சிறந்த மேலாளராக ஆவது எப்படி? இன்ஃபோஸிஸ் நாராயண மூர்த்தியடன் ஒரு நேர்காணல்

சிறந்த மேலாளராக ஆவது எப்படி? இன்ஃபோஸிஸ் நாராயண மூர்த்தியடன் ஒரு நேர்காணல்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நாராயண மூர்த்தி இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் துறையின் மாபெரும் தொழிலதிபர்களில் ஒருவர். அவர் 1981 ஆம் ஆண்டு இன்ஃபோசிஸ் - ஐ நிறுவினார். அது இன்றைய தேதியில் இந்தியாவின் ஆறாவது மிகப்பெரிய வெளிப்படையான பொது வியாபார நிறுவனமாகும்.

 

இது ஒரு தகவல் கலந்தாய்வு மற்றும் வியாபார செயலாக்கத்தை வெளிப்புறத்தில் ஒப்படைக்கும் சேவைகள் வழங்குநர் நிறுவனம் ஆகும். மூர்த்தி ஹார்வர்டு வியாபாரத் திறனாய்வாளருடன் அவர் பெற்ற மிகுந்த மதிப்புள்ள அறிவுரைகள், இளைய தொழில்முறையாளர்களுக்கு அவர் வழங்கும் அறிவுரைகள், மற்றும் தலைமை பதவியையும் மற்றும் மேலாண்மையும் அவர் எப்படி அணுகுகிறார் என்பவற்றைப் பற்றிப் பேசினார்.

இளைஞனாகப் பெற்ற அறிவுரை

இளைஞனாகப் பெற்ற அறிவுரை

ஒரு இளைஞனாக இருந்தபோது நீங்கள் பெற்ற அறிவுரை என்ன மற்றும் இப்போது இளைய தலைமுறை தொழில் முறையினருக்கு நீங்கள் கொடுக்கும் அறிவுரை என்ன?

நான் கற்ற முதல் பாடம் எனது தந்தையிடமிருந்து ஆகும். அவர் தனது குழந்தைகளிடம் விலைமதிக்க முடியாத பழக்கவழக்கங்களை விதைக்க விரும்பினார். "நீ விலை மலிவான பழக்கவழக்கங்களை வளர்த்துக் கொண்டால், இதனால் பின்வரும் வருடங்களில் நீங்கள் பணத்திற்குப் பலியாளாக மாட்டீர்கள். மேலும், பின்வரும் நாட்களில் வருத்தத்தை விளைவிக்கக் கூடிய செயல்களைச் செய்யத் தூண்டும் பேராசையின் பொறிக்குள் விழ மாட்டீர்கள்". என்று அவர் எப்போதும் கூறுவார்.

 

புத்தகம் வாசிக்கும் பழக்கம்

புத்தகம் வாசிக்கும் பழக்கம்

"நீங்கள் கட்டாயம் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்". என்று அவர் கூறுவார். அன்றைய நாட்களில், இந்தியாவில் (உண்மையில் இன்றும் கூட), ஒவ்வொரு சிறிய நகரமும் பொது நூலகத்தைக் கொண்டிருந்தது, அங்கிருந்து நீங்கள் தினமும் ஒரு புத்தகத்தை இலவசமாகக் கடனாகப் பெறலாம். மேலும் நீங்கள் அங்கே பத்திரிகைகள், இதழ்கள், மற்றும் செய்தித்தாள்கள் போன்ற நீங்கள் விரும்பும் எதை வேண்டுமானாலும் படிக்கலாம். எனவே இந்தப் பழக்கம் உங்களுக்கு எந்தப் பணச்செலவையும் வைக்காது.

இசையை அனுபவிக்க வேண்டும்
 

இசையை அனுபவிக்க வேண்டும்

மேலும் "நீங்கள் இசையை மகிழ்ந்து அனுபவிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்", என்று அவர் கூறுவார். எனது தந்தை ஒரு பள்ளி ஆசிரியர். நாங்கள் மொத்தம் 8 குழந்தைகள் நாங்கள் அப்போது மிகுந்த ஏழ்மை நிலையில் இருந்தோம். எங்கள் வீட்டில் அப்போது ஒரு வானொலி கூட இல்லை. நான் தொடக்கக்கால 1950 களை பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறேன். அப்போது எனது தந்தை கூறுவார் "நீ ஏன் பொதுப் பூங்காவிற்குச் சென்று அங்கே உட்காரக் கூடாது? அங்கே மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை இசை இசைக்கப்படுகிறது". எனவே நாங்கள் அங்கே சென்று அமர்ந்து மற்றும் ஒரு மணி நேரத்திற்கு இலவசமாக இசையைக் கேட்டு மகிழ்ந்தோம்.

