ரெண்டு இட்லி 4 சட்னி.. தூத்துக்குடி ராஜகோபால்-இன் 'saravana bhavan'..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒருவர் ராஜகோபாலிடம் மதிய உணவைச் சாப்பிட டி. நகருக்குச் செல்ல வேண்டியிருக்கிறது ஏனென்றால் கே.கே நகரில் ஒரு ஹோட்டல் கூட இல்லை என்று வருத்தப்பட்ட போது திரு. P.ராஜகோபால் ஒரு ஹோட்டலை தொடங்கினார். இப்போது அது தென்னிந்தியாவிலிருந்து உலகம் முழுவதும் ஒரு மிகப்பெரிய ஹோட்டல்களின் சங்கிலித் தொடராக வளர்ந்துள்ளது.

 

வெற்றிக்கான அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியுள்ளதால் P. ராஜகோபாலின் கதையைக் கேட்கும் போது ஒரு திரைப்படத்தில் இருந்து நேரடியாக வெளியில் வந்ததைப் போன்ற உணர்வு வருகிறது.

அடிமட்டத்திலிருந்து பிரமிக்கத்தக்க வளர்ச்சி, ஒரு தனி மனித சாம்ராஜ்யம், குற்றம், கட்டுக்கடங்கா உணர்ச்சி, அதிகாரம் என மற்றும் பல முழுமையான விஷயங்களைக் கொண்டது இவரது வாழ்க்கை. இவருடையது தான் தென்னிந்திய பிரசித்தி பெற்ற saravana bhavan.

சரவணப் பவன்

சரவணப் பவன்

தற்போது சரவணப் பவனுக்கு இந்தியாவில் 33 க்கும் அதிகமான கிளைகளும் மற்றும் கடல் கடந்து வெளிநாடுகளில் 47 கிளைகளும் உள்ளன. அவர் தனது சுயசரிதையில் "நான் எனது இதயத்தை வெற்றியின் மீது பொருத்திவிட்டேன்" என்று கூறுகிறார்.

குழந்தைப்பருவம்

குழந்தைப்பருவம்

1947 - ஆம் ஆண்டு ஒரு மண் குடிசையில் பிறந்த ராஜகோபால் தமிழ்நாட்டிலுள்ள புன்னையாடி என்ற கிராமத்திலிருந்து வந்தவர். அவருடைய கிராமத்தில் ஒரு பேருந்து நிறுத்தம் கூட இல்லை.

ஏழாம் வகுப்போடு அவர் பள்ளிப் படிப்பிலிருந்து நின்று விட்டார். வயிற்றுப் பிழைப்புக்கு சம்பாதிப்பதற்காக ஒரு ஹோட்டலில் வேலைக்குச் சேர்ந்தார். மேசைகளைத் துடைக்கும் வேலையைச் செய்து அங்கேயே தரையில் தூங்குவாராம் ராஜகோபால்.

 

டீ - சாமானியர்களின் ரத்தம்
 

டீ - சாமானியர்களின் ரத்தம்

மெதுவாக டீ போட கற்றுக் கொண்டார். விரைவில் ராஜகோபால் ஒரு மளிகைக் கடையில் உதவியாளராக வேலைக்குச் சேர்ந்தார். அங்கு வேலையில் கிடைத்த அனுபவத்தைக் கொண்டு ராஜகோபால் அவருடைய அப்பா மற்றும் மைத்துனரின் உதவியோடு சொந்தமாக ஒரு மளிகைக் கடையைத் திறந்தார். வியாபாரத்தில் அதுவே அவரது முதல் அனுபவம்.

முதல் அனுபவம்.

முதல் அனுபவம்.

கடையை நடத்த அவர் நிறையச் சவால்களைச் சந்தித்தார். திட்டமிட்டபடி வேலைகள் நடக்கவில்லை, இளைஞரான ராஜகோபாலுக்கு ஒரு கடையை நடத்துவதென்பது மிகவும் கடினமாக இருந்தது.

