ஆன்லைன் ஷாப்பிங்-இல் அதிகம் விற்பனையாகும் பொருட்கள் இதுதான்..!

Written By:
Subscribe to GoodReturns Tamil

சென்னை: முன்பெல்லாம் மக்களுக்குத் தேவையான பொருள்கள் மட்டுமே சந்தைகளிலும், கடைகளிலும் கிடைக்கும். நாமே கடைக்குச் சென்று தேவையானவற்றைக் காசு கொடுத்து வாங்கி வருவோம். ஆனால் தற்போது உற்பத்தியாளார்கள் அவர்களுக்குத் தோன்றும் பல்வேறு பொருள்களை உற்பத்தி செய்து சந்தையில் விற்பனைக்கு விட்டு, மக்களின் மனதை விளம்பரங்கள் மூலம் மூளைச்சலவை செய்து அவற்றை வாங்க வைக்கும் புதிய உத்தி தற்போது கையாளப்படுகிறது.

தேவை இருக்கிறதோ இல்லையோ, அடுத்தவர் வீட்டில் உள்ளது நம் வீட்டிலும் இருக்க வேண்டும், அது மட்டுமலாமல் அடுத்தவர் வீட்டில் இல்லாததும் நம் வீட்டில் இருக்க வேண்டும் பெருமை பீற்றிக் கொள்ள என்று நினைக்கும் அளவில் மக்களின் மனநிலை மாற்றப்பட்டு விட்டது.

ஒவ்வொரு நாளும் வளர்ந்து வரும் மக்களின் தேவைகளுக்கும், அவர்களின் எண்ண ஓட்டங்களுக்கும் ஏற்றாற்போல் ஆன்லைனில் விற்கப்படும் பல்வேறு பொருள்களுக்கு மத்தியில் பெரிதும் விரும்பி வாங்கப்படும் 11 பொருள்களும் அவற்றின் சந்தை வாய்ப்புகளும் பற்றி இங்கே காண்போம்.

தேவை..

ஒரு மனிதனுக்கு எல்லாக் காலங்களிலும் ஏதாவதொரு தேவை இருந்து கொண்டே இருக்கிறது. உங்கள் குடும்பத்தில் வரப்போகும் திருமணத்திற்கு உங்களுக்குப் பல்வேறு ஆடை வகைகள் தேவைப்படும். உங்கள் ஆடையினை நீங்கள் வாங்கும்போது உங்கள் செல்போனை நீங்கள் தவற விட்டு விட்டீர்களானால் நீங்கள் அன்றைய தினம் கடைசியாக ஒரு செல்போன் மேலுறை வாங்கி உங்கள் போனை பாதுகாக்க வேண்டும் என்று நினைப்பீர்கள்.

நொடிகளில் மாற்றம்

நம்முடைய தேவைகள் சில நொடிகளில் எப்படியெல்லாம் மாறுகிறது என்று நீங்கள் பார்த்தீர்களானால், ஒவ்வொரு ஆண்டும் இது போல் உங்கள் தேவைகளின் பட்டியல் நீண்டு கொண்டே போவதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள்.

ஈகாமர்ஸ்

ஆதேபோல் ஆன்லைன் வர்த்தகச் சந்தை எல்லோருக்குமானதாக மாறிவிட்டது. இதனால் தற்போது இதனைப் பயன்படுத்தி யார் எதுவேண்டுமானாலும் விற்பனை செய்யலாம், லாபம் ஈட்டலாம் என்ற நிலைக்கு ஈகாமர்ஸ் சந்தை வளர்ந்துள்ளது. ஆனால் இதில் வெற்றி பெற வேண்டுமெனில் மக்களின் சேவையை முதலீல் நீங்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்.

நாங்கள் தயாரித்துள்ள 2016 ஆம் ஆண்டில் சந்தையில் அதிகம் விற்கப்பட்ட பொருள்களின் பட்டியலை நீங்கள் பார்த்து இந்த ஆண்டில் மக்களின் தேவைகள் எவ்வாறு இருக்கும் என்று ஊகித்து அறிந்து கொள்ளலாம்.