நண்பர்களை வளர்த்துக்கொள்ள வேண்டும்

நண்பர்களை வளர்த்துக்கொள்ள வேண்டும்

இறுதியாக அவர் சொன்னது, "நல்ல நண்பர்களை வளர்த்துக் கொள்ளுங்கள் மற்றும் அந்த நண்பர்களுடன் சுவாரஸ்யமான மற்றும் உபயோகமான விஷயங்களைப் பற்றி விவாதியுங்கள். இந்தக் கலந்துரையாடல்கள் உங்கள் அறிவை வளர்ப்பதோடு உங்களுக்கு எந்தப் பணச் செலவையும் தராது".

தந்தையிடம் இருந்து கற்றுக்கொண்ட பழக்க வழக்கங்கள்

தந்தையிடம் இருந்து கற்றுக்கொண்ட பழக்க வழக்கங்கள்

எனவே எனது தந்தையிடமிருந்து நான் கற்றுக் கொண்ட மற்றும் இன்று வரையிலும் கூட நடைமுறையில் பயிற்சி செய்து வரும் மூன்று பழக்கவழக்கங்கள் என்னவென்றால்:

1. புத்தகங்களைப் படித்தல் (நான் இயற்பியல், கணிதம் மற்றும் கணினி அறிவியல் பற்றிய புத்தகங்களைப் படிக்க நியாயமான அளவு நேரத்தைச் செலவழிக்கிறேன்).
2. நான் இசையைக் கேட்கிறேன் (நான் இந்தியப் பாரம்பரிய இசை, இந்திய சினிமாப் பாடல்கள் ஹிந்தி மற்றும் கன்னடத்தில், மேற்கத்திய பாப் பாடல்கள், மேற்கத்திய பாரம்பரிய இசை மற்றும் பல தேசங்களின் இசையைக் கேட்கிறேன்).
3. நான் நல்ல நண்பர்களைக் கொண்டிருக்கிறேன் (எனக்கு வெகு சில நல்ல நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்களுடன் நான் நிறைய நேரத்தைச் செலவழிக்கிறேன். இந்த விஷயங்களில் எதுவுமே எனக்கு அதிகப் பணச் செலவை ஏற்படுத்துவதில்லை).

 

ஆசிரியரிடம் இருந்து கற்றுக்கொண்டவை

ஆசிரியரிடம் இருந்து கற்றுக்கொண்டவை

நான் கற்றுக் கொண்ட இரண்டாவது பாடம் எனது உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியரிடமிருந்து ஆகும். - அவர் திரு. K.V நாராயண் ஆவார். (K.V.N) அப்போது எனக்கு 13 வயது. அவர் எங்களுக்குப் பொதுச் சொத்துகளை நல்ல முறையில் கையாள வேண்டியதின் முக்கியத்துவத்தைக் கற்றுக் கொடுத்தார். சமூகத்திற்குச் சொந்தமான சொத்துகளை உங்கள் சொந்த தனிப்பட்ட சொத்துகளை விட அதிகக் கவனத்துடன் கையாள வேண்டுமென்று அவர் கூறுவார். அவர் வேதியியலில் ஒரு பரிசோதனையை நடத்திக் கொண்டிருந்தார்.

