வேலை செஞ்சா 'இங்க'தான் செய்யனும்.. இந்தியர்களின் கனவு இலக்கு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் மிகப் பெரிய இ-காமர்ஸ் நிறுவனம், உலகின் மிகப் பெரிய கன்சல்டிங் நிறுவனம் மற்றும் கல்லூரி படிப்பைக் கூட முடிக்காத 23 வயது உடையவர் நடத்தும் ஹாஸ்பிடாலிட்டி நிறுவனம் ஆகியவற்றிற்கு இடையில் உள்ள ஒரு ஒற்றுமை என்ன தெரியுமா?

 

இந்த நிறுவனங்களில் எல்லாம் இந்திய பட்டதாரிகள் அதிக விருப்பத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர். உலகளவில் வேலை செய்வதற்கு ஏற்ற ஆல்ப்பாபெட் முதல் அடோப் உள்ளிட்ட டாப் 10 நிறுவனங்கள் பட்டியலைப் போன்று இந்தியாவில் வேலை செய்வதற்கு ஏற்ற 25 நிறுவனங்கள் பட்டியலை லின்கிடுஇன் இணையதளம் வெளியிட்டுள்ளது.

லின்கிடுஇன் நிறுவனத்தின் இந்தப் பட்டியல் 500 மில்லியனுக்கும் மேற்பட்ட உறுப்பினர்களிடம் இருந்து பெறப்பட்ட விவரங்களை வைத்து தயார் செய்யப்பட்டுள்ளது.

பிளிப்கார்ட்

பிளிப்கார்ட்

இந்தியாவின் மிகப் பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இந்தியாவில் வேலை செய்வதற்கு ஏற்ற நிறுவனங்கள் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. 10 வருடமாக இயங்கி வரும் இந்த நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியர்கள் உட்பட 30,000 ஊழியர்கள் பணிபுரிகின்றனர். 2017-ம் ஆண்டில் மட்டும் 3,000 முழு நேர மற்றும் தற்காலிக தொழிலாளர்களைப் பிளிப்கார்ட் நிறுவனம் பணிக்கு எடுக்க இருக்கின்றது.

அமேசான் இந்தியா

அமேசான் இந்தியா

பிளிகார்ட்டின் போட்டி நிறுவனம் மற்றும் உலகின் மிகப் பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் இந்த ஆண்டும் 2-ம் இடத்தைப் பிடித்துள்ளது.

அமேசான் நிறுவனத்தில் இந்தியாவில் 10,000 நபர்கள் பணிபுரிகின்றனர். அமேசான் நிறுவனம் கூடுதலாக இந்தியாவில் அமேசான் பிரைம் வீடியோ சேவையும் அளித்து வருகின்றது. அதற்காக 2016-ம் ஆண்டு 5 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

 

கேபிஎம்ஜி இந்தியா
 

கேபிஎம்ஜி இந்தியா

மேனேஜ்மெண்ட் கன்சல்டண்ட் நிறுவனமான கேபிஎம்ஜி இந்தியா 2,700 நிறுவனங்களுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்குத் தணிக்கை, ஆலோசனை மற்றும் வரிச் சேவைகள் போன்றவற்றை அளித்து வருகின்றது. உலகளவில் இந்த நிறுவனத்தில் 189,000 ஊழியர்கள் பணியில் உள்ளனர்.

இந்தியாவில் சண்டிகர், குர்கான், நொய்டா, அகமதாபாத், வதோதரா, மும்பை, புனே, பெங்களூரு, கொச்சி, சென்னை, ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களில் இருந்து இந்த நிறுவனம் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

 

ஒன்97 கம்யூனிகேஷன்ஸ்

ஒன்97 கம்யூனிகேஷன்ஸ்

ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் பேமெண்ட் மற்று இ-காமர்ஸ் தளத்தில் பேடிஎம் என்ற பெயரில் மிகவும் பிரபலமான நிறுவனமாகும். பிரதமர் மோடியின் செல்லா ரூபாய் அறிவிப்பின் போது அதனைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு பல விதமான பரிவர்த்தனைகளை அறிமுகப்ப்டுத்தி 200 மில்லியன் வாடிக்கையாளர்களுடன் வாலெட் வணிகத்தில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

