விடக் குடும்பத்திற்குப் பொருத்தமானது என்று பங்குதாரர்கள் பாராட்டினர்.

 

ஒரு சங்கடமான உடன்படிக்கை

ஒரு சங்கடமான உடன்படிக்கை

இந்தச் சொத்துப் பிரித்தல் அவர்களது பொது வாரிசுச் சண்டைக்கு இறுதி முடிவாக நீண்ட காலம் செயல்படவில்லை. பல்வேறு வழக்குகள் மற்றும் குற்றச்சாட்டுகள் பின் தொடர்ந்த வருடங்களில் சகோதரர்களுக்கிடையில் முன்னும் பின்னுமாக நிகழ்ந்து கொண்டே இருந்தது.

உறுதியான நிலைப்பாடு..

உறுதியான நிலைப்பாடு..

இதனைத் தாண்டியே தற்போது ரிலையன்ஸ் குழும நிறுவனங்கள் இன்று உலகம் நாடுகள் வியந்து பார்க்கும் அளவிற்கும் வளர்த்து மிகப்பெரிய வர்த்தகச் சாம்பாஜியமாக வளர்ந்து நிற்கிறது.

ஆயிரம் இருந்தால் இந்தச் சாம்ராஜியத்தின் துவக்கம் பற்றித் தெரிந்துகொள்ள யாருக்குத்தான் ஆர்வம் இருக்காது வாங்க பார்ப்போம்.

 

நியூயார்க் டைம்ஸ்

நியூயார்க் டைம்ஸ்

முகேஷ் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் தன்னைப் பற்றிக் குறிப்பிட்டிருந்த சில விஷயங்களுக்காக அனில், முகேஷ் மீது அமெரிக்க டாலர் 2.12 பில்லியன் அவதூறு வழக்கைத் தொடர்ந்ததும் இதில் அடங்கும்.

மேலும் செய்தி குறிப்புகளை ஆராய்ந்ததில் அனில் இந்தியாவின் பணக்கார மற்றும் சக்திவாய்ந்த நிறுவனத்தைப் பற்றித் தகவல்களைச் சேகரிக்க இரு துப்பறியும் நிறுவனத்தை அமர்த்தியிருந்தார் என்றும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கிடைத்தது.

 

அடுக்கடுக்கான குற்றச்சாட்டு..

அடுக்கடுக்கான குற்றச்சாட்டு..

2009ல் அனில் அவரது சகோதரரின் நிறுவனமே இந்தியாவின் மின்தடைக்குக் காரணம் என்று குற்றம் சாட்டினார். அதன் பின்னர் அனில், இந்திய அரசாங்கம் முகேஷின் ரிலையன்ஸ் நிறுவனத்திற்குப் பக்கபலமாக இருந்து சமையல் எரிவாயுவின் விலையேற்றத்துக்குக் காரணமாக இருக்கின்றனர் என்று குற்றம் சாட்டி இந்தியாவின் மிகப்பெரிய செய்தித்தாளான டைம்ஸ் ஆப் இந்தியா மற்றும் இதர 32 செய்தித்தாள்களில் தினமும் பக்கங்களை நிறைத்தார்.

மத்திய அரசின் தலையீடு

மத்திய அரசின் தலையீடு

ஒரு புள்ளியில், சண்டை மிகவும் உக்கிரமடைந்ததால் இந்தியாவின் நிதியமைச்சர், இந்தச் சகோதரர்களை அவர்களது சச்சரவை தனிப்பட்ட முறையில் தீர்த்துக் கொள்ளச் சொல்லியும் அதனால் பங்கு சந்தைப் பாதிப்படையாமல் இருக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.

மீண்டும் கோகிலா பென்

மீண்டும் கோகிலா பென்

2010ல் குடும்பத் தலைவி திருமதி. கோகிலா பென் மீண்டும் தலையிட்டு முதலில் செய்யப்பட்ட ஒப்பந்தத்திற்கு மாற்றாக மற்றுமொரு அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்தினார்.

பின்னர் அந்த வருடத்தில் அனில் வாரிசு சண்டைத் தீர்க்கப்பட்டுவிட்டது என்று கூறினார் மற்றும் முகேஷுக்கு எதிரான அவதூறுவழக்கைத் திரும்பப் பெற்றார். இருந்தாலும், அனிலின் ரிலையன்ஸ் மூலதனம் ஏற்கனவே பங்குச் சந்தையில் மிகப் பெரிய காலடி சுவட்டைப் பதித்துள்ள நிலையில், நிதிப் பிரிவில் முகேஷின் வரவு இரண்டு சகோதரர்களுக்குள் மீண்டும் மோதல்கள் ஏற்படுத்தும் என்று வதந்திகள் தீப்பற்றி எரிந்தன.

 

காலம் பதில் சொல்லும்

காலம் பதில் சொல்லும்

இரண்டு சகோதரர்களுக்குள் சச்சரவு நல்லமுறையில் தீர்கப்பட்டுவிட்டதா அல்லது அவர்களது பார்வை இன்னும் புயலிலேயே சிக்கியுள்ளதா என்பதற்குக் காலம் தான் பதில் சொல்லும்.

ஆயினும் சில மாதங்களுக்கு முன்பு ஜியோ அறிமுகத்திற்கு முன், அனில் அம்பானி ஜியோவிற்குப் போட்டியாக ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் வாயிலாக ஏர்செல் நிறுவனத்தை வாங்கிப் பேச்சுவார்த்தை நடத்தினால். இதன் பின் சில நாட்களில் டெலிகாம் துறையில் இருவரும் சேர்ந்தால் மிகவும் மிகிழ்ச்சி எனவும் அனில் ஒரு பேட்டியில் தெரிவித்தார். இதற்கு முகேஷ் வரவேற்பு அளித்து முக்கியமானது.

 

1966ல் முதல் அடி..

1966ல் முதல் அடி..

திரு. திருபாய் H.அம்பானி அவர்களால் 1966 ல் நிறுவப்பட்டு இந்தியா சுதந்திரம் அடைந்தது முதற்கொண்டு நாட்டின் ஒற்றை மாபெரும் பெருநிறுவன வெற்றிக் கதையாக வளர்ந்துள்ளது.

அதன் தொடக்கக் கால ஆடை தொழில் முதல் பல தொகுப்புத் தொழில்கள் வரை தற்போது பெட்ரோலிய வேதிப் பொருட்களும் சேர்க்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் ஆண்டொன்றுக்கு அமெரிக்க டாலர்களில் 44 பில்லியன் (2.96 லட்சம் கோடி) அல்லது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3% வருவாயை உருவாக்குகிறது.

 

இந்திய பொருளாதாரமும்.. ரிலையன்ஸ் குழுமமும்..

இந்திய பொருளாதாரமும்.. ரிலையன்ஸ் குழுமமும்..

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்; இந்தியாவின் மாபெரும் நிறுவனம் மற்றும் இந்தியாவின் உயர்ந்தப் பொருளாதாரம் ஆகியவற்றின் நிலைப்புத் தன்மை இந்தச் சக்தி வாய்ந்த குடும்பத்தின் சமநிலையைச் சார்ந்துள்ளது.

இப்படித் தான் ரிலையன்ஸ் சாம்ராஜியம் உருவானது. இதில் சில கருப்புப் பக்கங்கள் இருந்தாலும் புதிதாகத் தொழில் துவங்க நினைக்கும் ஒவ்வொருவரும் இந்த நிறுவனம் உருவான கதை ஒரு பாடம்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Reliance Industries: The Unbeatable business empire

Reliance Industries: The Unbeatable business empire
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X