மகள் கல்யாணத்திற்கு 1 கோடி வரதட்சணை.. டீ கடைக்கார தந்தைக்கு நோட்டீஸ்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ராஜஸ்தான் மாநிலத்தின் பிவாடி பகுதியில் டீகடை நடத்தி வரும் லீலா ராம் குஜார் என்பவர் தனது 6 மகள்களின் திருமணத்தைக் கடந்த ஏப்ரல் 5ஆம் தேதி நடத்தினார்.

 

அன்று முதல் இணையதளங்களில் இவர்தான் சூப்பர் ஸ்டார்.

வரதட்சணை

வரதட்சணை

இந்தியாவில் வரதட்சணை ஒழிக்க வேண்டும் எனப் பல தரப்பினர் போராடி வந்தாலும், மறைமுகவும், வெளிப்படையாகவும் அனைத்து இடங்களிலும் இன்றளவு வரதட்சணை என்ற ஒன்று இருந்து தான் வருகிறது.

அந்த வகையில் இந்த டீ கடைக்காரர் ரொம்ப வெளிப்படையாகக் கொடுத்துட்டார். அதுதான் பிரச்சனை

இண்டர்நெட் சூப்பர் ஸ்டார்

இண்டர்நெட் சூப்பர் ஸ்டார்

தனது மகள்களின் திருமணத்தில் மாப்பிளை வீட்டாருக்கு லீலா ராம் குஜார், ஊர் மக்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் 1 கோடி ரூபாய் வரதட்சணை பணத்தை வரதட்சணை தான் மாப்பிள்ளை வீட்டாருக்குக் கொடுப்பதாகக் கட்டுக்கட்டாகப் பணத்தைக் கொடுத்தார். அதைத் திருமணத்தில் வந்தவர் வீடியோவில் பதிவு செய்துள்ளார்.

இது காட்டு தீ போல் பரவி பேஸ்புக், யூடியூப் என இந்தியா முழுவதும் தற்போது பரவியுள்ளது.

வருமான வரித்துறை
 

வருமான வரித்துறை

மேலும் இந்த வீடியோவை ஆதாரமாக வைத்துக்கொண்டு லீலா ராம் குஜார் மீது வருமான வரித்துறையின் இந்தப் பணத்திற்கான ஆதாரத்தைச் சமர்ப்பிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

6 மகள்களின் திருமணம்

6 மகள்களின் திருமணம்

லீலா ராம் தனது 6 மகள்களின் திருமணத்தை ஓரே நேரத்தில் நடத்தியுள்ளார். அதில் 4 பேரின் திருமண வயதிற்குக் குறைவானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பெண்கள் 18 வயதுக்குக் குறைவாக உடையவர்கள் திருமணம் செய்து வைக்கூடாது என்பது அரசின் சட்டம், அதிகளவில் வரதட்சணை கொடுத்தது மட்டும் அல்லாமல் குழந்தை திருமணம் செய்து வைத்த காரணத்திற்காக இவர் மீது வழக்குத் தொடுக்கப்பட்டுச் சூழ்நிலையில் உள்ளார் லீலா ராம்.

விசாரணை

விசாரணை

மேலும் இதுகுறித்துக் காவல்துறைக்குத் தகவல் கிடைத்த நிலையில், லீலா ராம் மீது விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்ட நிலையில், லீலா ராம் தலைமறை ஆகியுள்ளார்.

பத்திரிக்கை

பத்திரிக்கை

மேலும் காவல்துறை விசாரணை செய்ததில், திருமணப் பத்திரிக்கையில் 18 வயது நிரம்பிய தனது மகள்களின் பெயரை மட்டும் போட்டுள்ளார்.

ஆனால் அவரின் உறவினர் மற்றும் அருகில் இருந்தவர்கள் அனைவரும் 6 மகள்களின் திருமணமும் நடைபெற்றதாகக் கூறினர்.

வீடியோ

இவ்வளவு தெரிந்தும் அந்த வீடியோவை பார்க்காமல் போன எப்படி.,? வாங்க பார்ப்போம்.

செம ஜாலி..!

செம ஜாலி..!

சம்பளத்தை வாரியிறைக்கும் டெக் நிறுவனங்கள்.. ஊழியர்கள் செம ஜாலி..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Rajasthan tea-seller giving Rs 1 crore dowry

Rajasthan tea-seller giving Rs 1 crore dowry
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X