அப்போது அவர் சோடியம் குளோரைடை (சாதாரண உப்பு) பயன்படுத்த விரும்பினார். அவர் சோதனைக் குழாயில் போடும் சாதாரண உப்பின் அளவின் பற்றி மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்தார். எனக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்த என் நண்பர்களில் ஒருவர் KVN மிகவும் கஞ்சத்தனமானவர் என்று நினைத்து வெடித்துச் சிரித்தார். எனவே KVN தனது பரிசோதனையை நிறுத்திவிட்டு, நாங்கள் அமர்ந்திருக்கும் இடத்திற்கு வந்தார். KVN எனது நண்பரை, "ஏன் சிரித்தாய் இந்தப் பரிசோதனையைப் பற்றிக் கேலி செய்வதற்கு அப்படி என்ன இருக்கிறது", என்று கேட்டார். அதற்கு எனது நண்பன், "ஐயா, நீங்கள் விலை மலிவான இந்தச் சாதாரண உப்பைப் பயன்படுத்துவதில் கூட இவ்வளவு கஞ்சத்தனமாக இருக்கிறீர்கள், அதனால் தான் நான் சிரித்தேன்" என்றான்.

KVN அதற்குக் கூறிய பதிலை, இன்று வரையிலும் நான் நினைவில் வைத்துள்ளேன் மற்றும் எனது நடைமுறை வாழ்க்கையில் கடைப்பிடித்து வருகிறேன். அவர் கூறியது என்னவென்றால், "இந்த விலை மலிவான சாதாரண உப்பு நமது பள்ளிக்கு சொந்தமானது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இது உனக்கும், எனக்கும், இந்த வகுப்புக்கும், மற்றும் இந்தப் பள்ளி முழுவதற்கும் சொந்தமானது. அப்படியிருக்கையில், நான் இதை எப்படிப் பயன்படுத்துகிறேன் என்பதைப் பற்றி அளவு கடந்த கவனத்துடன் இருக்க வேண்டும்". மேலும் அவர் தொடர்ந்தார், "நீ எனது வீட்டிற்கு வா, நான் ஒரு பெரிய குடுவை நிறையச் சாதாரண உப்பை உனக்கு இலவசமாகத் தருகிறேன். ஏனென்றால் எனது வீட்டிலிருக்கும் சாதாரண உப்பு எனது தனிப்பட்ட சொத்து. எனது தனிப்பட்ட சொத்தை நான் தாராளமாக மற்றவர்களுக்கு வாரிக் கொடுக்கலாம். ஆனால், பொதுச் சொத்து என்ற கேள்வி வரும்போது, நான் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இந்தப் பள்ளியில் உள்ள குடுவை சாதாரண உப்பிற்கு, மற்ற ஆசிரியர்கள் மற்றும் நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு மத்தியில் நானும் ஒரு சிறிய முதலாளி ஆவேன்" என்றார். அது அளவு கடந்த முக்கியத்துவத்தைப் பெறும் ஒரு பாடமாகும். இந்தப் பாடத்தை நடைமுறையில் பின்பற்றாத மக்களைக் கண்டால், நான் மிகுந்த கோபமடைவேன்.

 

மாற்றத்தைப் பூஜ்ஜியத்தில் இருந்து துவங்க வேண்டும்

மாற்றத்தைப் பூஜ்ஜியத்தில் இருந்து துவங்க வேண்டும்

மூன்றாவது பாடம் அகமதாபாத்தில் இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில், எனது துறை தலைவரான திரு. J.G கிருஷ்ணய்யா (JGK) விடமிருந்து வந்தது. அவர் ஒவ்வொரு பரிமாற்றத்தையும் பூஜ்ஜிய அடிப்படையில் தொடங்குவது மற்றும் முந்தைய பரிமாற்றங்களிலிருந்து பாரபட்சமான தயக்கங்களைக் குழப்பங்களைச் சுமந்து கொண்டு வராமலிருப்பது ஆகியவற்றின் முக்கியத்துவத்தை எங்களுக்குக் கற்றுக் கொடுத்தார்.