ஆனாலும் அவர் தனது மனோதிடத்தால் எல்லாச் சவால்களையும் ஜெயித்தார். பிறகு அவரது நிலைமை மேம்பட ஆரம்பித்தது.

 

மளிகைக் கடை

மளிகைக் கடை

1979 ஆம் ஆண்டு அவரது மளிகைக் கடையில் ஒரு விற்பனையாளருடன் மேலே சொல்லப்பட்ட உரையாடல் நடந்தது. இந்த உரையாடல் தான் 1981 ஆம் ஆண்டுச் சரவணபவன் பிறப்பதற்குக் காரணமானது.

அந்தக் காலத்தில் வெளியே சாப்பிடுவது நாகரிகம் என்பதை விட அத்தியாவசியமாக இருந்தது. வெளியிடங்களில் சாப்பாட்டிற்கு இருந்த தேவையை உணர்ந்த ராஜகோபால் அந்த வியாபாரத்தில் குதித்தார்.

 

தரம் மற்றும் வாடிக்கையாளரின் திருப்தி

தரம் மற்றும் வாடிக்கையாளரின் திருப்தி

ஆரம்பகாலம் முதலே ராஜகோபால் உணவின் சிறந்த தரம் மற்றும் வாடிக்கையாளரின் திருப்தி ஆகியவற்றின் மீது கவனம் செலுத்தினார். இப்போது இருப்பது போல இந்த வார்த்தைகளெல்லாம் முக்கிய நடைமுறையாக ஹோட்டல்களில் இல்லாத ஒரு காலத்திலேயே அவர் அதையெல்லாம் கடைபிடித்தார்.

நஷ்டம்

நஷ்டம்

அவரிடம் மட்டமான சமையல் பொருட்களைப் பயன்படுத்தும்படியும் மற்றும் பணியாளர்களுக்குக் குறைந்த சம்பளத்தைக் கொடுக்கும்படியும் ஆலோசனை கூறிய ஒருவரை ராஜகோபால் திட்டி அனுப்பி விட்டார்.

தொடக்கக் காலத்தில் சிறந்த தரமான உணவை கொடுப்பதற்காக ஹோட்டலை நஷ்டத்திற்கு நடத்த வேண்டி வந்தது. ஒவ்வொரு மாதமும் சுமார் ரூபாய் 10,000 நஷ்டமடைந்தார். ஆனால் காலப்போக்கில் அவருடைய நற்பெயர் வளர்ந்து நஷ்டங்கள் லாபங்களாக மாறின.

 

நெறிமுறைகள் மற்றும் பணியாளர்கள்

நெறிமுறைகள் மற்றும் பணியாளர்கள்

சரவணபவனின் வெற்றியின் ரகசியம் நல்ல தரமான உணவை பரிமாறுவதில் மட்டுமில்லை. அங்கு வேலை செய்யும் பணியாளர்களை அக்கறையுடன் கவனித்துக் கொள்வதிலும் மற்றும் பணியிடத்தின் உயர் தரத்திலும் உள்ளது.

வாழை இலை

வாழை இலை

ராஜகோபால் தட்டின் மீது வாழையிலையைப் பரப்பி அதன் மீது உணவு பரிமாறும் பழக்கத்தைத் தொடங்கினார். அது ஏற்கனவே வேறொருவர் சாப்பிட்ட தட்டில் சாப்பிடுகிறோமே என்கிற வாடிக்கையாளர்களின் சஞ்சலத்தைப் போக்கியதோடு பணியாளர்களுக்குத் தட்டுக்களைக் கழுவும் வேலையையும் சுலபமாக்கியது.

பணியாளர்கள் மீது கவனம்

பணியாளர்கள் மீது கவனம்

ராஜகோபால் உணவில் முடி விழுந்திருக்கிறது என்கிற புகார்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து வராமலிருக்கப் பணியாளர்களுக்கு மாதம் ஒருமுறை தலைமுடியை வெட்டச் செய்தார்.

