ஜிஎஸ்டி-ஐ அடுத்து நவம்பர் மாதத்தில் 'புதிய திட்டம்'.. மோடியின் அடுத்த அதிரடி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் கடந்த 150 ஆண்டுகளாகப் பழக்கத்தில் இருக்கும் நிதியாண்டு காலத்தைப் பிரதமர் மோடி வல்லரசு நாடுகளுக்கு இணையாக ஜனவரி முதல் டிசம்பர் என மாற்றத் திட்டமிட்டு வந்த நிலையில், தற்போது இத்திட்டம் உறுதியாகியுள்ளது.

 

 நவம்பரில் பட்ஜெட்..

நவம்பரில் பட்ஜெட்..

2018ஆம் ஆண்டு முதல் நிதியாண்டு காலத்தை ஜனவரி முதல் டிசம்பர் வரையில் மாற்றவும், இதற்காகப் பட்ஜெட் அறிக்கையை வருகிற நவம்பர் மாதத்தில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாகப் பிடிஐ அமைப்பு செய்தியை வெளியிட்டுள்ளது.

பணிகள்

பணிகள்

மோடி இதுகுறித்து ஆலோசனை செய்யத் துவங்கிய முதல் மத்திய அரசு நிதியாண்டின் காலத்தை மாற்றம் செய்யும் பணிகளையும் அதற்கான திட்டங்களையும் செயல்படுத்த துவங்கியுள்ளது எனவும் அந்த உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.

பல மாற்றங்கள்
 

பல மாற்றங்கள்

ஏற்கனவே மத்திய அரசு, அரசு நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளுக்கு நிதி அளிக்கப்படுவதில் தாமதம் ஏற்படும் காரணமாகப் பிப்ரவரி மாதம் கடைசி நாளில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் அறிக்கையை இந்த வரும் பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது.

இதுவே வரலாற்றில் முக்கிய மாற்றமாகக் கருதப்படும் நிலையில் தற்போது நிதியாண்டின் காலத்தையும் மாற்றியமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

ஆலோசனை

ஆலோசனை

மோடி பரிந்துரைத்த திட்டத்தின் படி அதிகாரிகள் செய்யப்பட்ட ஆலோசனை மூலம் இந்த மாற்றத்திற்கு ஏற்ப பட்ஜெட் அறிக்கையை நாடாளுமன்றத்தில் டிசம்பர் மாத்திற்கு முன்கூட்டியே தாக்கல் செய்யப்பட வேண்டும் என அந்த அதிகாரி கூறினார்.

 முதல் வாரம்

முதல் வாரம்

பிப் 1ஆம் தேதி செய்யப்பட்ட மாற்றத்தின் காரணமாக நவம்பர் மாதத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் எனத் தெரிகிறது.

இதன் மூலம் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டம் நவம்பர் மாதத்தில் முதல் வாரத்திலேயே துவங்கிவிடும்.

150 ஆண்டு வழக்கம்

150 ஆண்டு வழக்கம்

இந்தியா பிரிட்டிஷ் அரசு ஆட்சியில் இருக்கும்போது நிதியாண்டாக ஏப்ரல்-மார்ச் மாத காலகட்டத்தை 1867ஆம் ஆண்டு அமலாக்கம் செய்தது.

150 ஆண்டுகளாக இந்தியாவில் அனைத்துத் தரப்பினரும் இதனைப் பயன்படுத்தி வந்த நிலையில் தற்போது நிதியாண்டு காலத்தை வல்லரசு நாடுகளில் புழக்கத்தில் இருப்பது போலவே ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான காலமாக மாற்றியமைக்கும் திட்டம் ஆலோசனை செய்யப்படுகிறது.

இதற்கு முன்பு பட்ஜெட் காலம் மே 1 முதல் ஏப்ரல் 30ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

From 2018 Financial year period going to change: Budget may on November?

From 2018 Financial year period going to change: Budget may on November - Tamil Goodreturns | என்னது நவம்பர் மாதத்தில் மத்திய பட்ஜெட்டா..!! மோடியின் திட்டம் உறுதியானது..! - தமிழ் குட்ரிட்டன்ஸ்
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X