நிஃப்டி குறியீட்டின் 21 வருட பயணம்.. ஒரு பிளாஷ்பேக்! #nifty10000

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தேசிய பங்கு சந்தைக் குறியீடான நிப்டி 50 முதன் முதலாக 1996-ம் ஆண்டு 1,000 புள்ளிகளுடன் துவங்கப்பட்டது. இன்று 21 வருடங்கள் முடிந்துள்ள நிலையில் 10,000 புள்ளிகளை எட்டிப்பிடித்துச் சாதனை படைத்துள்ளது.

 

இதையே வேறு விதமாகச் சொல்ல வேண்டும் என்றால் 1996 நிப்டியில் முதலீடு செய்து முதலீட்டாளர்களுக்கு 21 வருடங்களுக்குப் பிற 10 மடங்கு லாபம் கிடைத்துள்ளது எனலாம்.

நிப்டி தனது முதலீட்டாளர்களுக்கு மென்மையான முதலீடுகளை அளிக்கும் சேவை அளித்துள்ளது எனலாம். நீண்ட கால முதலீடுகளைச் செய்ய வேண்டும் என்பவர்களுக்கு நல்ல லாபத்தை அளித்துள்ளது.

மியூச்சுவல் ஃபண்டு

மியூச்சுவல் ஃபண்டு

பல மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள் நிஃப்டியினை விட அதிக லாபம் அளித்துள்ளன, ஆனால் முதலீட்டாளர்கள் நீண்ட நாட்கள் முதலீடு செய்யக் காத்திருக்க வேண்டும்.

அதிகபட்ச வரம்பு இல்லை

அதிகபட்ச வரம்பு இல்லை

சந்தை வல்லுனர்கள் 10,000 புள்ளிகள் ஒரு குறியீடு தான் என்றும் நிப்டி இதை விட மிகப் பெரிய உயரத்தினை அடையும் என்றும் கூறினர். நிப்டிக்கு 10,000 புள்ளிகள் ஒன்றும் அதிகபட்ச வரம்பு இல்லை. 5,000, 6,000, 7,000, 8,000, 9,000, 10,000 எனப் பல உயரத்தினைக் கண்ட நிப்டி மேலும் உயரத்தினை அடையும் என்று ஜியோஜீட் பிஎன்பி பரிபஸ்ஸின் கௌரங் ஷா கூறினார்.

புள்ளிகள் சரிய வாய்ப்பு உண்டு
 

புள்ளிகள் சரிய வாய்ப்பு உண்டு

எனினும், சில சந்தை வல்லுனர்கள் குறைந்த காலத்தில் நிப்டி பெற்ற இந்த வளர்ச்சியில் மாற்றம் வரும். உலகளவில் சந்தைகளில் அதிகளவில் வங்கும் எண்ணம் அதிகரித்துள்ளதினால் தான் இந்த உயர்வு. நிப்டியின் இந்த 10,000 புள்ளிகள் உயர்வு என்பது நிலைக்காது என்று ஐஐஎப்எல் இன் நிர்வாகத் துணைத் தலைவர் சஞ்சீவ் பசின் தெரிவித்தார்.

1996

1996

1996-ம் ஆண்டு நிப்டி முதன் முதலாக 1,000 புள்ளிகள் அடிப்படை மதிப்புடன் துவங்கப்பட்டது. பின்னர் 8 ஆண்டுகள் 1000 முதல் 2000 புள்ளிகளுக்கு இடையில் தான் வளர்ச்சி இருந்தது.

2004

2004

நிப்டியில் முதலீடு செய்த தொகை 2004-ம் ஆண்டு இரண்டு மடங்காக அதிகரித்தது. அதாவது நிப்டி 2000 புள்ளிகளை அப்போது தான் தொட்டது.

2006

2006

ஜனவரி 2006-ம் ஆண்டு அதிக வெளிநாட்டு முதலீடுகளை பெற்ற நிலையில் முதன் முதலாக நிப்டி 3000 புள்ளிகளைத் தொட்டது.

4000 புள்ளிகள்

4000 புள்ளிகள்

அதே 2006-ம் ஆண்டு நிப்டி 40 சதவீதம் உயர்ந்து 4,000 புள்ளிகளைத் தொட்டு உலகச் சந்தையின் பார்வையினைத் தனது பக்கம் திருப்பியது. கார்ப்ரேட் நிறுவனங்களின் வருவாய்களும் அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.

5,000 புள்ளிகள்

5,000 புள்ளிகள்

2007-ம் ஆண்டு வெளிநாட்டு மற்றும் உள்நாட்டில் அதிகளவில் நிப்டி குறியீடுகளில் உள்ள பங்குகளை வாங்கியதால் 5,000 புள்ளிகளைத் தொட்டது.

6,000 புள்ளிகள்

6,000 புள்ளிகள்

6,000 புள்ளிகளை நிப்டி தொட்ட அதே 2007-ம் ஆண்டில் அதிக முதலீடுகள் பெற்று 55 சதவீதம் உயர்ந்து 6,000 புள்ளிகளை நிப்டி தொட்டது.

2014

2014

7 ஆண்டுகளுக்குப் பிறகு 2014-ம் ஆண்டுப் பிரதமர் வேட்பாளராக மோடி அவர்கள் அறிவிக்கப்பட்ட போது நிப்டி 7,000 புள்ளிகளைத் தொட்டது.

8,000 புள்ளிகள்

8,000 புள்ளிகள்

2014-ம் ஆண்டுச் செப்டம்பர் மாதம் நரேந்திர மோடி அவர்கள் பதவி ஏற்ற சில மாதங்களில் 8,000 புள்ளிகளை நிப்டி தொட்டது.

2015

2015

2013 செப்டம்பர் முதல் நிப்டி குறியீடு உயர்வைப் பெற்று வந்தது, 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் 9,000 புள்ளிகளைத் தொட்டது. இதற்கும் முக்கியக் காரணங்கள் என்றால் அதிகப்படியான வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஆவர்.

2017

2017

ஜிஎஸ்டி அமலுக்கு வந்தது, ஆர்பிஐ வட்டி விகிதம் குறைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு ஆகிய காரணங்களினால் 2017-ம் ஆண்டு 25-ம் தேதி செவ்வாய் கிழமை நிப்டி மென்மையாக 10,000 புள்ளிகளைத் தொட்டது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

The Nifty Story: From 1,000 To 10,000 In 21 Years

The Nifty Story: From 1,000 To 10,000 In 21 Years
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X