என்னை உங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டைத் தர அனுமதியுங்கள். ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு தொழில்நுட்ப பிரச்சனையின் மீது விவாதங்கள் செய்ததுண்டு. உணர்ச்சிகரமான பேச்சின் சூட்டில், நாங்கள் பொருத்தமில்லாத பல விஷயங்களைச் சொல்லி விடுவோம். அடிக்கடி JGK யை விட நான் அதிகக் குற்ற உணர்ச்சி அடைந்ததுண்டு. JGK என் மீது வருத்தத்தில் இருப்பார் என்று கவலைப்பட்டுக் கொண்டே நான் இரவு முழுவதும் கழித்திருப்பேன். ஆனால், மறுநாள் காலை நான் அவரைச் சந்திக்கும் போது, அவர் புன்னகையுடனும், நேசத்துடனும், நிறைந்த உற்சாகத்துடனும் இருப்பார். அந்தக் குற்றம் சுமத்தக் கூடிய பரிமாற்றம் நடக்காததைப் போல அவர் நடந்து கொள்வார். உண்மையில் இன்ஃபோசிஸில் எனது சக பணியாளர் மிகச் சரியாக JGK செய்ததைப் போலவே நான் நடந்து கொள்வதைக் கவனித்திருக்கிறார்கள். எனது கருத்துக்கள் முற்றிலும் அந்தப் பிரச்சனையைப் பற்றியது மற்றும் அதில் சம்பந்தப்பட்ட நபருடன் நான் பிணக்கு எதுவும் கொண்டிருக்கவில்லை என்பதை நன்கு அறிவார்கள்.

JGK எனக்குக் கற்பித்த இரண்டாவது பாடம் தீர்மானங்களை எடுப்பதற்குத் தகவல்கள் மற்றும் உண்மைகளைப் பயன்படுத்துவதின் முக்கியத்துவம் ஆகும். JGK சொல்வார், "இளைஞனே, ஒரு தீர்மானத்திற்கு வரவேண்டி இருக்கும்போது நீ தகவல்களையும் உண்மைகளையும் பயன்படுத்தினாய் என்றால், பின்பு நீ ஒருசார்பாகப் பாரபட்சமாக இருக்கமாட்டாய், இல்லையென்றால் நீ கொள்கை பிடிவாதம் கொண்டவனாக இருக்கமாட்டாய், மற்றும் நீ அடுத்த மனிதனுக்கு நேர்மையானவனாக இருக்கமாட்டாய்". மீண்டும், நான் JGK வை எனது அறுபதுகளின் கடைசியில் சந்தித்தது முதற்கொண்டு இந்த விஷயத்தை என் வாழ்நாள் முழுவதும் கடைப்பிடித்து வருகிறேன். மேலும் எந்த ஒரு தலைவருக்கும் இருக்க வேண்டிய மிக முக்கியமான அம்சமாக இதைக் கருதுகிறேன்.

 

உங்கள் சந்திக்கும் வரும்போது இளைய தொழில் முறையாளருக்கு நீங்கள் கொடுக்கும் அறிவுரை என்ன?

உங்கள் சந்திக்கும் வரும்போது இளைய தொழில் முறையாளருக்கு நீங்கள் கொடுக்கும் அறிவுரை என்ன?

எனது வாழ்வின் பெரும்பான்மையான நேரத்தை நான் கார்ப்பரேட் உலகத்தில் செலவழித்தேன். நான் உலகம் முழுவதிலும் உள்ள இளைஞர்களிடம் பேசியிருக்கிறேன். இளைஞர்களுக்கு அறிவுரையைக் கடத்த மிகுந்த திறன் வாய்ந்த வழி, சிறிய, எளிய, கவனத்தை ஈர்க்கும் வாக்கியங்களைப் பயன்படுத்தி இந்தச் சில யோசனைகளைச் சொல்ல தகவல் தொடர்பு கொள்ளுதல் என்பதை உணர்ந்தேன்.

எடுத்துக்காட்டாக, நான் நமது இளைஞர்களிடம் சொல்லுவேன், "கடவுளை நாம் நம்புகிறோம். மற்ற அனைவரும் தகவல்களை மேஜைக்குக் கொண்டு வருகிறார்கள்". அது அவர்கள் மனதில் ஒட்டிக் கொள்கிறது, மற்றும் அதற்குக் கொஞ்சம் மதிப்பிருக்கிறது என்று நம்புகிறேன்.