மேலும் அன்மையில் கனடாவில் தனது வணிகத்தை விரிவு படுத்திய பேடிஎம் 55 ஊழியர்களுடன் டொரண்டொவில் செயல்பட்டு வருகின்றது. இந்தியாவில் 13,000 ஊழியர்களும் செயல்பட்டு வரும் பேடிஎம் நிறுவனம் சில தினங்களில் பேமெண்ட்ஸ் வங்கி சேவையை அளிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

ஓலா

ஓலா

இந்தியாவில் செயலி மூலமாக டாக்ஸி சேவையில் பேர் போன நிறுவனம் என்றால் அது ஓலா நிறுவனம் ஆகும். ஓலா இந்தியா நிறுவனம் டாக்ஸி மட்டும் இல்லாமல் ஆட்டோ வாடகை சேவை மற்றும் மொபைல் பேமெண்ட்ஸ் சேவை அளிக்கின்றது. இந்த நிறுவனத்தில் 6,000 ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.

எச்சிஎல் டெக்னாலஜிஸ்

எச்சிஎல் டெக்னாலஜிஸ்

இந்தியாவின் முக்கியமான ஐடி சேவை மற்றும் கணினி தயாரிப்பு நிறுவனமான எச்சிஎல் மென்பொருள் துறையில் 4வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்த நிறுவனத்தில் 111,000 ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.

அடோப்

அடோப்

அமெரிக்காவின் அடோப் நிறுவனம் தாங்கள் சேவை அளிக்கும் பிற நாடுகளை விட இந்தியாவில் வேகமாக வளர்ந்து வருகின்றொம் என்று கூறியுள்ளது. போட்டோஷாப், இண்டிசைன் உள்ளிட்ட மென்பொருட்களைத் தயாரிக்கும் இந்த நிறுவனத்தின் இந்திய பிரிவில் 1,500 நபர்கள் சென்ற ஆண்டுப் பணியில் சேர்ந்துள்ளனர். அடோப் இந்தியாவில் மொத்தமாக 4,500 ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.

ஆல்பாபெட்

ஆல்பாபெட்

ஆல்பாபெட் என்று கூறுவதை விடக் கூகுள் என்று கூறும் போது அனைவருக்கும் இந்த நிறுவனம் என்ன என்று தெரிந்திருக்கும். கூகுள் என்ற வார்த்தை இந்திய அளவில் பிரபளாம வார்த்தையாகவே இன்று மாறிவிட்டது. அதுமட்டும் இல்லாமல் யூடியூப் சேவை மூலமாக வீடியா சேவையும் இந்த நிறுவனம் அளித்து வருகின்றது. கூகுள் இந்தியாவில் 72,000 ஊழியர்கள் பணியில் உள்ளனர்.

ஓயோ ரூம்ஸ்

ஓயோ ரூம்ஸ்

சென்ற ஆண்டு 16 வது இடத்தைப் பிடித்து இருந்த ஓயோ ரூம்ஸ் ஹாஸ்பிடாலிட்டி நிறுவனம் இந்த ஆண்டு 9 வது இடத்தைப் பிடித்துள்ளது.வேகமாக வளர்ந்து வரும் இந்த நிறுவனம் 2017-ம் ஆண்டில் 4,000 ஊழியர்களைப் பணிக்கு எடுக்கவும் நேப்பால் மற்றும் மலேசியாவில் தங்களது சேவையைத் துவங்கும் முடிவிலும் உள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

ரிலையன்ஸ் நிறுவனம் ரீடெய்ல், எண்ணெய் போன்றவற்றுக்குப் பேர் போன நிறுவனம் என்பது மட்டும் இல்லாமல் தொலைத்தொடர்பு துறையிலும் ஜியோ என்ற பெஉயரில் இலவசங்களால் ஒரு புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிறுவனத்தில் 50,000 ஊழியர்கள் பணிபுரிகின்றனர். மேலும் இந்த ஆண்டு ஜியோ ஃபைபர் மற்றும் ஜியோ டிடிஎச் போன்ற சேவைகளையும் ரிலையன்ஸ் அளிக்க முடிவு செய்துள்ளது.

