22 மாநில எல்லைகளில் சுங்கச்சாவடிகள் அதிரடி நீக்கம்.. இனி லாரிகள் நிற்காமல் சீறி பாய்ந்து போகலாம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் 22 மாநிலங்களில் சரக்கும் மற்றும் சேவை வரி அமலுக்கு வந்துள்ள நிலையில் மாநில எல்லைகளில் உள்ள சுங்கச்சாவடிகளை நீக்கியுள்ளனர்.

 

இது பாஜக ஆலும் மாநிலங்கள் மட்டும் இல்லாமல் அவர்களது எதிரி கடிசிகளாக உள்ள மாநிலங்களிலும் நீக்கப்பட்டுள்ளது ஜிஎஸ்டி வரி முறைக்கு அவர்களின் ஒத்துழைப்பைக் காட்டி வருகின்றது என்று கூறலாம்.

முக்கிய மாநிலங்ள்

முக்கிய மாநிலங்ள்

தமிழ் நாடு, குஜராத், பீகார், கர்நாடகா, கேரளா, ஹர்யானா, மத்திய பிரதேசம், உத்தர்காண்டு ஆகிய மாநிலங்களில் முழுமையாக நீக்கப்பட்டுள்ளது.

இவை மட்டும் இல்லாமல் அசாம், ஹிமாச்சல் பிரதேஷ், நாகாலாந்து, பஞ்சாப், மணிப்பூர், மேகாலயா, நாகாலாந்து, பஞ்சாப், மிசோரம் மற்றும் திரிப்பூரா உள்ளிட்ட மாநிலங்களும் விரைவில் சுங்கச்சாவடிகளை நீக்க முடிவு செய்துள்ளன.

 

ஜிஎஸ்டி

ஜிஎஸ்டி

சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி 2017 ஜூன் 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதை அடுத்து இந்தியாவின் 22 மாநிலங்களில் சுங்கச்சாவடிகள் நீக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாநில எல்லைகளின் லாரிகள்
 

மாநில எல்லைகளின் லாரிகள்

பல மாநிலங்கள் லார்கள் மற்றும் டிரக்குகளினை நிறுத்தாமல் செல்ல ஆலோசனையாளர்களையும் நியமித்துள்ளனர். இதனால் சரக்குகளைக் கொண்டு செல்லும் வாகனங்கள் மாநில எல்லைகளில் நிற்காமல் செல்லலாம், நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவசியமும் இல்லை.

செலவு குறையும்

செலவு குறையும்

சரக்கு வாகனங்கள் நிற்காமல் செல்லும் போது வேகமாகப் பயனர்களைச் சென்று அடையும் என்றும் செலவு குறையும் என்றும் இதனால் பொருட்கள் மீதான வரியும் குறையும் என்று கூறுகின்றனர். இந்தியாவில் பொருட்களைக் கொண்டு செல்லும் போது மாநில எல்லைகளில் செலுத்த வேண்டிய சுங்க கட்டணங்களால் அதிகச் செலவு ஆகின்றது.

எல்லைகளில் எதற்காகச் சுங்கச்சாவடி?

எல்லைகளில் எதற்காகச் சுங்கச்சாவடி?

எல்லைகளில் சோதனை செய்வது முக்கியமாக வரி ஏய்ப்புச் செய்திருக்கக் கூடும் என்பதற்காக அல்லது திருட்டு பொருட்களாக இருக்கலாம் என்பதற்காக சுங்கச்சாவடி என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அதிக நேரம் வினாகின்றது, சரக்குக் கொண்டு செல்லும் வாகனங்களால் சுற்றுப்புறச் சூழலும் பாதிக்கப்படுகின்றது.

ஜிடிபி

ஜிடிபி

பிலிப்கேப்பிட்டல் நிறுவனத்தின் ஆய்வறிக்கையின் படி இந்தியாவில் போக்குவரத்து தளவாடங்களால் கிடைக்கப்படும் வளர்ச்சி அமெரிக்காவில் உ ள்ள 8.5 சதவீதத்தை விட 14 சதவீதமாக உள்ளது.

ஜிஎஸ்டி-ன் கீழ் முதன்மையான ஆவணம் எது?

ஜிஎஸ்டி-ன் கீழ் முதன்மையான ஆவணம் எது?

ஜிஎஸ்டி ஆட்சி முறையின் கீழ் மின்னணு ரசீதான இ-வே பில்கள் தான் கொண்டு செல்லப்பாடும் சரக்கின் முதன்மையான ஆவணமாகும். 50,000 ரூபாய் மதிப்பிற்கு அதிகமாக எந்த ஒரு சரக்கு பொருள் கொண்டு சென்றாலும் இ-வே பில் அவசியம் என்று வரி வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

மத அடிப்படையிலான வேறுபாடு ஏதும் இல்லை

மத அடிப்படையிலான வேறுபாடு ஏதும் இல்லை

சமுக வலைத்தளங்களில் கோவில் அறக்கட்டளைகள் ஜிஎஸ்டி-ன் கீழ் வரி செலுத்த வேண்டும் என்றும் சர்ச் மற்றும் மசூதிகளுக்கு விலக்கு உண்டு என்று நிதி அமைச்சகம் அறிவித்துள்ளதாகச் செய்திகள் பரவி வருகின்றது. இதில் உன்மை இல்லை என்றும் ஜிஎஸ்டி-ன் கீழ் எந்த மதம் சார்ந்த பொருட்களும் வருவதில்லை என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Border commercial tax checkposts in 22 states abolished after GST rollout

Border commercial tax checkposts in 22 states abolished after GST rollout
Story first published: Tuesday, July 4, 2017, 14:55 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X