சமையல் எரிவாயு இறக்குமதியில் ஜப்பானை பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை பிடிக்கும் இந்தியா..!

சென்ற நிதி ஆண்டில் மட்டும் அதாவது 2016 ஏப்ரல் முதல் 2017 மார்ச் மாதம் வரையில் மட்டும் எரிவாயு இறக்குமதி 23 சதவீதம் அதிகரித்து தற்போது 11 மில்லியன் டன்களாக இறக்குமதி செய்யப்படுகின்றது.

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சமையல் எரிவாயு இறக்குமதியில் உலகளவில் இரண்டாம் இடத்தில் உள்ள ஜப்பானை பின்னுக்கு தள்ளி முதல் இடத்தைப் பிடிக்க இந்திய பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார், அதற்காக ஏழை மக்கள் அதிகம் பயன்படுத்தும் மண்ணெண்ணெய் உள்ளிட்ட எரிபொருட்களை நிறுத்திவிட்டுச் சமையல் எரிவாயு அளிக்க முடிவு செய்துள்ளார்.

சென்ற நிதி ஆண்டில் மட்டும் அதாவது 2016 ஏப்ரல் முதல் 2017 மார்ச் மாதம் வரையில் மட்டும் எரிவாயு இறக்குமதி 23 சதவீதம் அதிகரித்து தற்போது 11 மில்லியன் டன்களாக இறக்குமதி செய்யப்படுகின்றது என்று பெட்ரோலியம் திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வு செல் தெரிவித்துள்ளது.

ஜப்பான் இறக்குமதி

ஜப்பான் இறக்குமதி

ஜப்பான் இறக்குமதி 3.2 சதவீதம் சரிந்து 10.6 மில்லியன் டன்களாக உள்ளது என்றும் சீனாவின் இறக்குமதி குறையாமல் அப்படியே இருக்கின்றது என்றும் கூறப்படுகின்றது.

இலவச எரிவாயு இணைப்பு

இலவச எரிவாயு இணைப்பு

மோடி அரசு 2016 மே மாதம் இலவச எரிவாயு இணைப்பு வழங்கியதை அடுத்து ஏழை மக்களும் எரிவாயு அடுப்புகளை வாங்கிப் பயன்படுத்தி துவங்கிவிட்டனர். மாசு ஏற்படுத்தும் எரி பொருட்களை பயன்படுத்துவதினால் ஆண்டுக்கு 1.3 மில்லியன் அதாவது 13,00,000 லட்சம் ஏழைகள் இந்தியாவில் இருந்து இறப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கின்றது.

புதிய சரித்திரம்

புதிய சரித்திரம்

அதனால் 32.5 மில்லியன் சமையல் எரிவாயு இணைப்புகளைப் புதிதாக அளிப்பதினால் புதிய சரித்திரத்தை உருவாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இது ஒரு மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று சிங்கப்பூர் சார்ந்த எல்பிஜி குழுமத்தின் தலைவர் கூறியுள்ளார். இந்தியாவில் நாங்கள் இந்த அளவு எல்பிஜி எரிவாய் பயன்படுத்துவது அதிகரித்து நாங்கள் பார்த்ததில்லை என்றும், அடுத்த 20 ஆண்டில் இந்தியாவில் எரிவாயு தான் முதன்மையான எரிபொருளாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

 

200 மில்லியன் வாடிக்கையாளர்கள்

200 மில்லியன் வாடிக்கையாளர்கள்

இலவச எரிவாயு இணைப்பு கொடுத்ததால் மட்டும் 200 மில்லியன் வாடிக்கையாளர்கள் இந்தியாவில் பயன்படுந்துள்லதாகவிம், இது ஜப்பானின் மக்கள் தொகையான 60 சதவீதத்தை விட அதிகம் என்று கூறப்படுகின்றது.

80 சதவீத இலக்கு

80 சதவீத இலக்கு

இந்தியாவில் 2019-ம் ஆண்டுக்குள் 80 சதவீதம் மக்கள் எரிவாயு பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்திய அரசு செயல்பட்டு வருகின்றது. இப்போது இது 72.8 சதவீதமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஜப்பானின் புதிய திட்டம்

ஜப்பானின் புதிய திட்டம்

ஆனால் ஜப்பான் போன்ற நாடுகள் எரிவாயு இறக்குமதியைக் குறைத்து விட்டு மேலும் விலை குறைவான எரிபொருட்களை பயன்படுத்தவும், இயற்கை எரிவாய் உற்பத்தியிலும் கவனம் செலுத்தி வருகின்றன.

எது நல்லது

எது நல்லது

எரிவாயு சிலிண்டர்கள் இணைப்பு உயர உயர விலையும் அதிகரித்துக்கொண்டே தான் சென்று கொண்டு இருக்கின்றது. ஜப்பான் போன்ற நாடுகள் இறக்குமதியைக் குறைத்து இயற்கை எரிவாயுவையும் மாற்றும் எரிபொருட்களையும் தேடி செல்லும் போது நாம் கூடுதாலா க இறக்குமதி செய்வது நல்லது இல்லை என்றும் இதான் இந்தியாவின் பொருளாதாரம் பெறும் அளவில் பாதிக்கப்படும் என்றும், முடிந்த வரை நம் நாட்டிற் தேவையான எரிவாயுவை, நாமே தயார்செய்துகொள்ள வேண்டும் என்றும், இயற்கை எரிவாயு பயன்படுத்துவதை ஊக்குவிக்க வேண்டும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

மீண்டும் இலவச சிலிண்டர்

மீண்டும் இலவச சிலிண்டர்

மோடி அரசின் இந்த அதிரடி திட்டத்தினால் மீண்டும் இலவச எரிவாயு இணைப்பு அறிவிப்பு வெளிவரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

PM Modi's Push To Make Kitchens Safer Makes India No 2 LPG Importer

PM Modi's Push To Make Kitchens Safer Makes India No 2 LPG Importer
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X