 

ஆன்லைன் ஷாப்பிங் ஆதிக்கம்

இன்றைய காலகட்டங்களில் மக்கள் பெரும்பாலும் தங்கள் நேரத்தை மடிக்கணினிகள், ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேபிளட்கள் ஆகியவற்றின் முன் உட்கார்ந்து இணையதளத்தில் தேடுவதிலேயே செலவழிக்கிறார்கள்.

சரி வாங்க இந்த ஆண்டு ஆன்லைனில் அதிகம் விற்பனை செய்யப்படும் பொருட்கள் எனக் கணிக்கப்பட்ட சில முக்கியப் பொருட்களைப் பார்போம். முடிந்தால் நீங்களும் இதை விற்பனை செய்ய முயற்சி செய்யலாம்.

 

11. வீடியோ கேம்கள்

இப்போதெல்லாம் குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களும் வீடியோ கேம்கள் விளையாடுவதில் அதிக ஆர்வம் கட்டி வருகின்றனர். எனவே இத்தகைய கேம்களை விற்பது மிகப்பெரிய சந்தையை நமக்கு உருவாக்கியுள்ளது. கேம்களில் பிற விற்பனையாளர்கள் நமது பொருள்கள் போல் அறிமுகப்படுத்தும் முன் சந்தையில் புதிய அறிமுகங்களை நாம் நன்கு தெரிந்து கொள்ளவேண்டியது அவசியம்.

வீடியோ கேம்கள் விற்பனை என்பது பணம் கொழிக்கும் தொழில்தான். ஆனால், ஒரு சிலரே விரும்பி விளையாடும் பழைய கேம் களை விற்பதை தவிருங்கள்.

 

10. செல்லப் பிராணிகள் விற்பனை

செல்லப் பிராணிகள் குறித்த புள்ளி விவரங்களின் படி அமெரிக்காவின் 44%, வீடுகளில் 78 மில்லியன் நாய்களும், 85.8 மில்லியன் பூனைகளும் வளர்க்கப்படுகின்றன. தற்போது இந்தியாவில் வளர்ந்து வரும் மிகப்பெரிய சந்தைகளில் இதுவும் ஒன்று.

இருந்தாலும், ஆன்லைனில் நடக்கும் வர்த்தகத்தைப் பார்க்கும்போது அமெரிக்கா மட்டுமல்ல பல்வேறு நாடுகளிலிருந்து செல்லப் பிராணிகள் ஆர்டர் செய்வது அதிகமாக நடைபெற்று வருகிறது.

நீங்கள் இந்த வியாபாரத்தில் விருப்பம் உள்ளவராக இருந்தால் உலகளாவிய அளவில் ஆன்லைனில் இத்தொழில்செய்து நல்ல வருமானத்தை ஈட்ட இயலும்.

 

9. கைப்பைகளும், பணப்பைகளும்

2017 ம் ஆண்டின் அதிக விற்பனையாகும் பொருள்கள் கைப்பைகளும், பணப்பைகளும் தான். உள்ளூர் கடைகளைக் காட்டிலும் பல்வேறு மாடல்கள், பல்வேறு விலைகளில் கவர்ச்சிகரமாக விற்பனை செய்யப்படும் பொருள்களை மக்கள் இப்போதெல்லாம் ஆன்லைனிலேயே வாங்க விரும்புகின்றனர்.

நீங்கள் ஏதாவது பொருளை ஆன்லைனில் விற்க விரும்பினால், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான கைப்பைகளும், பணப்பைகளும் உங்கள் விற்பனையில் முதன்மையான இடத்தில் இருக்க வேண்டும்.

 

8. ஒப்பனை மற்றும் அழகு சாதன பொருள்கள்

இப்போதெல்லாம், சமூக வலைதளங்களில் பொருள்களின் விற்பனைக்கான அறிமுகம் என்பது சுலபமாக உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் வரை நமக்கு உள்ளூர் கடைகளில் கிடைக்கும் பொருள்கள் பற்றி மட்டும்தான் தெரியும்.

சமூக வலைத் தளங்கள் நமது வாழ்வில் பெறும் பங்கு ஆற்ற துவங்கியதிலிருந்து பூமிப் பந்தின் இன்னொரு பக்கத்தில் மக்கள் எத்தகைய பொருள்களைப் பயன்படுத்துகிறார்கள் என்கிற விவரமெல்லாம் உடனுக்குடன் தெரிய வருகிறது.

