மோடியின் இஸ்ரேல் பயணம் எதற்காக..? 400 மில்லியன் டாலர் ரகசிய டீல்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

செவ்வாய்க்கிழமை பிரதமர் மோடி இஸ்ரேல் நாட்டிற்குப் பயணம் செய்தார், பென் குரியான் விமான நிலையத்தில் மோடி சென்ற விமானத் தரையிறங்கிய உடன் அவரை இஸ்ரேல் நாட்டு பிரதமர் பென்ஜமின் நீடன்யாஹூ மற்றும் அந்நாட்டு அமைச்சர்கள் பலர் வரவேற்றனர்.

 

மேலும் இஸ்ரேல் நாட்டிற்குப் பயணம் செய்யும் முதல் இந்திய பிரதமரும் மோடி தான். இந்த இஸ்ரேல் பயணம் எதற்காக..? இதன் உண்மையான பின்னணி என்ன..?

திங்கட்கிழமை..

திங்கட்கிழமை..

மோடியின் சுற்றுப்பயணத்திற்கு முன்பு அதாவது திங்கட்கிழமையே இஸ்ரேல் இந்தியாவுடன் சேர்ந்து தீவிரவாதத்தை எதிர்க்கவும், பாகிஸ்தானிடம் இருந்து இந்திய சந்திக்கும் பிரச்சனைகளில் இருந்து இந்தியாவை இஸ்ரேல் பாதுகாக்கும் என இந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இது சந்தையில் பல்வேறு விதமான கேள்விகளையும், சந்தேகங்களையும் எழும்பியுள்ளது.

இருதரப்பு நட்புறவு..

இருதரப்பு நட்புறவு..

மோடியின் இந்தப் பயணம் இந்தியாவிற்கும் இஸ்ரேல் நாட்டிற்கு மத்தியில் வலுவான இருதரப்பு நட்புறவை உருவாக்கும். மேலும் தீவிரவாதத்தை எதிர்க்கவும் அதுகுறித்து ஆலோசனை நடத்தும் இரு நாடுகளும் முடிவு செய்துள்ளது.

இதற்கான ஒப்புதலையும் ஆதரவையும் திங்கட்கிழமையே இஸ்ரேல் அறிவித்துவிட்டது.

400 மில்லியன் டாலர் ஒப்பந்தம்..
 

400 மில்லியன் டாலர் ஒப்பந்தம்..

மோடியின் இந்தப் பயணத்தில் இந்திய விமானப் படைக்குத் தேவையான 10 ஹெரான் டிபி யூஏவி விமானத்தை வாங்க முடிவு செய்துள்ளது இந்திய அரசு.

இதன் மதிப்பு 400 மில்லியன் டாலராக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

 ரகசிய டீல்

ரகசிய டீல்

இந்த ஹெரான் டிபி யூஏவி விமானத்தை வாங்க செப்டம்பர் 2015ஆம் ஆண்டே இந்தியா ஒப்புதல் அளித்துள்ள நிலையில், இதுவரை அதைச் செயல்படுத்தாமலும், மறைமுகமாகவே வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

யூஏவி என்பது ஆள்ளில்லா விமானம், இதனை விமானக் கண்காணிப்பிற்காக ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயக்கக் கூடியவை.

தயாரிப்பு

தயாரிப்பு

ஹெரான் டிபி யூஏவி விமானத்தை இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் தயாரித்து அதனை முதல் முறையாகப் பாரீஸ் ஏர் ஷோவில் பார்வைக்காக வைக்கப்பட்டது. இது பல நாடுகளைக் கவரந்தது குறிப்பிடத்தக்கது. இந்தியா உட்பட...

பயன்பாடு

பயன்பாடு

ஹெரான் டிபி யூஏவி வாங்குவதன் மூலம் இந்திய விமானப் படையின் பலம் பல மடங்கு அதிகரிக்கும். குறிப்பாகப் பாகிஸ்தான் மற்றும் சீன எல்லையில் அடிக்கடி நடக்கும் பிரச்சனைகளை அடியோடு அழிக்க இந்த விமானம் பெரிய அளவில் உதவியாக இருக்கும்.

இந்த யூஏவி மூலம் கண்காணிப்பு, உளவு பார்த்தல், போர் சேதம் மதிப்பீடு, இலக்கைக் கணித்தல் அல்லது பெறுதல், வான்வழி எரிபொருள் நிரப்புதல், உளவு சேகரிப்பு மற்றும் ஏவுகணை பாதுகாப்பு ஆகியவற்றைத் தற்போதைய அளவை விடவும் மிகவும் சிறப்பாகச் செய்யலாம்.

உயரம் மற்றும் சக்தி..

உயரம் மற்றும் சக்தி..

இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ் இணையதளத்தில் இருக்கும் விபரத்தின் படி இந்த விமானம் சுமார் 45,000 அடி உயரத்தில் சுமார் 30 மணி நேரம் வரை உளவு பார்க்கும் திறன் கொண்டது.

அதுமட்டும் அல்லாமல் சுமார் 1,000கிலோ எடையைச் சுமக்கும் திறன் இந்த யூஏவி விமானத்திற்கு உண்டு.

முதல் யூஏவி

முதல் யூஏவி

இந்திய விமானப் படையில் பல யூஏவி இருந்தாலும், முழுமையான, திறன் வாய்ந்த யூஏவி என்றால் இதுதான். இஸ்ரேல் இத்தகைய விமானத்தை 1990ஆம் ஆண்டு முதல் தனது ராணுவத்தில் பயன்படுத்தி வருகிறது.

இந்திய விமானப் படை

இந்திய விமானப் படை

சில ஆண்டுகளுக்கு முன் இந்தியா ஹார்பை டிரோன் விமானங்களை வாங்கியது இது, எதிரி நாட்டு ரேடார்-ஐ தாக்கக்கூடியது.

தற்போது வாங்க உள்ள ஹெரான் டிபி யூஏவி மூலம் இந்திய விமானப் படை புதிய சக்தியை பெறும்.

கீதா கோபிநாத்

கீதா கோபிநாத்

கேரளாவின் நிதி உலகை ஆட்டி படைக்கும் கீதா கோபிநாத்..! யார் இவர்?

கடுப்பான ஏர்டெல், ஐடியா

கடுப்பான ஏர்டெல், ஐடியா

ஜியோ-வின் அடுத்த அதிரடி திட்டம்.. கடுப்பான ஏர்டெல், ஐடியா..!

விலக்கு உண்டு

விலக்கு உண்டு

ஆதார் கார்டு, பான் கார்டு இணைப்பு அனைவருக்கும் கட்டாயம் இல்லை.. இவர்களுக்கு எல்லாம் விலக்கு உண்டு!

திடீர் முடிவு

திடீர் முடிவு

இது என்ன புதுக் கதை.. கேப்ஜெமினி எடுத்த திடீர் முடிவு..!

ராஜ வாழ்க்கை வாழும் மோடி..!

ராஜ வாழ்க்கை வாழும் மோடி..!

ஒரு நாளுக்கு 1 கோடி.. இஸ்ரேலில் ராஜ வாழ்க்கை வாழும் மோடி..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Modi's Israel trip backed with Secret Deal

Modi's Israel trip backed with Secret Deal
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X