ஜியோ படுத்தும் பாட்டை பாருங்கள்.. ஏர்டெல், வோடாபோன் புதிய திட்டம்..!

ஜியோ எதிராக வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக்கொள்ள இன்சூரன்ஸ் அளிக்கும் டெலிகாம் நிறுவனங்கள்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல் மற்றும் வோடாபோன் நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக்கொள்ள இன்சூரன்ஸ் பாலிசி வழங்குகின்றன.

இந்த இன்சூரன்ஸ் பாலிசி மூலமாக உங்களது போன் பழுதடைந்தாலோ, உடைந்து போனாலோ அதனைச் சரி செய்து அளிக்கும், அதே நேரம் மொபைல் போனில் உள்ள தரவுகளைப் பாதுகாக்க ஆண்டி வைரஸ் அளிக்கும்.

அதுமட்டும் இல்லாமல் நீங்கள் போனில் வைத்துள்ள தரவுகளுக்குக் கிளவுடு பேக்கப் சேவையும் அளிக்கும்.

காப்பீடு தவனை எவ்வளவு

காப்பீடு தவனை எவ்வளவு

டெலிகாம் நிறுவனங்கள் வழங்க இருக்கும் இந்த இன்சூரன்ஸ் பாலிசிக்கு 49 ரூபாய் முதல் 79 ரூபாய் வரை மாதாந்திர காப்பீடு தவனைத் தொகையாகப் பெற முடிவு செய்துள்ளன.

காப்பீடு தொகை எவ்வளவு கிடைக்கும்

காப்பீடு தொகை எவ்வளவு கிடைக்கும்

டெலிகாம் நிறுவனங்கள் வழங்கும் இந்தப் பாலிகளின் மூலம் 50,000 ரூபாய் வரை வாடிக்கையாளர்கள் காப்பீடு பயன் பெறுவார்கள்.

துறை வல்லுனர்கள்

துறை வல்லுனர்கள்

ஜியோ நிறுவனத்துடனான போட்டியை தவிர்ப்பதற்காகவே டெலிகாம் நிறுவனங்கள் இந்தத் திட்டத்தை அறிமுகச் செய்ய இருப்பதாகவும் அதனால் வாடிக்கையாளர்கள் எளிதாக நெட்வொர்க் மாற வாய்ப்பில்லை என்றும் துறை சார்ந்த வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

வருவாய்
 

வருவாய்

இந்தத் திட்டத்தினை டெலிகாம் நிறுவனங்கள் அறிமுகச் செய்வதினால் 5 லட்சம் கோடி ரூபாய் கடனில் உள்ள நிறுவனங்களுக்கு இது நல்ல லாபத்தை அளிக்கும்.

ஜியோ

ஜியோ

ஜியோ நிறுவனம் ஏற்கனவே இதே போன்று தங்களது வாடிக்கையாளர்களுக்கு ஜியோ செக்யூறிட்டி என்ற செயலி மூலமாகத் தரவை பாதுகாத்தல் மற்றும் மொபைல் சாதனத்தைப் பாதுகாத்தல் போன்ற சேவையை அளிக்கின்றது.

விலை போர்

விலை போர்

டெலிகான் நிறுவனங்களுக்கு இடையிலான இந்த விலை போரினால் இந்த நன்மைகளை அளிக்க நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. அதிகம் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பயனர்களைக் கவருவதற்காகவே இந்தத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஸ்மார்ட்போன் சந்தை

ஸ்மார்ட்போன் சந்தை

இந்தியாவில் 2016-ம் ஆண்டு வரை 300 மில்லியன் ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்கள் இருப்பதாகவும் உலக ஸ்மார்ட்போன் சந்தையுடன் ஓபிடும் போது 18 சதவீதம் அதிகச் சந்தை மதிப்பு இந்தியாவில் உள்ளதாகவும், ஒவ்வொரு ஆண்டும் 3 சதவீதம் வளர்ச்சி அடைந்து வருவதாகவும் ஹாங்காங் சேர்ந்த ஆய்வு நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