கேப்ஜெமினி

கேப்ஜெமினி

பிரான்ஸ் சார்ந்த ஆலோசனை, தொழில்நுட்பம் மற்றும் அவுட்சோர்ஸிங் நிறுவனம் 2017-ம் ஆண்டு 20,000 ஊழியர்களைப் பணிக்கு எடுக்க இருக்கின்றது, இந்திய ஐடி நிறுவனங்களில் இது ஒரு வேகமான வளர்ச்சி அடைந்து நிறுவனமாகவும் பார்க்கப்படுகின்றது. இந்த நிறுவனத்தில் இந்தியாவில் மட்டும் 100,000 ஊழியர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அக்சன்சர்

அக்சன்சர்

உலகத் தொழில்முறை சேவைகள் நிறுவனமான அக்சன்சர், 120 க்கும் அதிகமான நாடுகளில் வாடிக்கையாளர்களுக்குச் சேவை அளித்து வருகின்றது, இன்றைய டிஜிட்டல் பொருளாதாரத்தில் தங்கியுள்ள மாற்றுத் தீர்வுகளை அவர்கள் கண்டறியும் நிறுவனமாக அக்சன்சர் உள்ளது. இந்தியாவில் மட்டும் இந்த நிறுவனத்தில் 140,000 ஊழியர்கள் பணியில் உள்ளனர்.

டெலாய்ட் இந்தியா

டெலாய்ட் இந்தியா

இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனங்களில் கணக்களை எல்லாம் நிர்வகிக்கும் நிறுவனமாக டெலாய்ட் இந்தியா இந்தியா உள்ளது. இந்த நிறுவனத்தில் உலகளவில் 244,400 ஊழியர்கள் பணியில் உள்ளனர்.

டெக் மகேந்திரா

டெக் மகேந்திரா

சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனம் செய்தல் ஊழலினை அடுத்து அந்த நிறுவனத்தைக் கைப்பற்றும் போது முதல் டெக் மகேந்திரா மிகவும் பிரபலமானது. டெக் மகேந்திரா நிறுவனம் இந்தியாவின் 5 மிகப் பெரிய ஐடி நிறுவனமாக உள்ளது. இந்த நிறுவனத்தில் உலகளவில் 117,000 ஊழியர்கள் பணியில் உள்ளனர்.

ஸ்விகி

ஸ்விகி

செயலி மூலமாக உணவு டெலிவரி செய்யும் இந்த நிறுவனம் தினமும் 90,000க்கும் அதிகமான உணவு டெலிவரி ஆடர்களைப் பெறுகின்றது. தற்போது இந்த நிறுவனத்தில் 1,000 ஊழியர்கள் பணியில் உள்ளனர். 2017-ம் ஆண்டுக் கூடுதலாக 300 ஊயர்களைப் பணிக்கு அமர்த்தும் முடிவில் ஸ்விகி உள்ளது.

சிஸ்கோ

சிஸ்கோ

கோர் ரவுட்டர் மற்றும் ஸ்விட்ச் வணிகத்தில் இருந்து மாற இருக்கும் சிஸ்கோ அன்மையில் 3.7 பில்லியன் டாலர் அளித்து ஆப் டைனமிக்ஸ் நிறுவனத்தைக் கைப்பற்றியுள்ளது. அதுமட்டும் இல்லாமல் விரைவில் ஐபிஓ மூலமாக நிதி திரட்டவும் முடிவு செய்துள்ளது. சிஸ்கோ நிறுவனத்தில் 73,000 ஊழியர்கள் பணியில் உள்ளனர். வரும் காலாண்டுகளில் 3,200 ஊழியர்களைப் பணிக்கு எடுக்கும் முடிவில் சிஸ்கோ உள்ளதாகக் கூறப்படுகின்றது

ஐடிஎப்சி வங்கி

ஐடிஎப்சி வங்கி

2015-ம் ஆண்டுத் துவங்கப்பட்ட ஐடிஎப்சி வங்கி டிஜிட்டல் வங்கி சேவையை அளித்து வருகின்றது. இந்த நிறுவனத்தில் இப்போது 4,000 ஊழியர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.சென்ற ஆண்டு ஐடிஎப்சி நிறுவனம் டிவிட்டர் மூலமாக ரெஸ்யூகள் பெற்றது குறிப்பிடத்தக்கது. அதே போன்று இந்த ஆண்டும் 1500 ஊழியர்களைப் பணிக்கு எடுக்க ஐடிஎப்சி வங்கி முடிவு செய்துள்ளது.

