ஜிபிஎப் பணத்தை திரும்பப் பெற புதிய விதிகள்: மத்திய அரசு ஊழியர்களுக்கு கொண்டாட்டம்..!

ஜிபிஎப் பணத்தை திரும்பப் பெற புதிய விதிகள்: மத்திய அரசு ஊழியர்களுக்கு கொண்டாட்டம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஜிபிஎப் கணக்கில் இருந்து பணம் எடுக்க இருக்கும் விதிகளில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள மாற்றங்களால் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இப்போது பொது வருங்கால வைப்பு நிதி எனப்படும் ஜிபிஎப் திட்டத்தில் இருந்து மத்திய அரசு ஊழியர்கள் விண்ணப்பித்த 15 நட்களில் பணத்தை பெற முடியும்.

10 வருடத்தில் ஜிபிஎப் பணத்தை எடுக்கலாம்

10 வருடத்தில் ஜிபிஎப் பணத்தை எடுக்கலாம்

குறிப்பிட்ட செலவுகளுக்குக்காண ஜிபிஎப் பணத்தை அரசு ஊழியர்கள் முன்பு 15 வருடத்திற்குப் பிறகுதான் பெற முடியும் என்ற விதி இருந்து வந்தது. இப்போது அதில் திருத்தம் கொண்டுவரப்பட்டு 10 வருடமாகக் குறைக்கப்பட்டது.

என்ன காரணங்களுக்காக ஜிபிஎப் பணத்தை திரும்பப் பெற முடியும்?

என்ன காரணங்களுக்காக ஜிபிஎப் பணத்தை திரும்பப் பெற முடியும்?

ஜிபிஎப் கணக்கில் உள்ள பணத்தை ஊழியர்கள் தங்களது பிள்ளைகள் கல்வி, தன்னுடைய சொந்த திருமணம், குடும்ப உறுப்பினர்கள் ஏற்படும் பெரிய மருத்துவ செலவு, சொத்து வாங்குவது, கார் வாங்குவது, வங்கிக் கடனை திருப்பிச் செலுத்த போன்ற குறிப்பிட்ட காரணங்களுக்காக திரும்பப் பெற முடியும்.

எவ்வளவு ஜிபிஎப் தொகையை இடையில் எடுக்கும் போது பெற முடியும்?
 

எவ்வளவு ஜிபிஎப் தொகையை இடையில் எடுக்கும் போது பெற முடியும்?

ஜிபிஎப் பணத்தை திரும்பப் பெறும் போது 12 மாதம் சம்பளம் அல்லது ஜிபிஎப் கணக்கில் உள்ள தொகையில் 75 சதவீதம் இதில் எது அதிகமோ அது வரை பணத்தை திரும்பப் பெற முடியும்.

மருத்துவச் செலவுகளுக்கு பணத்தை எடுக்கும் போது 90 சதவீதம் வரை திரும்பப் பெற முடியும்.

 

சொத்து வாங்கும் போது ஜிபிஎப் தொகை எவ்வளவு எடுக்க முடியும்?

சொத்து வாங்கும் போது ஜிபிஎப் தொகை எவ்வளவு எடுக்க முடியும்?

சொத்து வாங்கும் போது நான்கில் மூன்று பங்கு அல்லது மொத்தம் உள்ள ஜிபிஎப் தொகையில் 75 சதவீதம் இதில் எது குறைவோ அவ்வளவு தொகை வரை பெற முடியும். இந்த முறையில் வீடு வாங்க, வீட்டின் மீதான கடனை அடைக்க, வீடு கட்டுவதற்கான இடம் வாங்க, வீடு கட்ட, வீட்டை புதுப்பிக்கா போன்ற காரணங்களுக்கு எல்லாம் ஜிபிஎப் தொகையை பெற முடியும்.

வாகனம் வாங்கும் போது

வாகனம் வாங்கும் போது

வாகனங்கள் வாங்க மத்திய அரசு ஊழியர்களால் 75 சதவீதம் வரை ஜிபிஎப் கணக்கில் உள்ள தொகையை பெற முடியும். வாகனக்களுக்காக பணத்தை திரும்பப் பெறும் போது 5 சதவீதம் வரை ஜிபிஎப் கணக்கில் உள்ள தொகை அல்லது வாகனத்தின் விலையில் 75 சதவீதம் இதில் எது குறைவோ அந்தத் தொகையை விண்ணப்பித்துப் பெற முடியும்.

கரணம் இல்லாமல் 90 சதவீத தொகையை எடுக்க முடியும் என்று தெரியுமா?

கரணம் இல்லாமல் 90 சதவீத தொகையை எடுக்க முடியும் என்று தெரியுமா?

எந்த ஒரு காரணமும் இல்லாமல் பணியில் இருந்து ஓய்வு பெறுவதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்பு 90 சதவீதம் ஜிபிஎப் பணத்தையும் திரும்பப் பெற முடியும்.

ஆவணங்கள்

ஆவணங்கள்

ஊழியர்கள் தங்கள் ஜிபிஎப் கணக்கில் இருந்து பணத்தை பெற எந்த ஒரு ஆவணங்களையும் சமர்ப்பிக்க தேவையில்லை. எதற்காக ஜிபிஎப் பணத்தை எடுக்கிறோம் என்று உறுதி ஆவணம் அளித்தால் போதும்.

7 நாட்களில் ஜிபிஎப் தொகை

7 நாட்களில் ஜிபிஎப் தொகை

மருத்துவ செலவுக்காக எடுக்கும் போது ஜிபிஎப் தொகை எடுப்பதற்கான கோரிக்கை 7 நாட்களில் துரிதமாக செயல்படுத்தப்பட்டு பணம் அளிக்கப்படும்.

அறிவிப்பு எப்போது வந்தது

அறிவிப்பு எப்போது வந்தது

ஜிபிஎப் திட்டத்தில் ஏற்பட்டு இருக்கும் இந்த மாற்றங்களுக்கான அறிவிப்பு 2017 மார்ச் 7-ம் தேதி மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

New Rules For General Provident Fund (GPF) Withdrawal: 10 Updates

New Rules For General Provident Fund (GPF) Withdrawal: 10 Updates
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X