வயர்லெஸ் தரவு

வயர்லெஸ் தரவு

இந்தியாவைப் பொருத்த வரை வயர்லெஸ் தரவு பயன்படுத்துபவர்களின் அளவு 1.3 பில்லியன் ஜிபியாக 2017 மார்ச் மாதம் வரை அதிகரித்துள்ளது. 2016 ஜூன் மாதம் வரை இது 200 மில்லியன் ஜிபியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

குறைந்த விலை போன் பயன்படுத்துபவர்களுக்குப் பயனில்லை

குறைந்த விலை போன் பயன்படுத்துபவர்களுக்குப் பயனில்லை

150 ரூபாய் வரையில் ரீசார்ஜ் செய்து சாதரான மொபைல் போனை பயன்படுத்துபவர்களுக்கு இந்தத் திட்டத்தினால் எந்தப் பயணும் இல்லை. இவர்களுக்கு இது கூடுதலாக 50 கட்டணம் செலுத்துவது சிரமமாகவே இருக்கும்.

வோடாபோன்

வோடாபோன்

வோடாபோன் நிறுவனம் இந்த இன்சூரன்ஸ் திட்டத்தைப் போஸ்ட்பேய்டு வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அறிமுகச் செய்துள்ளது. வோடபோன் ரெட் ஷீல்ட் ரூ.50,000 வரை காப்பீட்டுத் தொகையாக அளிக்கின்றது, இது திருட்டு அட்டை, திரவ அல்லது உடல்ரீதியான சேதம் ஆகியவற்றில் இருந்து ஆறு மாதங்களுக்கு மேல் பாதுகாப்பு அளிக்க உதவும். மாதம் 60 ரூபாய் பிரீமியம் கட்டணமாக வசூலிக்கப்படும்.

ஏர்டெல்

ஏர்டெல்

49 ரூபாய் முதல் 79 ரூபாய் பல்வேறு திட்டங்களாக அறிமுகம் செய்துள்ள ஏர்டெல் போஸ்ட்பெய்டு மற்றும் பிரீபெய்டு என இரண்டு சந்தாதார்களுக்கும் இன்சூன்ஸ் சேவையை அளிக்க முடிவு செய்துள்ளது.

புதிய 500 ரூபாய்

புதிய 500 ரூபாய்

ரிசர்வ் வங்கி வெளியிட்ட புதிய 500 ரூபாய் நோட்டு.. பழைய நோட்டும் செல்லுமாம்..! ரிசர்வ் வங்கி வெளியிட்ட புதிய 500 ரூபாய் நோட்டு.. பழைய நோட்டும் செல்லுமாம்..!

அமேசான் தினறல்

அமேசான் தினறல்

கிளவுட் சேவையில் கோடிகளை அள்ளும் மைக்ரோசாப்ட்.. அமேசான் தினறல்..! கிளவுட் சேவையில் கோடிகளை அள்ளும் மைக்ரோசாப்ட்.. அமேசான் தினறல்..!

புதிய சட்டம்

புதிய சட்டம்

கர்நாடகாவில் ஐடி ஊழியர்களின் பணிநீக்கத்தை தடுக்க புதிய சட்டம் வருகிறதாம்.. தமிழ்நாட்டில்..?! கர்நாடகாவில் ஐடி ஊழியர்களின் பணிநீக்கத்தை தடுக்க புதிய சட்டம் வருகிறதாம்.. தமிழ்நாட்டில்..?!

உடனே செஞ்சிடுங்க..!

உடனே செஞ்சிடுங்க..!

மக்களே இதையெல்லாம் செய்தீர்களா..? இல்லாட்டி உடனே செஞ்சிடுங்க..! மக்களே இதையெல்லாம் செய்தீர்களா..? இல்லாட்டி உடனே செஞ்சிடுங்க..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Now, telcos Airtel and Vodafone India offer insurance, backup to retain customers

Now, telcos Airtel and Vodafone India offer insurance, backup to retain customers
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X