விப்ரோ

விப்ரோ

ஐடி அவுட்சோர்சிங் சேவை வழங்குவதில் உலகப் புகழ் பெற்ற விப்ரோ நிறுவனம் வாடிக்கையாளர்களின் தேவைவை வேகமாகப் பூர்த்திச் செய்யும் நிறுவனம் ஆகும். சென்ற ஆண்டு மட்டும் 39,600 ஊழியர்களுக்குப் பைதான் மற்றும் ஜாவா உள்ளிட்ட பிற கணினி மொழிகளில் பயிற்சியை அளித்துள்ளது. விப்ரோ நிறுவனத்தில் மொத்தம் 170,000 ஊழியர்கள் பணியில் உள்ளனர்.

டாடா கம்யூனிகேஷன்ஸ்

டாடா கம்யூனிகேஷன்ஸ்

டாடா டெலி கம்யூனிகேஷன் நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாகப் பல சிக்கலில் உள்ள நிலையிலும் நிறுவனத்தை மேன்மேலும் வளர்ச்சி பெற வைக்க வேண்டும் என்ற முயற்சியில் இறங்கி உள்ளது. அதற்காகச் சிறுவர்கள் முதல் பெறிவர்கள் வரை யார் வேண்டும் என்றாலு புதுத் திட்டங்களுடன் தொடர்பு கொள்ளலாம் என்றும் இதில் ஊழியர்களும் பங்கு பெறலாம் என்றும் அறிவித்துள்ளது. இந்த நிறுவனத்தில் 8,900 ஊழியர்கள் பணியில் உள்ளனர்.

வோடாபோன்

வோடாபோன்

இந்தியாவின் இரண்டாம் மிகப் பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான வோடாபோன் ஜியோ அறிமுகத்தால் பெறும் பாதிப்பைச் சந்தித்தது, இருந்த போதிலும் ஐடியாவுடன் இணைந்து இப்போது மேலும் சிறந்த தொலைத்தொடர்பு சேவையை வோடாபோன் அளித்து வருகின்றது.

காக்னிசென்ட்

காக்னிசென்ட்

ஐடி கன்சல்டிங் நிறுவனமான காக்னிசென்ட் நிறுவனத்தில் 1,88,000 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். ஐந்து ஆண்டு 20,000 ஊழியர்களைப் பணிக்கு எடுக்கவும் காகினிசென்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

கோர்ஃபர்ஸ்

கோர்ஃபர்ஸ்

2013-ம் ஆண்டுத் துவங்கப்பட்ட க்ரோஃபர்ஸ் நிறுவனம் இந்தியாவின் முக்கிய நகரங்களில் மளிகை பொருட்களை டெலிவரி செய்து வருகின்றது. அதுமட்டும் இல்லாமல் பிக்பேஸ்கட் நிறுவனத்துடன் இணைந்து செயல்படவும் முடிவுசெய்துள்ளது.

மேக்மைடிரிப்

மேக்மைடிரிப்

இந்தியாவின் மிகப் பெரிய டிராவல் புக்கிங் நிறுவனமான மேக்மைடிரிப் நிறுவனம் அன்மையில் ஐபிஐபிஓ குழுமத்துடன் இணைந்து சேவையை அளிக்க முடிவு செய்துள்ளது.

மெக்கின்சே & கம்பெனி

மெக்கின்சே & கம்பெனி

மெக்கின்சே & கம்பெனி மேனேஜ்மெண்ட் கன்சல்டிங் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் டாப் பிஸ்னஸ் பள்ளிகளில் இருந்து 100 கன்சல்டண்ட்களைப் பணிக்கு எடுக்கின்றது. இந்த நிறுவனத்தில் 25,000 நபர்கள் பணியில் உள்ளனர்.

ஆரக்கிள்

ஆரக்கிள்

பிரதமர் மோடியைச் சென்ற ஆண்டு ஆரக்கிள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சந்தித்த அடுத்து இந்தியாவில் பெறும் அளவு முதலீடுகளைச் செய்யத் துவங்கியுள்ளது. ஆராக்கிள் இந்தியா நிறுவனத்தில் 38,000 ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Top Companies list Where India wants to work now in 2017

LinkedIn’s Top Companies list Where India wants to work now in 2017
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X