வருமான துறையிடம் ஓபிஎஸ்-க்கு சொந்தமா தீவு இருக்கின்றது என போட்டுக்கொடுத்தார் விஜயபாஸ்கர்!

Written By: Tamilarasu
Subscribe to GoodReturns Tamil

வெள்ளிக்கிழமை வருமான வரித் துறை அதிகாரிகள் அதிரடியாக நடத்திய சோதனையில் தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடும் ஒன்று. ஆர்கே நகர் இடைத்தேர்தல் நடக்க இருந்த சூழலில் இவரது வீட்டில் நடந்த சோதனை அனைவராலும் கவனிக்கப்பட்டது.

அது மட்டும் இல்லாமல் இவரது வீட்டில் நடத்திய சோதனையில் ஆர்கே நகர் தேர்தலில் எந்த அமைச்சர் எவ்வளவு பணம் பட்டுவாடச் செய்ய வேண்டும் என்பது வரை பல ஆதாரங்கள் மற்றும் கோடிக் கணக்கில் ரூபாய் நோட்டுகளும் சிக்கின.

வருமான வரித்துறை அலுவலகத்தில் விசாரணை

இவரது வீட்டில் நடந்த சோதனையை அடுத்து இன்று வருமான வரித் துறையினர் அலுவலகத்தில் ஆஜராகக் கூறியிருந்தனர். விசாரணைக்கு ஆஜரான விஜய பாஸ்கரிடம் வருமான வரித் துறையினர் சரமாரியாகக் கேள்விகளை கேட்கத் துவங்கினர்.

சேகர் ரெட்டி பற்றிய கேள்வி

சேகர் ரெட்டி அளித்த சில தகவலின் பேரில் விஜய பாஸ்கரிடம் சில கேள்விகளை வருமான வரித் துறையினர் வைத்தனர், அப்போது தேர்தலுக்கு செலவு செய்த ஆவணங்கள், சேகர் ரெட்டியிடம் எவ்வளவு கொடுத்து வைத்திருந்தீர்கள் என்ற கேள்விகளும் கேட்கப்பட்டுள்ளது.

ஓபிஎஸ் தான் எனக்கு பணம் அளித்தார்

அப்போது கேள்விக்கு பதில் அளிக்காமல் தான் ஓபிஎஸ் பணத்தை தான் சேகர் ரெட்டியிடம் கொடுத்து வைத்திருப்பதாகவும், ஓபிஎஸ் தான் என்னிடம் பணம் கொடுத்தார் என்று கூறியுள்ளார்.

ஓபிஎஸ்-க்கு தான் தீவு உள்ளது

அதுமட்டும் இல்லாமல் ஓபிஎஸ் மற்றும் நத்தம் விசுவநாதம் இருவருக்கும் சொந்தமாக ஒரு தீவு உள்ளது என்றும் போட்டுக்கொடுத்தார் விஜயபாஸ்கர்.

இதைக் கேட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் ஓபிஎஸ் பற்றி எதுவும் நீங்கள் கூற வேண்டியது இல்லை, நாங்கள் கேட்கும் கேள்விக்கு மட்டும் பதில் கூறுங்கள் என்று கூறினர்.

 

மீண்டும் விசாரணைக்கு அழைக்க வாய்ப்பு

முறைகேடாக பண பரிவர்த்தனை, சொத்து வாங்கியது எனப் பல ஆதாரங்கள் வருமான வரித் துறையினரிடம் உள்ளதாகவும், இவருக்கும் ஆர்கே நகர் தேர்தலில் பணப் பட்டுவாடா செய்ததற்கும் ஆதாரங்கள் இருப்பதாகவும், அதனால் மீண்டும் விஜய பாஸ்கர் விசாரணைக்கு அழைக்கப்படலாம் என்றும் வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Income tax invesitagation with Vijayabaskar reveals ops has Island

Income tax invesitagation with Vijayabaskar reveals ops has Island
Please Wait while comments are loading...
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC