ராக்கெட் வேகத்தில் வளரும் ஓபிஎஸ்-ன் சொத்து மதிப்பு..!

கடந்த 10 ஆண்டுகளாக ஓபிஎஸ்-ன் சொத்து மதிப்பு எத்தனை மடங்கு உயர்ந்துள்ளது என்று தெரியுமா..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தமிழகத்தின் முதல்வராக மூன்று முறை பதவி ஏற்ற ஓபிஎஸ் நான் சசிகலா ஆதரவாள இல்லை என்று கூறிய பிறகு தமிழக அரசியல் வட்டாரத்தில் மிகப் பெரிய சலசலப்பை ஏற்பட்டதை நாம் மறந்திருக்க முடியாது.

தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்து இரண்டு முறை சிறைக்குச் சென்ற போதும், ஜெயலலிதா மறைவின் போதும் இடைக்கால முதல்வராகத் தமிழகத்தைப் பெரிய அளவில் சிக்கலில் இருந்து காப்பாற்றிய பொறுப்பு இவருக்கு உண்டு.

அதே வேலையில் எம்எல்ஏ, தமிழக முதல்வர், நிதி அமைச்சர் எனப் பல பதவி வகித்த ஓ பன்னீர்செல்வம் அவர்களின் சொத்து மதிப்பு பல மடங்கு உயர்ந்துள்ளது. அதுவும் மூன்று முறை அதிமுக அரசு பதவி ஏற்கும்போதும் இவருடைய சொத்து மதிப்பு பல மடங்கு உயர்ந்துள்ளது.

மொத்த சொத்து மதிப்பு

மொத்த சொத்து மதிப்பு

2006 ஆம் ஆண்டு 20.8 லட்சம் ரூபாய், 2011-மாண்டு 60.3 லட்சம், 2016-ம் ஆண்டு 1.53 கோடி என ஓபிஎஸ்-ன் சொத்து மதிப்பு பல மடங்கு உயர்ந்துகொண்டே வந்துள்ளது.

நில உடைமைகள்

நில உடைமைகள்

2006-ம் ஆண்டு 1 ஏக்கராக இருந்த சொத்து மதிப்பு 2011-ம் ஆண்டு 21.92 ஏக்கராக மாறியது, 2016-ம் ஆண்டு 32.61 ஏக்கராகச் சொத்து மதிப்பு உயர்ந்தது.

வாகனங்கள்

வாகனங்கள்

2006-ம் ஆண்டு வாகனம் ஏதும் குறிப்பிடவில்லை, 2011-ம் ஆண்டு மகேந்திரா ஜெனியோ, 2016-ம் ஆண்டு மகேந்திரா ஜெனியோ மற்றும் இன்னோவா.

வருமானம்

வருமானம்

2005-2006- நிதி ஆண்டில் ஓபிஎஸ்-ன் வருவாய் வருமான வரி செலுத்துவதற்கும் குறைவாகவும், அவரது மனைவிக்கு 36,251 ரூபாயும் மட்டுமே வருவாயாக இருந்தது. 2008-2009ம் ஆண்டில் ஓபிஎஸ்க்கு ஆண்டு வருமானம் 3.62 லட்சமும், மனைவிக்கு எவ்வளவு என்று குறிப்பிடப்படாமலும் இருந்தது. 2014-2015ம் நிதி ஆண்டில் ஓபிஎஸ்-ன் வருமானம் 5.8 லட்சம் ரூபாயும், மனைவியின் வருமானம் 46.33 லட்சமாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

நில அவகரிப்பு வழக்கு

நில அவகரிப்பு வழக்கு

2011-ம் ஆண்டு இவர் மீது அதாவது திமுக ஆட்சியின் போது இவர் மீது நில அவகரிப்பு வழக்கும் போடப்பட்டுள்ளது. இந்த வழக்கு அதிமுக அரசு 2016-ம் ஆண்டு ஆட்சிக்கு வரும் போது காணாமல் போனது.

சொத்து மதிப்பைச் சமர்ப்பிக்க உத்தரவு

சொத்து மதிப்பைச் சமர்ப்பிக்க உத்தரவு

தமிழகத்தின் சட்ட மன்றத் தேர்தலில் முதன் முதலாக வெற்றி பெற்று எம்எல்ஏ பொறுப்பேற்ற போது அவருடைய சொத்து மதிப்பு எவ்வளவு என்று தெரியவில்லை. 2002-ம் ஆண்டுத் தான் முதன் முதலாகத் தேர்தல் ஆணையம் வேட்பாளர்கள் தங்களது சொத்து மதிப்பு எவ்வளவு என்று வெளியிட வேண்டும் என்று கூறியது.

