இந்தியாவின் 4வது பேமெண்ட் வங்கி: ஃபினோ பேமெண்ட்ஸ் பேங்க்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அரசாங்கத்தின் நிதி சேர்ப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பேமெண்ட் பேங்குகள் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவின் ஒப்புதலைப் பெற்ற இரண்டு வெவ்வேறு வங்கி முறைகளாகும்.

இன்றைய தேதி வரை இதர பெரிய நிதியியல் மற்றும் வங்கி நிறுவனங்கள் வழங்குவதைவிட அதிகமான வைப்பு நிதி வசதிகள், வட்டிகளை இந்த வங்கிகள் வழங்குகின்றன. மேலும் இத்தகைய வங்கிகள் கடன் வசதிகளை வழங்குவதில்லை.

4வது பேமெண்ட் வங்கி

4வது பேமெண்ட் வங்கி

சில நாட்களுக்கு முன்பு தனது இயக்கத்தைத் தொடங்கியுள்ள ஃபினோ பேமெண்ட் பேங்க் லிமெட்டுடன் இந்தியாவில் நான்கு பேமெண்ட் பேங்குகள் முழுமையாக இயங்க துவங்கியுள்ளது.

ஏர்டெல் பேமெண்ட் பேங்க், இந்தியா போஸ்ட் வங்கி மற்றும் பேடிம் பேமெண்ட் பேங்க் ஆகியவை இதர மூன்று வங்கிகள்.

 

வட்டி விகிதம்

வட்டி விகிதம்

இந்த வங்கிகளின் சேமிப்புக் கணக்கில் கொடுக்கப்படும் வட்டி விகிதம் இதர பெரிய வணிக வங்கிகள் மற்றும் பேடிம் பேமெண்ட் பேங்குகள் அளிக்கும் 4% க்கு இணையாக உள்ளன.

இதர பேமெண்ட் பேங்க்களான ஏர்டெல் மற்றும் இந்தியா போஸ்ட் உள்ளிட்ட வங்கிகள் முறையே 7.25% மற்றும் 5.5% வட்டி விகிதங்களை வழங்குகின்றன.

 

பண வைப்பு மற்றும் திரும்பப் பெறுதல்

பண வைப்பு மற்றும் திரும்பப் பெறுதல்

வைப்பு நிதிகள் அத்துடன் பணத்தைத் திரும்பப் பெறுவதற்கு இந்த புதிய வங்கி மாதத்திற்கு இரண்டு இலவச பரிவர்த்தனைகளை வழங்குகின்றது.

அதற்குப் பிறகு ஒவ்வொரு ரூ.1,000 பண வைப்பிற்கும் மற்றும் திரும்பப் பெறுதலுக்கும் ரூ.5 கட்டணம் விதிக்கப்படுகிறது. இதில் நினைவு கொள்ள வேண்டியது என்னவென்றால், ஒரு கிளையிலோ அல்லது வர்த்தகக் கடையிலோ பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டால் அத்தகைய கட்டணங்கள் பொருந்தும்.

 

 0.6% தொகை

0.6% தொகை

மேற்கொண்டு அதை மேலும் தெளிவுபடுத்துவதென்றால், பரிவர்த்தனைத் தொகையில் 0.6% தொகை அல்லது அதற்குச் சமமான ரூ 5, எது அதிகபட்சமாக இருக்கிறதோ அந்தத் தொகை செலுத்தப்பட வேண்டும்.

ஏடிஎம் களில் பணப் பரிவர்த்தனை

ஏடிஎம் களில் பணப் பரிவர்த்தனை

ஃபினோ பேமெண்ட் பேங்க் அதன் ஏடிஎம் பணப் பரிவர்த்தனைக்கு ஐசிஐசிஐ வங்கியுடன் கூட்டுச் சேர்ந்து செயல்படுகிறது. கட்டணங்கள் நிலையான விதிமுறைகளின் படி இருக்கும். தலைநகர் அல்லாத சிறு நகரங்களில் ஐந்து இலவசப் பணப் வரிவர்த்தனைகளையும் மெட்ரோ நகரங்களில் மூன்று இலவசப் பணப் பரிவர்த்தனைகளையும் வழங்குகிறது.

ஏடிஎம் யைப் பயன்படுத்திச் செய்யப்படும் நிதிச் சார்ந்த பரிமாற்றங்களுக்கான கட்டணம் ரூ 20, நிதியியல் அல்லாத பணப் பரிவர்த்தனைகளுக்கான கட்டணங்கள் ரூ 8 ஆகும்.

 

டெபிட் கார்டுகள்

டெபிட் கார்டுகள்

கிளாசிக் மற்றும் பிளாட்டினம் வரம்பில் வழங்கப்படும் கார்டுகளுக்கு வழங்கல் கட்டணத்துடன் ரூபே டெபிட் கார்டுகளை இந்த புதிய வங்கி வழங்குகின்றது.

பிற சேவைகள்

பிற சேவைகள்

விரைவில் இந்த வங்கிகள் மூன்றாம் தரப்பு தயாரிப்புகளான காப்பீடு, பரஸ்பர நிதிகள் மற்றும் கடன்கள் உள்ளிட்ட சேவைகளை அதன் வாடிக்கயாளர்களுக்கு வழங்கவிருக்கின்றன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Know All About The Newly Introduced Fino Payments Bank

Know All About The Newly Introduced Fino Payments Bank
Story first published: Monday, July 24, 2017, 15:32 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X