பெட்டிக்கடை உரிமையாளரின் மகன் இன்று நாட்டின் ஜனாதிபதி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகப் பொருளாதாரச் சந்தையில் மிகப்பெரிய சக்தியாக வளர்ந்து வரும் இந்தியாவின் 14 ஜனாதிபதியாக இன்று ராம்நாத் கோவிந்த் பதவியேற்றார்.

 

1994 முதல் 2006ஆம் ஆண்டு வரை ராஜ்ய சாப உறுப்பினராக இருந்த வரும் ராம் நாத், 2015-2017ஆம் ஆண்டுகளில் பீகார் மாநிலத்தின் கவர்னராக இருந்தார்.

இன்று இந்திய நாட்டின் ஜனாதிபதியாக உயர்ந்துள்ள ராம் நாத் கோவிந்த் ஒரு பெட்டிக்கடை உரிமையாளரின் மகன் என்பது எத்தனை பேருக்கு தெரியும்..?

உத்திர பிரதேசம்

உத்திர பிரதேசம்

கான்பூர் தேஹாத் மாவட்டத்தின் பாராக் கிராமத்தில் நாட்டின் புதிய ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் பிறந்தார். இவரின் தந்தையின் பெயர் மைகுலா, 5 மகன்கள் மற்றும் 2 பெண் குழந்தைகள் கொண்ட குடும்பத்தில் ராம் நாத் கடைக்குட்டியாகப் பிறந்தார்.

குடும்பச் செலவுகளுக்காகவும், தனிப்பட்ட காரணங்களுக்காகவும் தனது பாரம்பரிய தொழிலான நெசவு தொழிலை செய்யாமல் ஒரு சிறிய பெட்டிக்கடையை வைத்திருந்தார் ராம் நாத் அவர்களின் சந்தை மைகுலா.

 

விபத்து..

விபத்து..

மண் தரையில் பிறந்த ராம் நாத் கோவிந்த், தான் 5 வயதாக இருக்கும் போது தனது வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் தனது தாயையும், வீட்டையும் இழந்தார்.

படிப்பு
 

படிப்பு

கான்பூர் கிராமத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை முடித்த ராம்நாத், டிஏவி கல்லூரியில் காமர்ஸ் மற்றும் சட்ட படிப்புகளை முடித்துப் பட்டம் பெற்றார்.

டெல்லி பயணம்

டெல்லி பயணம்

கல்லூரியில் பட்டம் பெற்ற கையோடு சிவில் சர்வீஸ் தேர்வுக்குப் பயிற்சி செய்ய டெல்லிக்குப் புறப்பட்டார். தனது 3வது முயற்சியில் வெற்றிகரமாகத் தேர்வானார் ராம்நாத்.

ஆனால் பணியில் சேர்மல் 1971ஆம் ஆண்டு டெல்லி பார் கவுன்சிலில் வழக்கறிஞராகப் பதிவு செய்து தனது பணியைத் தொடர்ந்தார்.

 

16 வருடப் பணி

16 வருடப் பணி

1977-1979 வரையிலான காலகட்டத்தில் மத்திய அரசு வழக்கறிஞராகப் பணியாற்றினார்.

1977-1978 வரையிலான காலத்தில் பிரதமர் மோராஜி தேசாய் அவர்களின் தனிப்பட்ட உதவியாளராகப் பணியாற்றினார்.

1978-1993 வரையிலான காலத்தில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும், உச்ச நீதிமன்றத்தில் செயல்படும் மத்திய அரசின் ஆலோசனையைக் கூட்டத்தின் உறுப்பினராகவும் பணியாற்றினார்.

தீவிர அரசியலில் இறங்குவதற்கு முன்பு சுமார் 16 ஆண்டுகள் டெல்லி உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.

 

பிஜேபி உறுப்பினர்

பிஜேபி உறுப்பினர்

1991ஆம் ஆண்டுப் பிஜேபி கட்சியில் உறுப்பினராகச் சேர்ந்த ராம் நாத், கட்சியில் பல உயர் பதவிகளில் பணியாற்றினார்.

1994ஆம் ஆண்டு உத்திர பிரதேசம் மாநிலத்தின் ராஜ்ய சபா உறுப்பினராக ராம் நாத் தேர்வு செய்யப்பட்டார். இப்பணியில் மார்ச் 2006ஆம் ஆண்டுவரை நீடித்தார்.

 

பல துறை அனுபவம்

பல துறை அனுபவம்

நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் ராம்நாத் கோவிந்த் உள்துறை, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயும், சமுக நீதி, சட்டம் மற்றும் நீதி எனப் பல துறைகளில் பணியாற்றினார்.

கவர்னர்

கவர்னர்

2015 ஆகஸ்ட் 8ஆம் தேதி இந்திய நாட்டின் ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் அவர்களைப் பீகார் மாநிலத்தின் கவர்னராக நியமிக்கப்பட்டார்.

இந்த நியமனத்தில் மாநில அரசின் விருப்பத்தைக் கேட்கவில்லை என இம்மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் கடுமையாக விமர்சித்தார்.

 

இன்று நாட்டின் ஜனாதிபதி

இன்று நாட்டின் ஜனாதிபதி

வாழ்க்கையில் பல ஏற்ற இறக்கங்களைச் சந்தித்த ராம் நாத் கோவிந்த இன்று நாட்டின் ஜனாதிபதி ஆகியுள்ளார். இவரை அனைத்திற்கும் ஆரம்பமாக இருந்தது ஒரு சாதாரணப் பெட்டி கடை உரிமையாளர் மகனின் விடா முயற்சி தான்.

உங்களது பணி சிறப்பாக அமைய தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தின் வாழ்த்துக்கள்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Ram Nath Kovind 14th president of india Success story

Ram Nath Kovind 14th president of india Success story
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X