2006-ம் ஆண்டுத் தேர்தலின் போது சொத்து மதிப்பு

2006-ம் ஆண்டுத் தேர்தலின் போது சொத்து மதிப்பு

அதற்குப் பிறகு 2006-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் போது பெரியகுளம் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்யும் போது தன்னுடைய சொத்து மதிப்பு மொத்தம் 20.81 லட்சம் என்றும், 15.5 லட்சம் அசையும் சொத்து என்றும், 1.44 பணமாக உள்ளது என்று, 15.56 லட்சம் சென்னை வங்கி கணக்கில் உள்ளதாகவும் தெரிவித்து இருந்தார்.

 

ஓபிஎஸ்-ன் மனைவி

ஓபிஎஸ்-ன் மனைவி

அதே நேரம் இவரது மனைவியின் சொத்து மதிப்பு 3.74 லட்சம் பணமாகவும், 876 லட்சம் வங்கி கணக்கில் உள்ளதாகவும், நகைகளாக 1.5 லட்சம் உள்ளதாகவும் , பெரியகுளம் தென்கரை கிராமத்தில் 1 லட்சம் மதிப்புள்ள ஏக்கர் சொத்தும், குடும்பச் சொத்து வீடாக 2.72 லட்சம் ரூபாய் மதிப்பில் ஒரு வீடும், மனைவி விஜயலக்‌ஷ்மிக்கு 36,251 ரூபாய் ஆண்டு வருமானம் உள்ளதாகவும், ஓபிஎஸ் அவர்களுக்கு வருமான வரி செலுத்தும் அளவிற்குக் கூட வருமானம் இல்லை என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

 

 

2011 தேர்தலின் போது சொத்து மதிப்பு

2011 தேர்தலின் போது சொத்து மதிப்பு

2006-2011 காலக் கட்டத்தில் எதிர்க்கட்சியில் இவர் இருந்து இருந்தாலும் இவருடைய சொத்து மதிப்பு குறிப்பிடும்படி 2011-ம் ஆண்டுத் தேர்தலின் போது உயர்ந்து தான் இருந்தது. ஆனால் சில கடன்கள் சேர்க்கப்பட்டு இருந்தது. வாகன கடனாக 4 லட்சம் ரூபாயும், தனது மனைவி பெயரில் 8.5 லட்சம் ரூபாயில் தனிநபர் கடனும், 2.8 லட்சம் ரூபாய் வீட்டுக் கடனும், பிற கடன்களாக 15 லட்சம் ரூபாய் எனவும் மொத்தம் இவருடைய சொத்து மதிப்பு 20.81 லட்சத்தில் இருந்து 34.67 லட்சமாக உயர்ந்து இருந்தது.

சொத்து என்று பார்த்தால் விவசாய நிலம் 21.92 ஏக்கர்களாகவும், இதன் மதிப்பு 24.2 லட்சம் ரூபாய் என்றும், 10 லட்சம் மதிப்பில் ஒரு வீடும், பெரியகுளம் கூட்டுறவு வங்கியில் 7,600 பங்குகளும் இவர்களின் பெயரில் இருந்தது.

மேலும் வங்கி இருப்புத் தொகை மற்றும் நகையாக 10 லட்சம் ரூபாயும், மொத்த சொத்து மதிப்பாக 60.3 லட்சம் ரூபாயும் இவருக்கு இருந்தது. 2009-ம் ஆண்டு இவரது ஆண்டு வருமானமாக 3.62 லட்சம் ரூபாயாகக் கணக்கு காண்பித்து இருந்தார் ஓபிஎஸ்.

 

ஜெயலலிதாவிற்கு அடுத்த நிலை ஓபிஎஸ் தான்

ஜெயலலிதாவிற்கு அடுத்த நிலை ஓபிஎஸ் தான்

2011-2016ஆட்சிக் காலத்தில் ஜெயலலிதாவிற்கு அடுத்த நிலையில் ஓபெஸ் தான் இருந்து வந்தார். அதனால் தான் சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்ட போது முதல் பதவியை ஏற்றது ஓபிஎஸ் என்பது அனைவருக்கும் தெரியும்.

2016 தேர்தல்

2016 தேர்தல்

2016-ம் ஆண்டு ஆட்சி முடிவுக்கு வரும் போது ஓபிஎள் கோடிஸ்வரர் ஆகியிருந்தார். இவருடன் இண்ணோவா கார் ஒன்றும் சேர்ந்துகொண்டது. இவருடைய மனைவியின் பெயரில் மட்டும் 32 ஏக்கர்கள் சொத்துக்கள் சேர்ந்தது, இதன் மதிப்பு மட்டும் 78 லட்சம் ரூபாய்.

இப்படி அதிகரித்துக் கொண்டு சென்ற ஓபிஎஸ் அவர்களின் சொத்து மதிப்பு 1.53 கோடியாக 2016-ம் ஆண்டுத் தேர்தலின் போது உயர்ந்து இருந்தது.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

O Panneerselvam's family income, land holdings zoomed in last 10 years

O Panneerselvam's family income, land holdings zoomed in last 10 years
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X