 

நேர்மை, ஒருமைப்பாடு, கண்ணியம்

நேர்மை, ஒருமைப்பாடு, கண்ணியம்

நான் அவர்களுக்குச் சொல்லும் இரண்டாவது பகுதி அறிவுரை, நேர்மை, ஒருமைப்பாடு, கண்ணியம் மற்றும் நியாயத்தைக் கடைப்பிடிக்கச் சொல்வதாகும். இந்த மதிப்புகளை நான் அவர்களுடன் ஒரு பழமொழியைக் கொண்டு தொடர்பு கொள்வேன். "மிக மென்மையான தலையணை தெளிவான மனசாட்சி". இதைக் கொண்டு அவர்கள், நான் அவர்களை நேர்மையாகவும், மற்றவர்களிடம் நியாயமாகவும், தகவல்களையும், உண்மைகளையும் பயன்படுத்தும் படியும், பாரபட்சமாக இருக்க வேண்டாம் என்றும் அறிவுரைக் கூறுகிறேன் என்பதைப் புரிந்துக் கொள்வார்கள். நேர்மை அவர்களை நிம்மதியாக உறங்கவிடும் என்பதை அவர்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள், ஏனென்றால் அவர்கள் தவறாக எதையும் செய்யவில்லை என்பது அவர்களுக்குத் தெரியும். அவர்களது மனசாட்சி தெளிவாக உள்ளது.

வெளிப்படைத் தன்மை

வெளிப்படைத் தன்மை

நான் அவர்களுக்குச் சொல்லும் மூன்றாவது பகுதி அறிவுரை, வெளிப்படைத் தன்மையைப் பற்றியதாகும். மதிப்பு அமைப்பின் இந்த ஆற்றல் மிக்கப் பண்பைப் பற்றி மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்ல "சந்தேகமாக இருக்கும்போது, வெளிப்படுத்து" என்ற பழமொழியைப் பயன்படுத்துவேன். வெளிப்படைத் தன்மை என்பது பெருநிறுவனங்களின் உலகில் முதன்மை மதிப்பீட்டுப் பண்பாகும். ஏனென்றால் ஒரு நல்ல பெருநிறுவனத்தின் கட்டுப்பாடு அதன் வெளிப்படைத் தன்மையைச் சார்ந்துள்ளது. மேலும் எந்தச் சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், வெளிப்படைத் தன்மை என்பது ஒரு நல்ல தொழில்முறையாளர், ஒரு நல்ல மனிதர் மற்றும் நல்ல குடிமகன் என்பதற்கான தர அடையாளம் ஆகும்.

மிகப் பெரிய தவறு

மிகப் பெரிய தவறு

உங்கள் தொழில் வாழ்க்கையில் தொடக்கக் காலத்தில் நீங்கள் செய்த மிகப் பெரிய தவறு என்ன, மற்றும் அதிலிருந்து நீங்கள் கற்றுக் கொண்டது என்ன?

நான் அடிக்கடி சொல்வேன் இன்ஃபோசிஸ் ஒரு புத்திசாலித்தனமான அறிவொளி ஏற்றப்பட்ட மக்களாட்சியாகும். இன்ஃபோசிஸில் பணிபுரிந்த நாட்களில் என்னைச் சுற்றி ஏராளமான சாமர்த்தியமான மக்களை நான் சேகரித்தேன். மேலும் நாங்கள் ஒவ்வொரு திட்ட வியூக பிரச்சனையையும் அறிவார்ந்த தகவலளிக்கப்பட்ட மற்றும் விருப்பத்திற்குரிய விவாதங்கள் நடத்திய பிறகே முடிவெடுப்போம்.

எந்த ஒரு வகைப்பிரிக்கப்படாத பிரச்சனைக்கும் நான் எங்கள் உள்ளார்ந்த நிபுணர்களுடன் சேர்த்து அந்தப் பகுதியில் அனுபவம் உள்ள வெளிப்புற நபர்களையும் வரவேற்பேன், அவர்கள் சொல்வதைக் கவனமாகக் கேட்போம். நிறை குறைகளை விவாதிப்போம், அதன் பிறகு தகவல் அளிக்கப்பட்ட ஒரு முடிவுக்கு வருவோம். அதனால், ஒட்டுமொத்தமாக மாபெரும் தவறுகள் செய்வதைப் பெரும்பாலும் நான் தவிர்த்து விடுவேன்.

