இந்தியர்கள் அமெரிக்காவில் கிரீன் கார்டு பெறுவதற்கு 12 வருடங்கள் காத்திருப்பு பட்டியலில் உள்ளனர்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

திறமையான ஊழியர்கள் என்ற பெயரில் அமெரிக்காவில் நிரந்தரமாகக் குடியேறுவதற்கான கிரீன் கார்டு பெற இந்தியர்கள் 12 வருடங்கள் வரை காத்திருப்புப் பட்டியலில் உள்ளார்கள். அதே நேரம் ஒவ்வொரு வருடமும் அமெரிக்காவில் அதிகளவு கிரீன் கார்டு பெற்றவர்கள் இந்தியர்கள் தான் அதிகம்.

 

2015-ம் ஆண்டு மட்டும் மொத்தமாக 36,318 இந்தியர்கள் நிரந்தரமாக அமெரிக்காவில் வசிப்பதற்கான கிரீன் கார்டினை பெற்றுள்ளார்கள். அதில் 27,798 நபர்கள் புதிதாக அமெரிக்கா சென்றவர்கள் ஆவார்கள்.

12 வருட காத்திருப்பு

12 வருட காத்திருப்பு

"வேலைவாய்ப்புத் தொடர்பான பிரிவில், இந்தியாவில் இருந்து நிரந்தர வாழ்விடம் கேட்டு விண்ணப்பிக்கும் நபர்கள் தற்போது 12 வருடங்கள் காத்திருக்கிறார்கள், வேறுவிதமாகக் கூறினால், 2005 ஆம் ஆண்டு மே மாதம் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பங்களை அரசு தற்போது நடைமுறைப்படுத்துகிறது" என்று அறிக்கை தெரிவித்துள்ளது.

வேலைக்காகச் சென்று கிரீன் கார்டு பெற்றவர்கள்

வேலைக்காகச் சென்று கிரீன் கார்டு பெற்றவர்கள்

பெவ் அறிக்கையின் படி 2010-2014 வரையிலான காலக் கட்டத்தில் 36 சதவீதத்தினர் ஊழியர்கள் வேலை சம்மதமாகச் சென்று கிரீன் கார்டு பெற்றுள்ளதாகவும் அதில் 222,000 நபர்கள் எச்-1பி விசா வழியாகப் பெற்றவர்கள் என்று கூறுகின்றது.

கிரீன் கார்டு
 

கிரீன் கார்டு

கிரீன் கார்டு என்பது அமெரிக்காவில் நிரந்தரமாக வாழ மற்றும் வேலை செய்ய ஒரு நபரின் குடியுரிமைக்காக வழங்கப்படுவதாகும். கிரீன் கார்டு வைத்திருப்பவர் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்கக் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க முடியும். இதுவே அமெரிக்கக் குடிமகனை திருமணம் செய்தால் இந்தக் காலம் மூன்று ஆண்டுகளுக்குக் குறையும்.

வயது

வயது

கிரீன் கார்டு பெறுபவர்களில் அதிகமானவர்கள் 25 முதல் 64 ஆண்டுகள் அமெரிக்காவிலேயே பணிபுரிந்தவர்கள் என்றும் புதியவர்கள் மிகவும் குறைவு என்றும் கூறப்படுகின்றது. 55 சதவீதம் வரை புதிதாக அமெரிக்கா வந்தவர்களுடன் ஒப்பிடும் போது கிரீன் கார்டு பெற்றுள்ளவர்களின் வயதும் 25 முதல் 64 வயதிற்குள் உள்ளவர்கள் என்று அறிக்கை கூறுகின்றது.

அதிகரித்து வரும் கிரீன் கார்டு விநியோகம்

அதிகரித்து வரும் கிரீன் கார்டு விநியோகம்

அறிக்கையின் படி 2004-ம் ஆண்டு முதல் அமெரிக்காவில் வசிக்கக் கிரீன் கார்டுடன் குடியுரிமை அளிப்பது அதிகரித்து வருகின்றது என்று கூறுகின்றது.

2015-ம் ஆண்டு 508,716 நபர்கள் புதியவர்களாகக் கிரீன் கார்டு பெற்று அமெரிக்காவில் சட்டப்பூர்வமான நிரந்தரக் குடியுரிமை பெற்றவர்களாக மாறியுள்ளதாகவும், 542,315 நபர்கள் தங்களது நிலையைச் சரி செய்துள்ளதாகவும் அற்க்கை கூறுகின்றது.

எச்-1பி விசா

எச்-1பி விசா

2004 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு நிதியாண்டிலும், புதியதாக அமெரிக்கா வருபவர்களை விட அதிகளவில் எச்-1பி விசா பெற்று வந்துள்ளவர்களுக்கு வழங்கியுள்ளது.

நிலையை மாற்றி அமைத்தல்

நிலையை மாற்றி அமைத்தல்

2004 ஆம் ஆண்டு முதல், 7.4 மில்லியன் மக்கள் தங்கள் நிலையை மாற்றி அமைத்துள்ளனர் என்றும் 5.5 மில்லியன் மக்கள் புதிதாக வந்து கிரீன் கார்டு பெற்றுள்ளவர்கள் என்றும் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நிலையை மாற்றி அமைத்துள்ளார்கள் என்றால் குடும்ப உறுப்பினர்களைச் சேர்த்துக்கொண்டது ஆகும்.

 வேலைவாய்ப்புப் பிரிவுகள்

வேலைவாய்ப்புப் பிரிவுகள்

வேலைவாய்ப்புத் தொடர்பான பிரிவுகளில் (தொழிலாளர்கள் குடும்ப உறுப்பினர்கள் உட்பட) 2015 ஆம் ஆண்டுக் கிரீன் கார்டு பெற்றுள்ளவர்களின் எண்ணிக்கை 14 சதவீதமாக உள்ளது.

அகதிகள்

அகதிகள்

அகதிகள் (11 சதவீதம்) மற்றும் புகலிடம் வழங்கப்பட்ட மக்கள் (3 விழுக்காடு) ஆகியோர் இதேபோன்ற கிரீன் கார்டுகளை அமெரிக்காவில் பெற்றுள்ளனர்.

தாழ்வான நாடுகள்

தாழ்வான நாடுகள்

வரலாறு ரீதியாகத் தாழ்வான இடத்தில் உள்ள நாடுகளில் இருந்து வருபவர்கள் 5 சதவீதம் வரை கிரீன் கார்டு பெற்றுள்ளார்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Indians applying for Green Card in the US have 12 year waiting list

Indians applying for Green Card in the US have 12 year waiting list
Story first published: Tuesday, July 11, 2017, 16:03 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X