ஒரே வாரத்தில் டைம்ஸ் நவ் சேனலை பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை பிடித்தது ரிபப்ளிக் டிவி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அர்னாப் கோசுவாமியின் ரிபப்ளிக் டிவி துவங்கிய ஒரு வார காலத்தில் அதிகம் நபர்கள் பார்த்த செய்தி சேனல் என்ற பெயரை பெற்றுள்ளதாக இந்திய ஒளிபரப்பு ஆய்வுகள் ஆராய்ச்சி கவுன்சில் பார்க் தெரிவித்துள்ளது.

அதே நேரம் செய்தி ஒளிபரப்பாளர்கள் சங்கம் இந்தியாவின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திடம் ரிபப்ளிக் டிவி முறைகேடான விநியோக நடைமுறைகளைச் செய்து வருகின்றது என்று புகார் தெரிவித்துள்ளது.

ரிபப்ளிக் டிவியின் அதிரடி வளர்ச்சி

ரிபப்ளிக் டிவியின் அதிரடி வளர்ச்சி

ரிபப்ளிடி டிவி மே 12 தேதியுடன் தனது 2.11 மில்லியன் பார்வையாளர்களுடன் டைம்ஸ் நவ் சேனலினை விட 84.4 சதவீதம் அதிகமான பார்வையாளர்களுடன் முதல் ஒரு வார கால ஒளிபரப்பை நிறைவு செய்துள்ளது என்று பார்க் கூறியுள்ளது.

டைம்ஸ் நவ்

டைம்ஸ் நவ்

2017-ம் ஆண்டில் முதல் 18 வாரத்தில் டாப் ஆங்கிலச் செய்தி சேனல் என்றால் அது டைம்ஸ் நவ் ஆகும். நிமிடங்களில் ஆயிரக்கணக்கான (டிவிடி) தொலைக்காட்சி பார்வையாளராக அறியப்படும் பதிவுகள், ஒரு நிகழ்வைக் காணும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை இலக்காகக் கொண்ட தனிநபர்களின் எண்ணிக்கையைக் குறிக்கின்றன.

என்பிஏ அளித்த புகார்

என்பிஏ அளித்த புகார்

செய்தி ஒளிபரப்பாளர்கள் சங்கம் சென்ற வாரம் ரிபப்ளிக் டிவி முறைகேடாகக் கேபிள் தொலைக்காட்சிகளில் ஒன்றுக்கு மேற்பட்ட முறை பட்டியிலடுமாறு செய்து வருவதாக டிராயிடம் புகார் அளித்துள்ளது.

என்பிஏ கோரிக்கையை ஏற்காத பார்க்

என்பிஏ கோரிக்கையை ஏற்காத பார்க்

மேலும் செய்தி ஒளிபரப்பாளர்கள் சங்கம் இந்திய ஒளிபரப்பு ஆய்வுகள் ஆராய்ச்சி கவுன்சிலிடம் ரிபப்ளிக் டிவி இது போன்று செயல்களில் ஈடுபடுவதை நிறுத்தும் வரை பார்வையாளர்கள் விவரங்களை நிறுத்தி வைக்குமாறும் கோரிக்கை வைத்தது.

வியாழக்கிழமை இந்திய ஒளிபரப்பு ஆய்வுகள் ஆராய்ச்சி கவுன்சில் பார்வையாளர்கள் தரவை வெளியிட்டதால் செய்தி ஒளிபரப்பாளர்கள் சங்கம் பார்க்கில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது.

 

என்பிஏ கடிதம்

என்பிஏ கடிதம்

இது குறித்து இந்திய ஒளிபரப்பு ஆய்வுகள் ஆராய்ச்சி கவுன்சிலுக்குச் செய்தி ஒளிபரப்பாளர்கள் சங்கம் அனுப்பிய கடித்தத்தில் ரிபப்ளிக் டிவி குறித்த பார்வையாளர்கள் தரவில் பிழை உள்ளது. இது இந்தியாவின் பிற செய்தி சேனல்களைப் பெரிதாகப் பாதிக்கும் என்றும் இதனால் இந்திய ஒளிபரப்பு ஆய்வுகள் ஆராய்ச்சி கவுன்சிலில் இருந்து விலகுவதாகவும் கூறியுள்ளது.

பார்க்கில் இருந்து விலகிய சேனல்கள்

பார்க்கில் இருந்து விலகிய சேனல்கள்

செய்தி ஒளிபரப்பாளர்கள் சங்கம் போன்றே டைம்ஸ் நவ் மற்றும் எண்டிடிவி சேனல்களும் இந்திய ஒளிபரப்பு ஆய்வுகள் ஆராய்ச்சி கவுன்சிலில் இருந்து விலகுவதாகத் தெரிவித்துள்ளன.

வல்லுனர் கருத்து

வல்லுனர் கருத்து

டெண்ட்ஸூ ஏஜிஸ் நெட்வொர்க் தெற்கு ஆசியா தலைவர் மற்றும் தலைமை நிர்வாகி ஆஷிஷ் பசின் இது குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில் ரிபப்ளிக் தொலைக்காட்சியின் இந்த வளர்ச்சி ஆச்சர்யமாக உள்ளது என்றும் வித்யாசமான முயற்சியில் அர்னாப் கோசுவாமி செய்து வருகிறார் என்றும் அடுத்து வரும் சில வாரங்களில் பார்வையாளர்கள் எவ்வாறு உள்ளனர் என்பதைப் பார்த்து விளம்பரதாரர்கள் முடிவு செய்ய வேண்டும் என்றும் கூறினார்.

ரிபப்ளிக் - ஜியோ

ரிபப்ளிக் - ஜியோ

ரிபப்ளிக் டிவியின் வளர்ச்சி ஜியோ எப்படிப் போட்டி நிறுவனங்களுக்கு நெறுக்கடி கொடுத்ததோ அப்படியே உள்ளது என்றும் கூறப்படுகின்றது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Arnab Goswami’s Republic TV tops ratings in debut week, rivals exit Barc

Arnab Goswami’s Republic TV tops ratings in debut week, rivals exit Barc
Story first published: Saturday, May 20, 2017, 12:04 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X