இது குறிப்பாக அழகுசாதன பொருள்களுக்குப் பொருந்தும். ஏனென்றால் சில வலைத்தளங்கள் விற்கும் சில பிரத்யேக பொருள்கள் வேறு பல இடங்களிலோ நாடுகளிலோ கிடைப்பதில்லை.

 

7. புத்தகங்கள்

வீடியோ கேம்கள் போலில்லாமல் புத்தகங்கள் விற்பனை என்பது எல்லாக் காலங்களிலும் அதிக வருமானத்தைக் கொடுக்கக் கூடியதாகவே உள்ளது. எவ்வளவுதான் புதிய புத்தகங்கள் வந்தாலும் பழைய புத்தகங்களும் பிரபலமாகாத புத்தகங்களும் கூடப் பல நேரங்களில் பலரால் விரும்பி படிக்கக் கூடியதாக இருக்கும்.

எந்த வகைப் புத்தகங்களில் முதலீடு செய்வது என்பது தெரியாத போது குறிப்பிட்ட வயதினர்க்கான புத்தகங்களின் மீது கவனத்தைச் செலுத்துவது சிறந்தது. இளம் பெண்களுக்குக் காதல் கதைகளும், இளம் ஆண்களுக்குத் துப்பறியும் கிரைம் நாவல்களும் விற்பது உங்களுக்கு நிறைந்த வருவாயைத் தரக் கூடியது.

 

6. குழந்தைகளுக்கான பொம்மைகள்

2017 ல் அதிகம் விற்கப்படும் 11 பொருள்களில் ஒன்றாகக் குழந்தைகளுக்கான பொம்மைகள் இருக்கிறது என்றால் அதற்குக் காரணம் சமூக வலைத்தளங்களில் புதிய பொம்மை குறித்த தகவல்கள் வந்தால் முழு உலகமும் அவற்றின்மீது அதீத ஆர்வம் கொள்வதே ஆகும்.

இப்பொருள்களை அறிமுகப்படுத்தி விற்பனை செய்வது அதிக வருவாயை தருவது ஏன் என்றால் விரைவாகவும், விலை குறைவாகவும் விற்பனயாவதுதான். பிட்கேட் ஸ்பின்னர் என்ற பொம்மை தான் அதிகப் பிரபலமானது.

மன அழுத்தத்தைக் குறைக்க உதவும் இந்தப் பொம்மை குழந்தைகளால் மட்டுமல்ல வளர் இளம் பருவத்தினரும் ஏன் வயதுக்கு வந்தவர்களும் அதிகம் பயன்படுத்த விரும்புவதுதான்.

 

5. காமெராக்களும், புகைப்படங்களும்

சில ஆண்டுகளுக்கு முன் ஆன்லைனில் வர்த்தகம் செய்வது ஆபத்துக்கள் நிறைந்ததாக இருந்த நிலை மாறி இன்று 2017 ல் மக்கள் அனைத்து பொருள்களையும் ஆன்லைனிலேயே வாங்கி வருகின்றனர். பல சந்தேகத்திற்குரிய நபர்கள் இருந்தாலும் நிறையப் பேர் குறைந்த விலை பொருள்களிலிருந்து அதிக விலை கொண்ட கேமரா வரை பல்வேறு பொருள்களை ஆன்லைனிலேயே வாங்க விரும்புகின்றனர்.

நீங்கள் ஒரு போட்டோகிராபராக இருந்தால், காமெராவை நேசிப்பவராக இருந்தால் காமெரா வைப்பற்றி அனைத்து விவரங்களும் தெரிந்தவராக இருந்தால் இந்த வர்த்தகத்தில் முதலீடு செய்யப் போதுமான பணம் இல்லாதிருந்தால் உங்கள் போட்டோ க்களைப் பல்வேறு பிரேம்களில் ஆன்லைனில் விற்கலாம். அல்லது துணை உபகரணங்கள் அல்லது காமெராவின் உதிரி பாகங்கள் விற்பனையினைச் செய்யலாம்.