ஒருவேளை சிறந்த சாத்தியமான முடிவுகளை நான் எடுக்காமல் இருக்கலாம். உங்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கலாம், ஒரு ஜனநாயகத்தில், உங்களால் சிறந்த முடிவு எடுக்க முடியாமல் போகலாம் ஆனால் சூழ்நிலைகளின் கீழ் நீங்கள் சிறந்த முடிவை எடுக்கிறீர்கள் ( மிகவும் உகந்த முடிவுகள்). அத்தகைய ஒரு வியூகத்துடன், நீங்கள் பேரழிவுகளைத் தவிர்க்கலாம். ஒரு நல்ல முடிவை எடுப்பதற்கான முக்கியமான மூலப்பொருள், சிறந்த வாக்குவாதங்கள் சாத்தியமாகக் கூடிய இடமான ஒரு திறந்த, பன்முக, அச்சமற்ற சூழ்நிலையை உருவாக்குவதே ஆகும்.

 

நீங்கள் உடன் பணியாற்றிய சிறந்த தலைவர் அல்லது மேலாளர் யார், எது அவரைச் சிறந்த நபராக ஆக்கியது?

நீங்கள் உடன் பணியாற்றிய சிறந்த தலைவர் அல்லது மேலாளர் யார், எது அவரைச் சிறந்த நபராக ஆக்கியது?

நான் அற்புதமான முதலாளிகளைப் பெற்றதில் அதிர்ஷ்டசாலியாக இருந்து வருகிறேன். அவர்கள் ஒவ்வொருவரிடமும் நான் எதோ ஒரு விஷயத்தைக் கற்றுக் கொண்டேன். ஆனால் ஒரு பெருநிறுவன மேலாளராக என் மீது மிகுந்த செல்வாக்கான பயனுள்ள தாக்கத்தை ஏற்படுத்தியவர், நான் பாரிசில் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த போது, எனக்கு முதலாளியாக இருந்தவர். அந்தப் பண்புள்ள பெரிய மனிதர் தென் ஆப்பிரிக்காவிலிருந்து வந்த ஒரு ஆங்கிலேயர் ஆவார்.

அவர் எனக்கு ஒரு நல்ல மேலாளர் எப்படித் தனது உதவியாளர்களால் ஏற்பட்ட தவறுகளுக்கு அடித்தளக் கோட்டுப் பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும், தவறு செய்த உதவியாளர்களுக்கு, ஒரு பிரச்சனை அல்லது நெருக்கடியை நேரத்தோடு தீர்வு காண, வரவு செலவு திட்டம் மற்றும் தேவையான தரத்திற்குள் வேலையைச் சிறப்பாகச் செய்து முடிக்க எப்படி அத்தியாவசியமான அனைத்து உதவிகள் மற்றும் ஊக்கத்தை வழங்க வேண்டும் என்பதற்குச் செயல்முறை விளக்கத்தைச் செய்து காட்டினார். அவர் வேலையை முடிப்பதற்காகக் கடினமாக உழைத்துக் கொண்டிருக்கும் தனது உதவியாளர்களிடம் அமைதியாக, விவேகமாக, உதவிக்கரமாக, மற்றும் ஊக்கமளிக்கும் விதமாக அனைத்து ஆதரவுகளையும் வழங்குவார். அந்த வேலை முடிந்த பிறகு மட்டுமே எனது பாரிஸ் முதலாளி, மிகத் தீவிரமான தவற்றைச் செய்த நபர்களின் கைவிரல் எலும்பு மூட்டுக் கணுக்களின் மீது தட்டுவார்.

 

நான் செய்த பிழையைக் கவனமாகக் கேட்ட நிறுவன முதலாளி

நான் செய்த பிழையைக் கவனமாகக் கேட்ட நிறுவன முதலாளி

ஒரு வெள்ளிக் கிழமை மாலை, நாங்கள் கட்டுமானிற்றுக் கொண்டிருந்த இயங்குதள அமைப்பைச் சோதனை செய்து கொண்டிருந்த போது என்னால் தவறுதலாக ஒரு மாபெரும் பிழை ஏற்பட்டிருப்பதைக் கண்டறிந்தோம். சுமார் மாலை 6 மணிக்கு நாங்கள் இந்தப் பிரச்சனையைக் கண்டுபிடித்தோம். எனது சக அனைத்துப் பணியாளர்களும் சென்றுவிட்டார்கள். பாரிசில் வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்குப் பிறகு அலுவலகத்தில் தங்க யார்தான் விரும்புவார்கள்? ஆனால் எனது முதலாளி நான் சொல்வதைக் கவனமாகக் கேட்டார் மற்றும் எனது தவறை புரிந்து கொண்டு அனைத்துத் தகவல் தரவுகளையும் மறு சீரமைப்புச் செய்யத் தேவைப்படும் மிகப் பெரிய வேலையின் அளவைப் புரிந்து கொண்டார். அப்போது தான் எங்கள் முழு அணியின் வேலையும் திங்கள் கிழமை மாலை அலுவலகத்திற்குத் திரும்பும்போது பாதிக்கப்படாமல் இருக்கும். நான் இந்தப் பழுதுபார்ப்பு வேலை சுமாராக 24 மணி நேரங்கள் எடுக்கும் என்று விளக்கினேன்.

