யூபிஐ உடன் டிஜிட்டல் பண பரிவர்த்தனை சேவையில் இறங்கும் ‘வாட்ஸ் ஆப்’..!

யூபிஐ உடன் டிஜிட்டல் பண பரிவர்த்தனை சேவையில் இறங்கும் ‘வாட்ஸ் ஆப்’..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தகவல்கள் பரிமாற்றிக் கொள்ளும் வாட்ஸ்ஆப் செயலியில் விரைவில் பணப் பரிவர்த்தனை செய்வதற்கான யூபிஐ சேவையையும் அளிக்க இருக்கின்றது.

வாட்ஸ் ஆப் நிறுவனத்திற்கு இது வரை இந்தியாவில் எந்த அலுவலகமும் இல்லை, ஆனால் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையைப் பிரபலப்படுத்தும் நோக்கத்தில் அதிகம் பிரபலம் அடையாத யூபிஐ பரிவர்த்தனை சேவையையும் அளிக்க இருக்கின்றது.

இந்தியாவில் மிகவும் பிரபலமான தகவல் பரிமாறிக்கொள்ளும் செயலி என்றால் அது வாட்ஸ் ஆப் தான். அதற்குச் சிறந்த உதாரணம் தான் பிப்ரவரி மாதம் 200 மில்லியன் பயனர்களை வாட்ஸ் ஆப் அடைந்தது என்று கூறலாம்.

உலகம் முழுவதும் 1.2 பில்லியன் வாடிக்கையாளர்கள் வாட்ஸ்ஆப் செயலியை தொடர்ந்து பயன்படுத்துகின்றனர்.

வாட்ஸ்ஆப் ஏன் வால்லெட் சேவை அளிக்கவில்லை

வாட்ஸ்ஆப் ஏன் வால்லெட் சேவை அளிக்கவில்லை

அனைவருக்கும் முகவும் பிரபலமான டிஜிட்டல் வாலெட் சேவையை ஏன் துவங்கவில்லை என்று கேட்கின்றனர், முதலில் வாட்ஸ்ஆப் அந்த முடிவில் தான் இருந்தது ஆனால் மார்ச் 20-ம் தேதி ஆர்பிஐ அறிவித்த சில விதிகள் சிக்கலாக உள்ளதால் அந்தத் திட்டத்தைக் கைவிட்டு விட்டதாகக் கென் தெரிவித்துள்ளார்.

பேடிஎம்

பேடிஎம்

இந்திய டிஜிட்டல் வாலெட் சேவையில் கொடிகட்டி பறக்கும் பேடிஎம் நிறுவனம் 200 மில்லியன் பயனர்களைப் பெற்றுள்ளது, ஆனால் அன்மையில் ஆர்பிஐ வெளியிட்டுள்ள சில விதிகளால் இந்தத் துறை பிற காலத்தில் இந்தியாவில் இருக்குமா என்ற சந்தேகத்தைக் கிளப்பியுள்ளது.

ஆர்பிஐ-ன் புதிய விதிகளில் உள்ள சிக்கல்

ஆர்பிஐ-ன் புதிய விதிகளில் உள்ள சிக்கல்

ஆர்பிஐ வாலெட்டுகள் இடையில் இணைந்து இயங்குதன்மை வேண்டும் என்று எதிர்பார்க்கின்றது. இது வால்லெட் நிறுவனங்களை வளர விடாது.

மேலும் புதிய விதிகளினால் வால்லெட் நிறுவனங்களுக்கு 25 கோடி ரூபாய் வரை முதலீடு செய்ய வேண்டிய நிலை ஏற்படும். அதுமட்டும் இல்லாமல் வாடிக்கையாளர்களின் விவரங்களில் உள்ளிட்டவையிலும் உள்நாட்டளவில் சில வரம்புகள் நிர்ணைக்கப்பட்டுள்ளது. அதுமட்டும் இல்லாமல் குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லாத வால்லெட் முறையினால் வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக் கொள்வதும் கடினம்.

 

எதனால் யூபிஐ

எதனால் யூபிஐ

யூபிஐ மூலம் அனைத்து வங்கிகளுக்குமான பணப் பரிமாற்ற சேவை இதனால் தான் வாட்ஸ்ஆப் யூபிஐ-ஐ தேர்வு செய்துள்ளது. இந்திய அரசும் யூபிஐ சேவையை ஊக்குவிக்கும் வண்ணம் நிறைய முயற்சிகளை எடுத்து வருகின்றது.

வார்ஸ்ஆப் இப்போது அதற்கான பணி ஆட்களை எடுப்பதற்காக யூபிஐ, பிம் மற்றும் ஆதார் உள்ளிட்ட பணப் பரிவர்த்தனை சேவைகளைப் பற்றி நல்ல புரிதல் உள்ளவர்களைத் தேர்வு செய்து வருகின்றது.

 

யூபிஐ பரிவர்த்தனைகள்

யூபிஐ பரிவர்த்தனைகள்

அன்மையில் ஆங்கில வணிகப் பத்திரிக்கை நடத்திய ஆய்வில் யூபிஐ பயன்படுத்திச் செய்யப்படும் பரிவர்த்தனைகள் 42 லட்சமாக அதிகரித்துள்ளதாகக் கூறியது. பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தை ஒப்பிடும் போது 1990 கோடி ரூபாயாக இருந்த பரிவர்த்தனை மதிப்பு 1970 கோடியாக அதிகரித்து இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

யூபிஐ

யூபிஐ

யூபிஐ வங்கிகளுக்கு இடையில் பணத்தை எளிதாகப் பரிவர்த்தனை செய்வதற்கான எளிமையான செயலியாகும். யூபிஐ செயலியில் பணத்தை அனுப்பும் போது உடனுக்குடன் செலுத்தனருக்கான பணம் வங்கி கணக்கில் சென்று அடைந்துவிடும்.

வாட்ஸ்ஆப் மூலம் யூபிஐ பிரபலமாகும்

வாட்ஸ்ஆப் மூலம் யூபிஐ பிரபலமாகும்

ஆர்பிஐ யூபிஐ செயலியை அறிமுகப்படுத்தி 6 மாதங்கள் ஆன பிறகும் மக்களிடையே இது பேடிஎம் போன்று பெறும் வரவேற்பைப் பெறவில்லை. யூபிஐ சேவையை வாட்ஸ்ஆப் அறிமுகப்படுத்தினால் யூபிஐ பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும் என்பதில் ஐயம் ஏதும் இல்லை.

இங்குக் கிளிக் செய்யவும்." data-gal-src="http:///img/600x100/2017/04/04-1491313397-internetbanking.jpg">
முக்கியக் குறிப்பு

முக்கியக் குறிப்பு

<strong>இங்குக் கிளிக் செய்யவும்.</strong>இங்குக் கிளிக் செய்யவும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

WhatsApp all set to launch P2P payment services in India?

WhatsApp all set to launch P2P payment services in India?
Story first published: Tuesday, April 4, 2017, 19:13 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X