 

4. போன்களும் துணை உபகரணங்களும்

நாம் ஏற்கனவே சொல்லியபடி மக்கள் வெவ்வேறு தொழில்நுட்ப சாதனங்கள் காமெராக்கள் ஸ்மார்ட்போன்கள் ஆகியவற்றை உள்ளூர் கடைகளைவிட மிகக் குறைந்த விலையில் ஆன்லைனிலேயே வாங்க விரும்புகின்றனர்.

நீங்கள் குறைவான முதலீடு கொண்டவராக இருந்தால், ஆன்லைனில் செல் போன் விற்பதை விட அதற்குரிய துணை உபகரணங்கள் விற்பனையைச் செய்வது சாலச் சிறந்தது. அவை வேகமாகவும் விற்பனையாகும். விலையும் வாங்கக் கூடிய வகையில் குறைவாக இருக்கும்.

 

3. ஆடைகள்

ஆன்லைனில் துணிகள் மற்றும் ஆடைகள் விற்பனை செய்வது என்பது விரைவாக அதிகப் பணம் ஈட்டும் ஓரூ தொழிலாக இருப்பதால் அதுவே சிறந்த தொழிலாகவும் இருக்க முடியும். உள்ளூர் கடைகள் லேட்டஸ்ட் டிசைன் பேஷன் களில் குறைந்த விலையில் வழங்குவதாலேயே ஆன்லைன் மூலம் பொருள்கள் வாங்க அனைவரும் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

ஆன்லைனில் பொருள்கள் வாங்குவது மக்களின் நேரம், பணம், சக்தியை சேமிக்க உதவுகிறது. நீங்கள் இத்தொழிலில் ஈடுபட விரும்பினால், இதில் முதலீடு செய்வது ஆபத்து என்று கருதினால், நீச்சலுடை போன்ற பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பருவகாலத்திற்கேற்ற ஆடை வகைகளுக்கான விற்பனை செய்வது உசிதம்.

 

2. துணை உபகரணங்கள்

துணை உபகரங்கள் விற்பனை என்பது இந்த ஆண்டின் சிறந்த விற்பனைக்கான களமாக இருப்பது கண்கூடாகவே தெரிகிறது. அவை அதிக முதலீடின்றி எப்போதும் வருமானம் தந்து கொண்டே இருக்கும்.

உங்கள் வாடிக்கையாளர்களை நீங்கள் முழுதும் புரிந்து கொள்கிறவரை கண்களை வெயிலிலிருந்து காக்கும் சூரியக் கண்ணாடிகள் மற்றும் கைக் கடிகாரங்கள் ஆகியவற்றை விற்க ஆரம்பிக்கலாம். சில காலம் கழித்து, உங்கள் வியாபாரத்தை விரிவாக்கம் செய்ய நீங்கள் விரும்பினால், பெல்டுகள், தலைக்கட்டுகள், போன்ற பொருள்களையும் விற்பனை செய்ய ஆரம்பிக்கலாம். அவை உங்கள் வாடிக்கையாளர்களால் அதிகம் வாங்கப்படக்கூடியவை.

 

1. நகைகள்

நமது பட்டியலில் முதலிடத்தில் இருப்பவை ஆன்லைனின் அதிக விற்பனை ஆகும் நகைகள்தான். ஆரம்பத்தில் விலை மலிவான நகைகளை விற்க ஆரம்பித்து, உங்கள் வாடிக்கையாளர்களின் தேவைகளையும், மன ஓட்டங்களையும் அறிந்து சற்று விலை கூடுதலான நகைகளையும் விற்பனை செய்ய ஆரம்பிப்பது நல்லது.

நீங்கள் ஒரு கற்பனை நயம் மிக்கத் தேர்ந்த திரமையானவராக இருந்தால் நீங்களே உங்கள் கைகளாலேயே நகைகளைத் தயாரித்து எட்சி என்ற இணையத் தளத்தில் ஆன்லைனில் நீங்கள் குறிப்பிடும் விலைக்கு விற்று வருமானத்தை ஈட்டலாம்.

மொத்தத்தில் நேரத்தையும், பணத்தையும் மிச்சப்படுத்தும் இந்தத் தொழிலில் நேர்மையாளராகவும் இருக்க வேண்டும் என்று அனைவரும் எதிர்பார்ப்பது இயல்புதானே.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Best Products to Sell Online this year with more profit

Best Products to Sell Online this year with more profit
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns