ஐஸ்க்ரீம் விற்பனை செய்யும் முதலமைச்சர் மகன்.. என்ன நடக்கிறது தெலுங்கானவில்..?!

வியாபாரி ஆகிவிட்டார் என்று நினைத்துக்கொள்ள வேண்டாம், கூலி போன்று ஐஸ் க்ரீம் பார்லரி இதை விற்றுக் கட்சி நாள் கூட்டத்திற்காக நிதி திரட்டியுள்ளார்.

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தெலுங்கானா முதலமைச்சர் கே சந்திரசேகர ராவ் மகனும், ஐடி மற்றும் நகராட்சி நிர்வாக அமைச்சருமான கே டி ராமா ராவ் தனது கட்சி தெலுங்கானா ராஷ்டிரிய சமிதிக்காக ஐஸ் க்ரீம் மற்றும் பழரசங்கள் விற்று 7.5 லட்சம் ரூபாய்ச் சம்பாதித்துள்ளார்.

அதற்காக இவர் வியாபாரி ஆகிவிட்டார் என்று நினைத்துக்கொள்ள வேண்டாம், கூலி போன்று ஐஸ் க்ரீம் பார்லரி இதை விற்றுக் கட்சி நாள் கூட்டத்திற்காக நிதி திரட்டியுள்ளார்.

முதலீடு

முதலீடு

இதற்காக டிஆர்எஸ் அமைச்சர் மல்ல ரெட்டி 5 லட்சம் ரூபாய்க்கு ஐஸ் க்ரீமும், கட்சித் தலைவர் ஸ்ரீநிவாஸ் ரெட்டி 1 லட்சம் ரூபாயும் அளித்துள்ளனர்.

பழரச கடை

பழரச கடை

பழரச கடை ஒன்றில் ராமா ராவ் ஐஸ் க்ரீம் மற்றும் பழ ரசங்களைத் தங்களது கட்சி தலைவர்களுடன் சேர்ந்து விற்று முதல் நாளில் மட்டும் 1.30 லட்சம் ரூபாய்ச் சம்பாதித்துள்ளார்.

ஒரு வாரம் விற்கத் திட்டம்

ஒரு வாரம் விற்கத் திட்டம்

கட்சியின் அனைத்துத் தலைவர்களும், நிர்வாகிகளும் உறுப்பினர்களும் கூலிகளாக ஒரு வாரம் கூட்டத்திற்காக இது போன்று ஐஸ் க்ரீம் விற்று நிதி திரட்டி மாநாட்டை நடத்த முடிவு செய்துள்ளனர்.

கேசிஆர் அறிவிப்பு
 

கேசிஆர் அறிவிப்பு

டிஆர்எஸ் கட்சி தலைவர் மற்றும் தற்போதைய தெலுங்கானாவின் முதலமைச்சருமான சந்தசேகர ராவ் ஏப்ரல் 14 முதல் 20 -ம் தேதி வரை குல்பி கூலி நாள் என்று அறிவித்து அனைத்துக் கட்சி நிர்வாகிகளும் குறைந்தது இரண்டு நாட்கள் இந்தத் திட்டத்தில் பங்கேற்று நிதி திரட்டி பயணச் செலவு மற்றும் பிற செலவிற்குப் பயன்படுத்துங்கள் என்று அறிவுறுத்தியுள்ளார்.

முதலமைச்சர் கூலியாக ஐஸ் க்ரீம் விற்பார்

முதலமைச்சர் கூலியாக ஐஸ் க்ரீம் விற்பார்

முதலமைச்சர், அமைச்சர்கள், மாநிலங்களவை உறுப்பினர்கள் மற்றும் சட்ட மன்ற உறுப்பினர்கள் மற்றும் பிற கட்சித் தலைவர்கள் என அனைவரும் கூலியாக இரண்டு நாட்கள் பாரபட்சம் இல்லாமல் பணி புரிய வேண்டும்.

இரண்டு மாநாடுகள்

இரண்டு மாநாடுகள்

டிஆர்எஸ் கட்சி ஏப்ரல் 21-ம் தேதி ஹைதராபாத் அருகில் கொம்பல்லி மற்றும் மிகப் பெரிய கூட்டத்தை ஏப்ரல் 27-ம் தேதி வாராங்கள் கட்சி துவங்கப்பட்ட நாள் அன்று நடத்த முடிவு செய்துள்ளனர். இது போன்று தமிழ்நாட்டுக் கட்சிகளும் பொது மக்கள் மற்றும், வியாபாரிகளைத் தொந்தரவு செய்யாமல் நிதி திரட்டினால் நல்லது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Telangana CM's Son Earns Rs 7.5 Lakh by Selling Ice cream

Telangana CM's Son Earns Rs 7.5 Lakh by Selling Ice cream
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X