வருமான வரி தாக்கல் (ஐடிஆர்) செய்ய தயாரா? நிறுவனங்களுக்கு படிவம் 16-ஐ அளிக்க ஜூன் 15 வரை நீட்டிப்பு!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2016-2017 நிதி ஆண்டில் கழித்த வரிகளைப் பற்றி நிறுவனங்கள் உங்களுக்குத் தெரிவிக்கும் நேரம் வந்துவிட்டது. ஒவ்வொரு மாதமும் நிறுவனங்கள் உங்கள் வருமானத்தில் இருந்து வரியை பிடித்தம் செய்து அதனை அரசுக்கு அளிக்கும்.

 

ஊழியர்கள் யாருக்கெல்லாம் டிடிஎஸ் பிடிக்கப்பட்டுள்ளதோ அவர்களுக்கு அதற்கான சான்றிதழ்களை அளிக்க வேண்டும் என்று வருமான வரிச் சட்டம் கூறுகின்றது. 1961 ஆம் ஆண்டின் வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 203 ன் கீழ், வருமானத்தில் டிடிஎஸ் காட்டும் ஊழியர்களுக்குப் படிவம் 16-ஐ மே 31-ம் தேதிக்குள் வழங்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.

இப்போது அதற்கான காலக்கெடுவை ஜூன் 15-ம் தேதி வரை நீட்டிப்பு செய்து ஜூன் 2-ம் தேதி வருமான வரித்துறை அறிவித்துள்ளது.

ஒருவேலை டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படவில்லை என்றால் நிறுவனம் படிவம் 16- ஐ அளிக்க வேண்டிய அவசியம் இல்லை.

கூடுதல் அவகாசம் உண்டா?

கூடுதல் அவகாசம் உண்டா?

பட்ஜெட் 2016-ல் டிடிஎஸ்-ஐ சமர்ப்பிக்கக் கூடுதல் அவகாசம் அளித்தது. அதனால் சென்ற ஆண்டு டிடிஎஸ் சமர்ப்பிக்கக் கூடுதல் நாட்களும் அளிக்கப்பட்டது. ஆனால் இந்த முறை அப்படி எந்த அறிவிப்பு வெளியாகவில்லை என்பதால் படிவம் 16-ஐ மே இறுதிக்குள் நிறுவனங்கள் அளித்தாக வேண்டும்.

நிறுவனங்களுக்கு அபராதம்

நிறுவனங்களுக்கு அபராதம்

நிறுவனங்களுக்குப் படிவம் 16-ஐ ஊழியர்களுக்கு அளிக்க வேண்டும் என்பது கட்டாயம் ஆகும். 1961 ஆம் ஆண்டின் வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 203 ன் கீழ் வரையறுக்கப்பட்ட வருமான வரி விதிகள் 1962-ன் படி படிவம் 16-ஐ தற்போது வேலை செய்யும் அல்லது எந்த முந்தைய நிறுவனத்தில் வழங்குவது கட்டாயம் ஆகும்.

ஒருவேலை ஊழியர்களுக்கு நிறுவனம் டிடிஎஸ் பிடித்தம் செய்து படிவம் 16-ஐ வழங்கவில்லை என்றால் அபராதங்கள் செலுத்த வேண்டி வரும். காலத் தாமதம் ஆகும் ஒவ்வொரு நாளுக்கும் 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இது பிடித்தம் செய்யப்பட்ட டிடிஎஸ்-ஐ விட அதிகம் இருக்காது.

டிடிஎஸ் பிடித்தம் செய்யப்பட்ட படிவம் 16 உங்களுக்குக் கிடைக்கவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும்?
 

டிடிஎஸ் பிடித்தம் செய்யப்பட்ட படிவம் 16 உங்களுக்குக் கிடைக்கவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும்?

நீங்கள் வேலை செய்த அல்லது வேலை பார்க்கும் நிறுவனத்தில் உங்களுடைய சம்பளத்தில் இருந்து டிடிஎஸ் பிடித்தம் செய்யப்பட்டு அதற்கான படிவம்-16ஐ அவர்கள் உங்களுக்கு வழங்க மறுத்தால் அதற்கான மதிப்பீட்டு அதிகாரிகளுடன் எழுத்துப்பூர்வமாகப் புகார் அளிக்கலாம்.

