ஐடி ஊழியர்கள் பணிநீக்கத்தில் அதிகம் பாதிக்கப்படப்போவது இவர்கள்தான்..!

By Krishnamoorthy
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: 150 பில்லியன் டாலர் வர்த்தகச் சந்தையை உடைய இந்திய ஐடி நிறுவனங்கள் கடந்த 10 வருடத்தில் செய்திடாத வகையில் தற்போது ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.

 

இதனால் ஒட்டுமொத்த ஐடி உலகமே ஆடிப்போய் உள்ள நிலையில், உண்மையிலேயே யாருக்குப் பிரச்சனை..? ஐடி நிறுவனங்கள் யாரை முதலில் நிறுவனத்தை விட்டு வெளியேற்றும்..?

ஊழியர்கள் பணிநீக்கம்

ஊழியர்கள் பணிநீக்கம்

அமெரிக்காவில் துவங்கி, ஆஸ்திரேலியா, பிரிட்டன், நியூசிலாந்து, சிங்கப்பூர் ஆகிய பல நாடுகள் எடுத்த முக்கிய நடவடிக்கையால் இந்தியாவில் ஐடித்துறை மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

உண்மையில் இதற்கு அமெரிக்கா மட்டும் காரணமில்லை என்பதை முதலில் நாம் உணரவேண்டும்.

யாருக்கு ஆபத்து..?

யாருக்கு ஆபத்து..?

தற்போது இருக்கும் சூழ்நிலையில் இந்திய ஐடி நிறுவனங்கள் ஊழியர்களின் பணிநீக்கத்தின் வாயிலாக அதிகளவிலான செலவுகளைக் குறைப்பதே திட்டம்.

இதன் வாயிலாக இத்துறை ஆட்குறைப்பில் முதலில் பாதிக்கப்படப்போவது 10 முதல் 20 வருடம் அனுபவம் கொண்ட மிட் மற்றும் சீனியர் ஊழியர்கள் தான். சில மாதங்களுக்கு அடிமட்ட ஊழியர்களும் இதில் பாதிக்கப்படுவார்கள்.

காக்னிசென்ட்
 

காக்னிசென்ட்

இது அமெரிக்க நிறுவனமாக இருந்தாலும் இந்தியாவில் அதிகளவிலான ஊழியர்களைப் பணியில் அமர்த்தித் தனது வர்த்தகத்தை நடத்தி வருகிறது.

விப்ரோ நிறுவனத்திற்கு முன்னதாகவே ஜனவரி மாதத்தில் காக்னிசென்ட் தனது ஆட்குறைப்புக் குறித்துச் செய்திகளை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

1000 உயர் அதிகாரிகள்

1000 உயர் அதிகாரிகள்

இந்திய ஐடி நிறுவனங்களில் சிறப்பாக இயங்கும் நிறுவனமான காக்னிசென்ட் கடந்த வாரம் நிர்வாகத் தலைவர்கள், அசோசியேட் விபி, சீனியர் விபி ஆகியோருக்கு விஆர்எஸ்-ஐ பரிந்துரை செய்தது. இதுமட்டும் அல்லாமல் உயர் நிர்வாகப் பணிகளில் இருக்கும் 1000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது காக்னிசென்ட்.

ஜனவரி மாதத்தில் இந்நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில் இந்தியாவில் மட்டும் சுமார் 6000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யப்பட உள்ளதாக அறிவித்திருந்தது. இதில் இந்த 1000 உயர் நிர்வாக அதிகாரிகளும் அடக்கம்.

புகார்

புகார்

காக்னிசென்ட் நிறுவனத்தின் பணிநீக்கம் குறித்து இந்நிறுவனத்தின் 10 ஊழியர்கள் Forum for IT Employees அமைப்பின் வாயிலாக, ஊழியர்களைக் கட்டாய விஆர்எஸ் வாங்க வைப்பதாக நிர்வாகத்திற்கு எதிராக ஊழியர்கள் அமைப்புக் கமிஷ்னரிடம் புகார் அளித்துள்ளது.

கடந்த வருடம் டிசிஎஸ் நிறுவனத்தில் ஊழியர்கள் பணிநீக்கத்திற்கு எதிராகக் குரல் கொடுத்து உதவியதில் Forum for IT Employees அமைப்பிற்கு மிகப்பெரிய பங்கு உண்டு.

இன்போசிஸ்

இன்போசிஸ்

நாட்டின் முன்னணி மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான இன்போசிஸில் லெவல் 6 மற்றும் அதற்கு மேற்பட்ட பதவிகளில் இருக்கும் சுமார் 1000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய இன்போசிஸ் முடிவு செய்துள்ளது.

லெவல் 6 மற்றும் அதற்கு மேற்பட்ட பதவிகளில் குரூப் பிராஜெக்ட் மேனேஜர், பிராஜெக்ட் மேனேஜர், சீனியர் ஆர்கிடெக்ட் மற்றும் உயர் நிர்வாகத் தலைவர்கள் இருப்பார்கள். மேலும் அவர்கள் அனைவரும் செயல்திறன் அடிப்படையில் வெளியேற்றப்பட உள்ளனர்.

விப்ரோ

விப்ரோ

விப்ரோ நிறுவனத்தின் சிஇஓ அபித் அலி நீமுச்வாலா நிறுவனத்தின் ஒரு ஆலோசனை கூட்டத்தில் பேசியபோது, வருவாய் அதிகரிக்கவில்லை என்றால் 10 சதவீதம் வரை ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

விப்ரோ நிறுவனத்தில் தற்போது 1.81 லட்சம் ஊழியர்கள் இந்தியா மற்றும் உலக நாடுகளில் பணியாற்றி வருகின்றனர்.

