பிஜேபி-யின் வெற்றியும் தோல்வியும், இந்திய சந்தையை எப்படியெல்லாம் பாதிக்கும்..!

பிஜேபி-யின் வெற்றியும் தோல்வியும், இந்திய சந்தையை எப்படியெல்லாம் பாதிக்கும்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: இந்தியாவின் முக்கியமான 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், உள்நாட்டு மற்றும் வெளிநாடு முதலீட்டாளர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பான தேர்தலுக்கான எக்ஸிட் போல்ஸ் முடிவுகள் வியாழக்கிழமை மாலை வெளியானது.

 

இந்த எக்ஸிட் போல்ஸ் முடிவுகள் பிஜேபியின் வெற்றி மற்றும் தோல்வியைத் தீர்மானிக்கும் ஒன்றாக இருக்கும் பட்சத்தில் இந்த முடிவுகள் இந்திய சந்தையை எப்படியெல்லாம் பாதிக்கும்..?

3 மாநில முன்னிலை..

3 மாநில முன்னிலை..

பஞ்சாப், மணிப்பூர், கோவா, உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களில் நடந்த தேர்தல்களில் 3 மாநிலங்களில் மோடி தலைமையிலான பிஜேபி ஆதிக்கம் செலுத்தும் என எக்ஸிட் போல்ஸ் முடிவுகள் தெரிவிக்கிறது.

முக்கியமான தேர்தல்..

முக்கியமான தேர்தல்..

மத்திய அரசின் பணமதிப்பிழப்பு, வங்கி சேவை கட்டணங்கள் உயர்வு, பணமதிப்பிழப்பால் ஏற்பட்ட வர்த்தகம் மற்றும் பொருளாதாரச் சரிவுகளுக்குப் பின் நடந்திருக்கும் தேர்தல் இது.

இந்தியா மற்றும் உலகச் சந்தைகள்..
 

இந்தியா மற்றும் உலகச் சந்தைகள்..

இந்த 5 மாநில தேர்தலின் முடிவுகள் மோடியின் அடுத்த 5 வருடத்தை ஆட்சியைப் பிடிக்குமா என்பதற்கான விடை என்பதால். இந்திய சந்தையையும் தாண்டி இந்தத் தேர்தல் உலகச் சந்தைகளிலும் முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் மோடி தலைமையிலான பிஜேபி கட்சியின் வெற்றியும் தோல்வியும் இந்திய பங்குச்சந்தையை எப்படி எல்லாம் பாதிக்கும் என்பதையே இப்போதும் பார்க்கப்போகிறோம்.

 

பெரிய மாற்றம் ஏதுமில்லை..

பெரிய மாற்றம் ஏதுமில்லை..

வியாழக்கிழமை வெளியான எக்ஸிட் போல்ஸ் முடிவுகள் பெரும்பாலானவை ஆளும் கட்சியான பிஜேபி-க்கு மிகவும் சாதகமாக இருக்கிறது.

பொதுவாக எக்ஸிட் போல்ஸ் முடிவுகள் பங்குச்சந்தை வர்த்தகத்தில் மிகப்பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தும், ஆனால் தற்போது பிஜேபி கட்சிக்கு சாதகமான வந்தபோதிலும் வெள்ளிக்கிழமை வர்த்தகம் மந்தமாக உள்ளது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சில்லறை முதலீட்டாளர்களைக் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

 

உத்திர பிரதேசம்

உத்திர பிரதேசம்

இந்தியாவில் மிகப்பெரிய மாநிலங்களில் ஒன்றான உத்திர பிரதேசத மாநில தேர்தலின் 5வது மற்றும் 6வது கட்ட வாக்குப்பதிவின் போது, பிஜேபி கட்சியின் வெற்றிவாய்ப்புகள் சிறப்பாக இருக்கிறது என்பது குறித்த தகவல்கள் வெளியான காரணத்தால் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு பல மாதங்களுக்குப் பின் 29,000 புள்ளிகளை எட்டியது நாம் மறந்திருக்க முடியாது.

சிங்கப்பூர்

சிங்கப்பூர்

வெள்ளிக்கிழமை வர்த்தகத் துவக்கத்தில் சிங்கப்பூர் வர்த்தகக் குறியீடான SGX Nifty குறியீடும் இன்று மந்தமான வர்த்தகத்தைப் பதிவு செய்து முதலீட்டாளர்களும் லாபத்தை அதிகளவில் குறைத்தது.

நிஃப்டி

நிஃப்டி

இந்த 5 மாநில தேர்தலில் பிஜேபி வெற்றியும், தோல்வியும் நிஃப்டி குறியீட்டை நேரடியாகவும் மிகப்பெரிய அளவிலும் பாதிக்கும். இதன் படி பிரதமர் மோடி தலைமையிலான பிஜேபி கட்சியின் வெற்றி நிஃப்டி குறியீட்டை 200 புள்ளிகள் வரை உயர்த்தும். அதேபோல் அதன் தோல்வி நிஃப்டி குறியீட்டை மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளவும் வாய்ப்புகள் உள்ளது.

அன்னிய நிறுவன முதலீடுகள்

அன்னிய நிறுவன முதலீடுகள்

உத்திர பரிதேச மாநிலத்தில் பிஜேபி கட்சிக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகளவில் இருப்பது தெரிய வந்துள்ள நிலையில், இந்தியாவில் அன்னிய நிறுவன முதலீடுகளின் அளவு மிகப்பெரிய அளவில் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இம்மாநிலத்தின் வெற்றி பிஜேபியின் அடுத்த 5 வருட ஆட்சியின் அடித்தளம் என்பதால், முதலீடுகளுக்கு மிகப்பெரிய வாய்ப்புகள் உள்ளது.

 

பஞ்சாப்

பஞ்சாப்

வியாழக்கிழமை எக்ஸிட் போல்ஸ் முடிவுகளின் படி பாரதிய ஜனதா கட்சி உத்திர பிரதேசம், உத்தராகண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் வெற்றி வாய்ப்புகள் அதிகளவில் இருக்கும் நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் தோல்வியைச் சந்திக்கும் என எக்ஸிட் போல்ஸ் முடிவுகள் கூறுகிறது.

இம்மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியின் ஆதிக்கம் மிகப்பெரிய அளவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

அன்னிய முதலீடு

அன்னிய முதலீடு

வியாழக்கிழமை வர்த்தகத்தில் அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் (FII) 488 கோடி ரூபாய்க்கு இந்திய பங்குகளில் முதலீடு செய்துள்ளனர், அதேபோல் உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் 10 கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்புடை பங்களை நேற்று விற்பனை செய்துள்ளனர்.

மிக முக்கியமானது..

மிக முக்கியமானது..

எனவே பிஜேபி-யின் வெற்றி இந்திய பங்குச்சந்தையின் வர்த்தகத்தில் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. மேலும் இதன் தோல்வி மக்கள் மத்தியில் தற்போது ஏற்பட்டுள்ள கசப்பான அனுபவங்களின் பிரதிபலிப்பாக இருக்கும்.

வெற்றியா..? தோல்வியா..? என்பதை பொறுத்திருந்து பார்போம்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Exit Polls effect: how does Indian market affects modi's victory and loses

Exit Polls effect: how does Indian market affects modi's victory and loses
Story first published: Friday, March 10, 2017, 14:17 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X