மேலும் அது பணியாளர்களுக்குக் கண்ணியமான தோற்றத்தையும் அளித்தது. அடுத்த நாள் காலையில் வேலையைப் பாதிக்கும் என்பதால் பணியாளர்களில் யாரும் பின்னிரவு நேரங்களில் சினிமா பார்க்க அனுமதிக்கப்படவில்லை.

 

நல்ல மனிதர்

நல்ல மனிதர்

ராஜகோபால் செய்த முதல் விஷயம் அவரது பணியாளர்களுக்கு அளித்த வேலை பாதுகாப்பு. அவர் தனது பணியாளர்களுக்குத் தங்குமிட வசதியை அளித்தார் மற்றும் அவர்களின் சம்பளத்தையும் உயர்த்தினார்.

மேலும் அவர் கிராமத்தில் குடும்பங்களை உடைய பணியாளர்கள் அவர்களின் குடும்பங்களைப் பார்த்து வருவதற்காக வருடாந்திர ஊக்கத் தொகையையும் கொடுத்தார். ஒவ்வொரு திருமணமான பணியாளருக்கும் இரண்டு குழந்தைகள் வரை கல்வி உதவியை அளித்தார். ஒரு பணியாளருக்கு உடம்பு சரியில்லை என்றால் அவரைக் கவனித்துக் கொள்ள இரண்டு பேரை அனுப்பினார்.

 

உற்பத்தி திறன்

உற்பத்தி திறன்

ஒரு பணியாளரின் நலன் அவருடைய குடும்ப நலத்தில் உள்ளது. உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்காகப் பணியாளர்களையும் அவரது குடும்பத்தையும் கவனித்துக் கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.

படிப்படியான உயர்வு

படிப்படியான உயர்வு

இப்படித் தொடர்ந்து சிறப்பான முயற்சி மற்றும் திட்டங்களுடன் சென்னை கேகே நகரில் 14-12-1981ஆம் ஆண்டுத் துவங்கப்பட்ட சரவணபவன் இன்று உலகின் பல இடங்களிலும் விரிவடைந்து தற்போது 91 கிளைகளுடன் வெற்றிச் சாம்ராஜியமாக உள்ளது.

கடைசியாகச் சரவணபவன் 04-03-2016ஆம் ஆண்டு நெதர்லாந்து, ஆம்ஸ்டரடேம் பகுதியல் தனது 9வது கிளையைத் திறந்ததுள்ளது.

 

700 மில்லியன் டாலர்

700 மில்லியன் டாலர்

தூத்துக்குடியில் இருந்து வந்த இளைஞன் சென்னையில் துவங்கிய முதல் ஹோட்டல் வெற்றியின் மூலம் இன்று சரவணபவன் நிறுவனத்தின் மொத்த மதிப்பு 700 மில்லியன் டாலர்.

ஆயுள் தண்டனை

ஆயுள் தண்டனை

2009 ஆம் ஆண்டுச் சாந்த குமார் என்பவரை கொலை செய்த குற்றத்திற்காக ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

காதல் கதை

காதல் கதை

சாந்தகுமார், ராஜகோபாலின் உதவி மேலாளர்களில் ஒருவருடைய மகளான ஜீவஜோதி என்பவருடைய நெருங்கிய நண்பர். ராஜகோபால் ஜீவஜோதியை திருமணம் செய்து கொள்ள விரும்பினார்.

ஆனால் ஜீவஜோதியோ சாந்தகுமார் மீது ஆர்வமாக இருந்தார். பலமுறை எச்சரித்த பின்பும் அவர்கள் சந்திப்பதை நிறுத்தவில்லை. இந்நிலையில் சாந்தகுமார் கடத்தப்பட்டார்.

சில நாட்களுக்குப் பின்னர்ச் சாந்தகுமாரின் உடல் கொடைக்கானல் மலைத்தொடர்களுக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டது. ராஜகோபால் தான் கொலை செய்தார் என்பதற்குச் சாட்சியம் இல்லாததால் ஜாமீனில் அப்போது விடுவிக்கப்பட்டார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

The Saravana Bhavan Story

The Saravana Bhavan Story
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X