ஊழியர்களுக்கு இதைவிட்டால் வேறு வழியில்லை. இப்படி ஊழியர்கள் புகார் அளிக்கும் போது நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.

படிவம் 16-ல் என்னவெல்லாம் இருக்கும்?

படிவம் 16-ல் என்னவெல்லாம் இருக்கும்?

படிவம் 16-ல் ஊழியர்களுக்கு நிறுவனம் அளித்த சம்பளம் மற்றும் பிடித்தம் செய்யப்பட்ட டிடிஎஸ் விவரங்கள் அனைத்தும் இருக்கும். படிவம் 16 பாகம் A மற்றும் பாகம் B என இரண்டாகப் பிரிக்கப்படுகின்றது.

படிவம் 16 பாகம் A

படிவம் 16 பாகம் A

பெயர், முகவரி, பான் மற்றும் டான் விவரங்கள், நிறுவனத்தில் பணிபுரியும் காலப்பகுதி போன்ற பணியாளர் மற்றும் பணியாளரின் அடிப்படைத் தகவல்கள், டி.டி.எஸ்ஸின் சுருக்க விவரங்கள், அரசாங்கத்துடன் டெபாசிட் செய்யப்பட்ட விவரங்கள் ஆகியவை பகுதி A-ல் இருக்கும்.

படிவம் 16 பாகம் B

படிவம் 16 பாகம் B

சம்பளத்தில் இருந்து கட்டணமாகச் செலுத்த வேண்டிய தொகை, மற்றும் ஊழியர்களின் பிற வருமான விவரங்கள், பிரிவு 80 சி, பிரிவு 80 டி மற்றும் அத்தியாயம் 6-ல் உள்ள பல்வேறு விலக்குகள் பற்றிய விவரங்கள் இருக்கும்.

எங்கிருந்து படிவம் 16 பாகம் A மற்றும் B பெறப்படுகின்றது

எங்கிருந்து படிவம் 16 பாகம் A மற்றும் B பெறப்படுகின்றது

இறுதியாக, மொத்த வருமானத்திற்கான புள்ளிவிவரங்கள் (முந்தைய ஆண்டின் காலத்தில் பெற்றவை) மற்றும் அதனுடன் பொருந்தும் வரி ஆகியவற்றை அது செயல்படுத்தும். "பகுதி A ஐ தரவும், ட்ராஸ் போர்ட்டல் வழியாகப் பதிவிறக்கம் செய்யப்பட வேண்டும், படிவம் 16 இன் பகுதி A யில் தனிப்பட்ட டிடிஎஸ் சான்றிதழ் எண் உள்ளது, பாகம் B கைமுறையாகத் தயாரிப்பாளரால் தயாரிக்கப்பட்டுப் பகுதி A உடன் வழங்கப்படும்.

முக்கியக் குறிப்பு

முக்கியக் குறிப்பு

ஊழியர் ஒருவர் சம்பளமாகப் பெறும் தொகையுடன் பிற வருமானம் வைத்திருக்கலாம். படிவம் 16 உங்கள் கையில் கிடைத்த பிறகு கூடுதலாக வெளியில் நீங்கள் பெற்ற வருவாயினை வருமான வரி தாக்கல் செய்யும் போது குறிப்பிட வேண்டும்.

வருமான வரி தாக்கல்

வருமான வரி தாக்கல்

2016-2017 ஆண்டிற்கான வருமான வரி தாக்கல் செய்யக் கடைசித் தேதி 2017 ஜூலை 31-ம் தேதி ஆகும்.

காலக்கெடு நீட்டிப்பு அறிவிப்பு

காலக்கெடு நீட்டிப்பு அறிவிப்பு

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Get ready to file your ITR: Deadline for employers to provide Form 16 is june 15

Get ready to file your ITR: Deadline for employers to provide Form 16 is june 15
Story first published: Thursday, June 8, 2017, 16:01 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X