கேப்ஜெமினி

கேப்ஜெமினி

ஆட்குறைப்பு பற்றி இதுவரை பேசாமல் இருந்த கேப்ஜெமினி, தற்போது இந்தியாவில் மட்டும் சுமார் 9,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யப்பட உள்ளதாக அறிவித்துள்ளது. இந்தியாவில் ஐகேட் நிறுவனத்தைக் கைப்பற்றியதன் மூலம் இந்திய சந்தையில் அதிகளவிலான ஊழியர்களைப் பெற்றது கேப்ஜெமினி.

பிப்ரவரி மாதத்தில் இந்நிறுவனம் சத்தமில்லாமல் 35 VP, SVPs, directors மற்றும் senior directors ஆகியோரை வெளியேறியுள்ளது. அதேபோல் மும்பை அலுவலகத்தில் 200க்கும் அதிகமான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது பேக்ஜெமினி.

வளர்ச்சியில் தொய்வு

வளர்ச்சியில் தொய்வு

இந்திய ஐடி துறையில் காக்னிசென்ட், இன்போசிஸ், டிசிஎஸ் ஆகிய நிறுவனங்களின் வளர்ச்சி மிகப்பெரிய அளவில் குறைந்துள்ளது.

ஏன் இந்தத் திடீர் முடிவு..??

ஏன் இந்தத் திடீர் முடிவு..??

இந்திய ஐடி சந்தையின் 60 சதவீத வருவாய் அமெரிக்கச் சந்தையை மட்டுமே நம்பியுள்ளது. இது நிறுவனங்கள் வாரியாகச் சில மாற்றங்கள் இருந்தாலும், அனைத்து முன்னணி ஐடி நிறுவனங்களுக்கும் அமெரிக்கச் சந்தை தான் முக்கியமானவை. எனவே அமெரிக்க அரசு நிலைப்பாட்டின் படியே இந்திய ஐடித்துறையும் இருக்கும்.

டொனால்டு டிரம்ப்

டொனால்டு டிரம்ப்

அமெரிக்காவின் புதிய அதிபரான டொனால்டு டிரம்ப் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ஆர்டர் கொடுக்கும் அமெரிக்க நிறுவனங்களுக்கு அதிக வரி விதிப்பு, பை அமெரிக்கன் ஹயர் அமெரிக்கன் ஒப்பந்த்தில் கையெழுத்து, ஹெச்1பி விசா வழங்குவதில் கடுமையான கட்டுப்பாடு ஆகியவை இந்திய ஐடி நிறுவனங்களை மிகப்பெரிய அளவில் பாதித்துள்ளது.

அமெரிக்க ஊழியர்கள்

அமெரிக்க ஊழியர்கள்

இதனால் அமெரிக்காவில் அந்நாட்டு மக்களை அதிகமானோரைப் பணியில் அமர்த்தித் தனது வரத்த்கத்தைத் தொடர்ந்து எவ்விதமான பாதிப்பும் இன்றி இயக்க இந்திய ஐடி நிறுவனங்கள் முடிவு செய்துள்ளது.

இதன் மூலம் அமெரிக்கக் குடிமக்களுக்கு இந்தியர்களின் வேலைவாய்ப்பைத் தாரைவார்ப்பது மட்டுமின்றி, அவர்களுக்கு அளிக்கப்படும் அதிகப்படியான சம்பளத்தை வருவாய் கணக்கில் ஈடு செய்ய இந்தியாவில் இருக்கும் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யப்பட வேண்டிய சூழ்நிலையில் இந்திய ஐடி நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளது.

2020இல்

2020இல்

மேலும் ஐடி துறையில் செயற்கை நுண்ணறிவு, ஆட்டோமேஷன் ஆகியவற்றை அதிகளவில் பயன்படுத்தவதன் மூலம் 2020ஆம் ஆண்டுக்குள் தற்போது இருக்கும் ஊழியர்கள் எண்ணிக்கையை விடச் சுமார் 20 முதல் 30 சதவீதம் வரையிலான வேலைவாய்ப்புகள் குறையும் எனப் பல ஆய்வு நிறுவனங்கள் தெரிவித்துள்ளது.

யூனியன் அமைக்க உரிமை உண்டு

யூனியன் அமைக்க உரிமை உண்டு

ஐடி ஊழியர்கள் யூனியன் அமைக்க உரிமை உண்டு: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

ஐடி ஊழியர்களே!

ஐடி ஊழியர்களே!

ஐடி ஊழியர்களே! உங்கள் வேலையை பறிபோகாமல் தற்காத்து கொள்வது எப்படி?

புதிய வாய்ப்புகள்

புதிய வாய்ப்புகள்

என்ஆர்ஐ-களுக்கு வலைவீசும் 'ரஷ்யா'.. ஐடி ஊழியர்களுக்கு யோகம்..!

இந்தியர்களை குறிவைக்கும் 'சீனா'.. ஐடி ஊழியர்களுக்கு அடித்தது 'ஜாக்பாட்'..!

ஒரே வருடத்தில் 'ஜப்பான்' குடியுரிமை.. இந்தியர்களுக்கு அடித்தது 'மற்றொரு' ஜாக்பாட்..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Indian IT companies ready for large layoffs

Indian IT companies ready for large layoffs - Tamil Goodreturns | ஐடி ஊழியர்கள் பணிநீக்கத்தில் அதிகம் பாதிக்கப்படப்போவது இவர்கள்தான்..! - தமிழ் குட்ரிட்டன்ஸ்
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X