அவர் வெறுமனே புன்னகைத்தார். அவரும் அவரது மனைவியும் அன்று இரவு உணவுக்கு வெளியிடத்திற்கு எங்கோ செல்வதாக இருந்தது. அவர் அதை ரத்துச் செய்துவிட்டார். அவர் என்னுடன் உட்கார்ந்தார். எனக்கு நகைச்சுவைகளைச் சொன்னார். அவர் எனக்காக உணவும் காஃபியும் வாங்கிக் கொடுத்தார். பிறகு நான் அந்த வேலையை மறுநாள் (சனிக்கிழமை) மாலை சுமார் 4:00 அல்லது 4:30 மணிக்கு முடித்தேன். அந்த வேலை முழுமையாகவும் நேர்த்தியாகவும் முடிக்கப்பட்டுவிட்டதா என்பதை அவர் உறுதி செய்து கொண்டபிறகு, அவர் சொன்னார், "குழந்தாய், (அந்தக் காலகட்டத்தில் நான் வயதில் மிகவும் சிறியவனாக இருந்தேன்) அடுத்த முறை நீ இதைச் செய்தால், நான் உன்னை அறைந்து விடுவேன்".

 

வேலையை முடிப்பதற்கு எனக்குத் தன்னம்பிக்கை

வேலையை முடிப்பதற்கு எனக்குத் தன்னம்பிக்கை

இதிலுள்ள முக்கியமான விஷயம் என்னவென்றால், என்னுடைய முதலாளி நான் தவறாக எதுவுமே செய்யாததைப் போல என்னுடன் உரையாடி அந்த வேலையை முடிப்பதற்கு எனக்குத் தன்னம்பிக்கை அளித்தார். அப்போது தான் நான் உணர்ந்தேன், ஒரு நல்ல தலைமை பண்புள்ளவர் ஒரு விஷயம் மோசமாகச் சொல்லும்போது உனக்கு முழுமையான அடித்தள ஆதரவை வழங்குவார். மேலும் அவர் எரிச்சலடைய மாட்டார். ஆனால் ஒரு வழியாக அந்த வேலை முடிந்து அந்த நெருக்கடியிலிருந்து நாங்கள் மீண்டுவிட்டால் அப்போது அவர் அல்லது அவள் தனது கோபத்தைக் காட்டுவார். இதுதான் நான் கடைப்பிடித்து வரும் விஷயம். பல சந்தர்ப்பங்களில் எனது சகப் பணியாளர்கள் ஒரு நெருக்கடி நிலையில் நான் வருத்தமடைவதில்லை என்பதை உணர்ந்திருக்கிறார்கள்.

தற்போது உள்ள சூழ்நிலையில் இந்திய நிறுவனங்களுக்கு மிகவும் தேவைப்படும் திறமை என்ன?

தற்போது உள்ள சூழ்நிலையில் இந்திய நிறுவனங்களுக்கு மிகவும் தேவைப்படும் திறமை என்ன?

