வருமான வரித் துறை உங்கள் பேஸ்புக் பக்கத்தையும் கண்காணிக்கும்.. தெரியுமா உங்களுக்கு?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் மிகப் பெரிய பிரச்சனை என்றால் அது வரி ஏய்ப்பு என்று கூறலாம். அதனால் மத்திய அரசு உங்கள் வங்கி கணக்கில் நடந்த பணப் பரிமாற்றங்களைப் பான் எண் உதவியுடன் கண்காணிக்கும் என்பது அனைவருக்கும் தெரியும்.

 

இப்போது மத்திய அரசு வங்கி கணக்கு மட்டும் இல்லாமல் நாம் தினமும் பயன்படுத்தும் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமுகவலை தளங்களைக் கண்காணிக்க இருக்கின்றது.

சமுக வலைத்தளங்கள் ஏன்?

சமுக வலைத்தளங்கள் ஏன்?

வங்கி கணக்கு மூலமாகப் பணப் பரிவர்தனை காண்பிக்காமல் அல்லது பிற மோசடிகள் செய்து ரொக்க பணம் மூலமாகவும் வாகனங்கள் வாங்க முடியும். ஒரு வேலை நீங்கள் புதிதாக ஒரு கார் வாங்கி இருக்கின்றீர்கள் என்றால் அதன் புகைப்படத்தினைப் பேஸ்புக் அல்லது இன்ஸ்டாகிராம் தளங்களில் பதிவேற்றும் போது சிக்கக் கூடும். இதனை வைத்து உங்கள் வருமான விவரங்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வருமான வரித் துறை முடிவு செய்துள்ளது.

ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு

ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு

விரைவில் சமுக வலைத்தளங்களில் கணக்கை தொடர்ந்து பயன்படுத்தவும் ஆதார் மற்றும் பான் கார்டு விவரங்களை இணைக்க வேண்டும் என்ற சட்டத்தினை இயற்றும் எண்ணத்தில் மத்திய அரசு உள்ளது என்று நமக்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.

ஆடம்பர செலவுகள்
 

ஆடம்பர செலவுகள்

வார இறுதி நாட்களில் ஏதேனும் ஐந்து நட்சத்திர உணவகங்களுக்குச் சென்று உண்பது, சுற்றுலா செல்லும் போது ஆடம்பர ஹோட்டல்களில் தங்குவது குறித்த விவரங்களைப் பதிவேற்றுதல் போன்ற காரணங்களுக்காகவும் உங்களை வருமான வரித் துறை கண்காணிக்கக் கூடும்.

முதல் முறை அல்ல

முதல் முறை அல்ல

இது பொன்ற செயல்களின் மூலம் மத்திய அரசு தனிநபர்கள் விவரங்கள் சேகரிப்பது ஒன்றும் முதல் முறை அல்ல. சமுக வலைத்தளங்களில் புகைப்படங்கள் பதிவேற்றியதை வைத்து வரி ஏய்ப்பு செய்தவர்களின் விவரங்களைப் பெற்று நடவடிக்கை எடுத்துள்ளதாக நிதி அமைச்சக வட்டாரங்கள் கூறுகின்றன.

யாருக்கு எல்லாம் சிக்கல் இல்லை?

யாருக்கு எல்லாம் சிக்கல் இல்லை?

ஒருவர் தான் பெறும் வருமானத்திற்கு முறையாக வருமான வரி செலுத்தி வந்தால் அவர்களுக்கு இது போன்ற செயல்களினால் எந்தச் சிக்கலும் இல்லை.

உஷார்..!

உஷார்..!

கார், நகை, டைமண்டு போன்று விலை உயர்ந்த பொருட்கள் போன்றவற்றை வாங்கும் போதும், அதன் புகைப்படத்தினைச் சமுக வலைத்தளங்களில் பதிவேற்றும் முன் எச்சரிக்கையாக இருத்தல் வேண்டும்.

பண மதிப்பு நீக்கம்

பண மதிப்பு நீக்கம்

பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு அதிகக் கருப்புப் பணம் கணக்கிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. சமுக வலை தளங்களில் இருந்து பெறப்படும் தரவுகளை வைத்து மேலும் வரி ஏய்ப்புச் செய்பவர்களைப் பிடிக்க முடியும் என்று வருமான வரித் துறை கூறுகின்றது.

கூகுள் மேப்ஸ்

கூகுள் மேப்ஸ்

இதை எல்லாம் வைத்துப் பார்க்கும் போது விரைவில் மத்திய அரசு கூகுள் மேப்ஸ் சேவை பயன்படுத்துபவர்களின் மொபைல் இருப்பிட விவரங்களை வைத்தும் நம்மைக் காண்காணிக்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Income Tax dept is watching your facebook kind of Social media accounts also

Income Tax dept is watching your facebook kind of Social media accounts also
Story first published: Saturday, July 29, 2017, 19:59 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X