ஊழல் செய்வதில் இந்தியாவிற்கு 9வது இடம்.. அதிர்ச்சி ரிப்போர்ட்..!

ஊழல் செய்வதில் இந்தியாவிற்கு 9வது இடம்.. அதிர்ச்சி ரிப்போர்ட்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வர்த்தகம் செய்யாவதற்காக ஊழல் செய்வதிலும், லஞ்சம் அளிப்பதிலும் உலகளவில் 41 நாடுகள் அடங்கிய பட்டியலில் இந்தியா 9வது இடத்தைப் பெற்றுள்ளது.

EY நிறுவனம் ஐரோப்பா, மத்திய கிழக்கு, இந்தியா மற்றும் ஆப்பிரிக்கா நாடுகளில் 2017 ஆண்டுக்கான ஊழல் குறித்த ஆய்வை நடத்தியது. இந்த ஆய்வில் கலந்துகொண்ட 78 சதவீதம் பேர் தங்கள் நாட்டில் ஊழல் மற்றும் லஞ்சம் கொடிகட்டி பறப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவிற்கு முன்

இந்தியாவிற்கு முன்

இப்பட்டியலில் உக்ரைன், சைப்ரஸ், கிரீஸ், ஸ்லோவேனியா, குரோஷியா, கென்யா, தென் ஆப்ரிக்கா மற்றும் ஹங்கேரி ஆகிய நாடுகள் டாப் 10 பட்டியலில் முதல் 8 இடங்களைப் பிடித்துள்ளது.

இந்நிலையில் 9வது இடத்தை இந்தியா இடம்பிடித்துள்ளது.

 

முன்னேற்றம்

முன்னேற்றம்

2015ஆம் ஆண்டு நடத்தப்பட்ட இந்த ஆய்வில் இந்தியா 6வது இடத்தில் இருந்த நிலையில் 2017ஆம் ஆண்டு 9வது இடத்திற்கு வந்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் நாணயமும், வெளிப்படைத் தன்மையும் அதிகரித்துள்ளதாக EY நிறுவனத்தின் ஆய்வறிக்கை கூறுகிறது.

Y தலைமுறையினர்
 

Y தலைமுறையினர்

மேலும் இந்த ஆய்வில் கலந்துகொண்ட Y தலைமுறையினர் தங்கள் நாட்டில் இருக்கும் ஊழல் மற்றும் லஞ்சம் சார்ந்த பிரச்சனைகளாகக் கருதி வருகின்றனர்.

Y தலைமுறையினர் என்றால் 1980கள் முதல் 1990கள் வரையிலான காலத்தில் பிறந்தவர்கள்.

 

41 சதவீதம் பேர்

41 சதவீதம் பேர்

மேலும் இந்தியாவில் இருந்து கலந்துகொண்ட 41 சதவீதம் பேர் தங்களது தேவைக்காவும், லாபத்திற்காகவும் தவறான வழியைப் பயன்படுத்த தயாராக உள்ளதாகக் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்தக் கண்ணோட்டம் முழுமையாக மாற வேண்டும் இல்லையெனில் இந்தியாவில் இருந்து ஊழல் மற்றும் லஞ்சத்தை ஒழிக்க முடியாது.

 

வர்த்தகம்

வர்த்தகம்

மேலும் இந்த ஆய்வு முழுக்கமுழுக்க வர்த்தகச் சந்தையைச் சார்ந்தது.

எனவே இந்த ஆய்வில் கலந்துகொண்ட 13 சதவீதம் பேர் தங்களது பணி மற்றும் சம்பள உயர்விற்காகப் பொய்யான தகவல்களை அளிக்கத் தயாராக உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

அதேபோல் 58 சதவீதம் பேர் வர்த்தக நலனுக்காக ஊழியர்களை நிர்வாகம் ஊழல், லஞ்சம், மோசடி ஆகியவற்றில் இருந்து காப்பதாகவும் தெரிவித்துள்ளது.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India ranks 9th among 41 countries in corruption in businesses

India ranks 9th among 41 countries in corruption in businesses
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X