மற்ற அனைத்தையும்விட முதலாவதாகப் பல்வேறு கலாச்சாரச் சூழ்நிலைகளில் இயங்கக்கூடிய நிபுணராக நாம் கட்டாயம் ஆக வேண்டும். ஏனென்றால் உலகமயமாக்கல் இந்தியாவில் மிக மிக அதிகமாகப் பிரசித்தி பெற்று வருகிறது, ஏனென்றால் இந்திய மேலாளர்கள் உலகின் வெவ்வேறு பகுதிகளுக்குச் செல்கிறார்கள், ஏனென்றால் இந்தியத் திறமை கணினிகளை வடிவமைக்கப் பல முன்னேறிய நாடுகளுக்கு வருகை தந்து கொண்டிருக்கிறது - குறிப்பாக நமது தகவல் தொழில்நுட்ப துறையில். நாம் மனதளவில் மேலும் பல்வேறு கலாச்சாரங்களை ஏற்றுக்கொள்பவராக ஆக வேண்டும். ஒரு பல்வேறு கலாச்சாரச் சூழ்நிலையில் எப்படி இனிமையாகக் கலந்துரையாட வேண்டும் என்பதை நாம் கற்றுக் கொள்ள வேண்டும். நம்முடன் வேலை செய்யும் பல்வேறு கலாச்சாரத் திறமைகளின் ஆர்வத்தையும் உயர்ந்த இலட்சியங்களையும் புரிந்து கொள்ள நாம் கற்றுக் கொள்ள வேண்டும். வெவ்வேறு கலாச்சாரங்களைக் கொண்ட மக்களை எவ்வாறு ஊக்குவிக்க வேண்டும் என்பதை நாம் கற்றுக் கொள்ள வேண்டும். பல்வேறு கலாச்சாரத் திறமைகளை வழிநடத்த நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.

எதிர்வினையாற்றும் பிரச்சனைக்குத் தீர்வு

எதிர்வினையாற்றும் பிரச்சனைக்குத் தீர்வு

இந்திய மேலாளர்கள் சிறப்பாகக் கற்றுக் கொள்ள வேண்டிய இரண்டாவது விஷயம், எதிர்வினையாற்றும் பிரச்சனைக்குத் தீர்வு காண்பவர்கள் என்ற நிலையிலிருந்து செயல்திறனுடன் பிரச்சனையை வரையறுப்பவர்கள் அல்லது செயல்திறனுடன் தீர்வை வரையறுப்பவர்கள் என்ற நிலைக்கு நகரும் திறமையைக் கற்றுக் கொள்ள வேண்டும். இந்தியர்கள் கடின உழைப்பாளிகள். அவர்கள் உண்மையில் சாமர்த்தியசாலிகள். ஆனால் மொத்தமாக இந்திய தொழில்முறையாளர்களாகிய இளைஞர்கள் செய்யத் தேவையானது என்ன என்பதை அவர்களது முதலாளிகள் விவரமாக எடுத்துச் சொல்ல வேண்டுமென்று எதிர்பார்க்கிறார்கள். அதன்பிறகு அவர்கள் மிகப் பெருமளவில் சிறப்பாகச் செய்து முடிக்கிறார்கள். நமது இளைய தொழில் முறையாளர்கள் கற்றுக் கொள்ள வேண்டியது என்னவென்றால் ஒரு புதிய சூழ்நிலைக்குள் செல்லுங்கள், அங்குப் புதிய பிரச்சனைகளைக் கண்டறியுங்கள் மற்றும் அவற்றிற்கான தீர்வுகளை நீங்களே வடிவமையுங்கள்.

ஆங்கிலத்தில் மேம்படவேண்டும்

ஆங்கிலத்தில் மேம்படவேண்டும்

மூன்றாவதாக நாம் தகவல் தொடர்பில் மேலும் மேம்பட வேண்டும் குறிப்பாக ஆங்கிலத்தில். நாம் இந்தியாவில் கற்கும் ஆங்கிலம் மிக உயர்ந்த இலக்கணங்கள் உடையது ஆனால் தேவைக்கு அதிகமான நீளமான வார்த்தைகளைக் கொண்டுள்ளது. நாம் நமது எண்ணங்களை வெளிப்படுத்த தேவையை விட மிக அதிகமான வார்த்தைகளைப் பயன்படுத்த முனைகிறோம். நாம் நமது கருத்துக்களை எளிமையான மற்றும் நேரடியான வழியில் வெளிப்படுத்த கற்றுக் கொள்ள வேண்டும். நாம் சிறப்பாகத் தகவல் தொடர்பு கொள்ளக் கற்றுக் கொண்டால் நாம் மேன்மேலும் கூட மேம்படுவோம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

An Interview with Infosys Narayana Murthy

An Interview with Infosys Narayana Murthy
Story first published: Saturday, April 15, 2017, 14:42 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X