5 வருடத்தில் 300% வளர்ச்சி அடைந்த அமித் ஷாவின் சொத்து மதிப்பு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பாஜக கட்சி தலைவரான அமித் ஷா அவர்களின் சொத்து மதிப்பு 300 சதவீதமாக உயர்ந்துள்ளதாகத் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது ஆங்கில நாளிதழ். அந்த அறிக்கையில் பாஜக தலைவர் மட்டும் இல்லாமல் குஜராத்தில் வந்த மூன்று மத்திய அமைச்சர்களின் சொத்து மதிப்பும் பல மடங்கு அதிகரித்துள்ளது.

அமித் ஷாவுடன் அந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ள மூன்று அமைச்சர்கள் யார், இவர்கள் நான்கு நபர்களின் சொத்து மதிப்பு கடந்த ஐந்து ஆடுகளில் எந்த அளவிற்கு வளர்ச்சி அடைந்துள்ளது என்று இங்குப் பார்ப்போம்.

பலவந் சிங் ராஜ்புட்

பலவந் சிங் ராஜ்புட்

காங்கிரஸ் கட்சியில் இருந்து அன்மையில் பாஜக கட்சியில் சேர்ந்தவர் குஜராத்தினைச் சேர்ந்த பலவந் சிங் ராஜ்புட். இவர் தான் குஜராத்தில் இந்து தேர்வு செய்யப்பட்ட கோடிஸ்வர மாநிலங்ளவை உறுப்பினர் ஆவார்.

சொத்து மதிப்பு

சொத்து மதிப்பு

2012-ம் ஆண்டுப் பலவந் சிங் ராஜ்புட் அவர்களின் அசையும் சொத்து மதிப்பு 241.27 கோடியாகவும், அசையா சொத்து 22.08 கோடியாகவும், கடன் 52.32 கோடியாகவும் இருந்தது.

இதுவே 2017-ம் ஆண்டு அசையும் சொத்து மதிப்பு 254 கோடியாகவும், அசையா சொத்து 52.56 கோடியாகவும், கடன் 49.49 கோடியாகவும் உயர்ந்துள்ளது.

 

ஸ்மிர்தி இராணி

ஸ்மிர்தி இராணி

2014-ம் ஆண்டு உயர் கல்வி துறை அமைச்சராக இவர் பொறுப்பேற்ற பிறகு இவரது கல்வி சான்றிதழ்கள் போலியானவை என்று புகார் எழுந்து வழக்கும் தொடரப்பட்டது. ஆனால் தற்போதும் இவர் பாஜக கட்சியின் மத்திய அமைச்சர்களில் ஒருவர்.

சொத்து மதிப்பு

சொத்து மதிப்பு

2014-ம் ஆண்டு ஸ்மிர்தி இராணி அவர்களின் அசையும் சொத்து மதிப்பு 2.38 கோடியாகவும், அசையா சொத்து 2.53 கோடியாகவும், கடன் 4.22 லட்சமாகவும் இருந்தது.

இதுவே 2017-ம் ஆண்டு அசையும் சொத்து மதிப்பு 3.83 கோடியாகவும், அசையா சொத்து 5.01 கோடியாகவும், கடன் 21 லட்சமாகவும் உள்ளது.

 

அகமது படேல்

அகமது படேல்

காங்கிரஸ் கட்சி தலைவரான சோனியா காந்தியின் செயலாளராக இருந்த இவர் குஜராத் மாநிலத்தில் இருந்து வந்த ஒரு மாநிலங்களவை உறுப்பினர் ஆவார். தற்போது பாஜக-ல் இணைந்துள்ளார். இவரின் சொத்து மதிப்பும் 123 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.

சொத்து மதிப்பு

சொத்து மதிப்பு

2011-ம் ஆண்டு அகமது படேல் அவர்களின் அசையும் சொத்து மதிப்பு 1.57 கோடியாகவும், அசையா சொத்து 2.08 கோடியாகவும், கடன் 1.75 கோடியாகவும் இருந்தது.

இதுவே 2017-ம் ஆண்டு அசையும் சொத்து மதிப்பு 2.13 கோடியாகவும், அசையா சொத்து 6.02 கோடியாகவும், கடன் 1.17 கோடியாகவும் உள்ளது.

 

அமித் ஷா

அமித் ஷா

பாஜக கடிசியின் தேசிய தலைவரான அமித் ஷா அவர்களின் சொத்து மதிப்பும் 2012-ம் ஆண்டு இருந்ததை விட 2017-ம் ஆண்டு 19 கோடியாக அதிகரித்துள்ளது.

சொத்து மதிப்பு

சொத்து மதிப்பு

2012-ம் ஆண்டு அமித் ஷா அவர்களின் அசையும் சொத்து மதிப்பு 1.91 கோடியாகவும், அசையா சொத்து 6.63 கோடியாகவும், கடன் 2.60 கோடியாகவும் இருந்தது.

இதுவே 2017-ம் ஆண்டு அசையும் சொத்து மதிப்பு 19.01 கோடியாகவும், அசையா சொத்து 15.30 கோடியாகவும், கடன் 47.69 லட்சமாகவும் உள்ளது.

 

செய்திகள் நீக்கம்

செய்திகள் நீக்கம்

முதலில் இந்தச் செய்தியினை வெளியிட்டு இருந்த டைம்ஸ் ஆப் இந்தியா, எகனாமிக் டைம்ஸ் போன்ற சில இணையதளங்கள் சில மணி நேரங்களில் இந்தச் செய்திகளை நீக்கியும் உள்ளன. ஆனால் தமிழ் செய்தி தளங்களில் தற்போதும் இந்தச் செய்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Here’s how much Gujarat’s top 4 Rajya Sabha candidates are worth today

Here’s how much Gujarat’s top 4 Rajya Sabha candidates are worth today
Story first published: Saturday, August 5, 2017, 18:56 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X