70 வருட சுதந்திர இந்தியா எப்படி உருமாறியுள்ளது..? பாகிஸ்தான் உடன் ஒரு ஒப்பீடு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: 70 வருட சுதந்திரத்தை கொண்டாடும் இந்தியா கல்வியறிவு, வாழும் காலம் ஆகியவற்றில் மிகப்பெரிய அளவிலான வளர்ச்சியை அடைந்திருந்தாலும் மக்களின் வருமானம் மற்றும் குழந்தை இறப்பு விகிதம் ஆகியவற்றில் குறைவான அளவிலேடே வளர்ச்சி அடைந்துள்ளது.

 

சுதந்திர தினத்தை கொண்டாடும் தருவாயில் இருக்கும் நாம், இந்தியாவின் வளர்ச்சியை சீனா, பாகிஸ்தான், மலேசியா, தென் கொரியா, பிரேசில் ஆகிய நாடுகளுடன் ஒப்பிட்டு பார்க்க உள்ளோம்.

ஒப்பீடு

ஒப்பீடு

இந்தியாவின் இன்றைய நிலையை 1960வது ஆண்டுடன் சீனா, பாகிஸ்தான், மலேசியா, தென் கொரியா, பிரேசில் ஆகிய 5 நாடுகளுடன் ஒப்பிடும்போது நம் நாடு எந்த அளவிற்கு உயர்ந்துள்ளது, எதில் உயர்ந்துள்ளது ஆகியவற்றை முழுமையாக தெரிந்துக்கொள்ள முடியும்.

5 நாடுகள்

5 நாடுகள்

இந்த 5 நாடுகளை தேர்வு செய்தற்கான காரணங்கள்.

சீனா: 1960ஆம் ஆண்டில் மக்கள்:வருமான அளவீட்டில் சீனாவும் இந்தியாவும் கிட்டத்தட்ட ஒரே அளவில் இருந்தது.

தென் கொரியா: 1947களில் வளரும் நாடுகள் பட்டியலில் இருந்த தென் கொரியா தற்போது வளர்ந்த நாடுகள் பட்டியலில் உள்ளது. இதே படலத்திற்கு தற்போது இந்தியா வந்துள்ளதால் இந்த நாட்டுடன் ஒப்பிடுவது சரியாக இருக்கும்.

பாகிஸ்தான்: இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே வரலாறு, கலாச்சாரம் ஆகியவற்றை பங்கிடு செய்வதால் இந்த ஆய்வில் பாகிஸ்தான் சரியான தேர்வு.

பிரேசில்: பிரிக்ஸ் அமைப்பில் இருக்கும் நாடுகளில் கடந்த 30 வருடத்தில் பெரிய அளவிலான பொருளாதார மாற்றத்தை சந்தித்தது பிரேசிஸ்.

மலேசியா: இந்தியா போல் அல்லாமல் பல கலாச்சாரம், பல பிரச்சனைகளை சந்தித்த மலேசியா இன்று எப்படி உருமாறியுள்ளது என்பதை இந்தியாவுடன் கணக்கிடுவது இந்தியாவின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும்.

வருமானம்
 

வருமானம்

கடந்த 56 வருடத்தில் இந்தியாவின் தனிமனித வருமாத்தின் அளவு 81.3 (1960 ஆம் ஆண்டு) டாலரில் இருந்து 1,709.4 டாலராக உயர்ந்துள்ளது. இது கிட்டத்தட்ட 21 மடங்கு அதிகமாகும்.

ஆனால் இது சீனா, மலேசியா, பிரேசிஸ், தென் கொரியா ஆகிய நாடுகளை ஒப்பிடும்போது இந்தியா குறைவான அளவிலேயே இதில் வளர்ச்சி அடைந்துள்ளது.

வாழும் காலம்

வாழும் காலம்

இந்தியாவில் மனிதர்களின் வாழும் காலம் 1960-2015ஆம் ஆண்டுக்கு மத்தியிலான காலத்தில் சுமார் 65.8 சதவீதம் வரை வளர்ச்சி அடைந்துள்ளது.

இந்தியாவில் 1960ஆம் ஆண்டு சராசரியாக மக்கள் வாழும் காலம் 41 ஆண்டாக மட்டுமே இருந்த நிலையில் 2015ஆம் ஆண்டு இது 68ஆக உயர்ந்துள்ளது.

குழந்தை இறப்பு விகிதம்

குழந்தை இறப்பு விகிதம்

ஒரு நாட்டின் சுகாதாரம், முதல் பிறந்த நாளுக்குள் இறக்கும் குழந்தையின் எண்ணிக்கையை வைத்து கணக்கிடப்படும். இது 1000 குழந்தைகளை கொண்டு கணக்கிடப்படும்.

இந்தியாவில் 1960ஆம் ஆண்டில் 1000 குழந்தைக்கு 165 குழந்தைகள் பிறந்த ஒரு வருடத்திற்குள்ளேயே இறந்தனர். தற்போது இதன் அளவு 38ஆக குறைந்துள்ளது.

கல்வியறிவு

கல்வியறிவு

இந்திய மக்கள் மத்தியில் 1980களில் வெறும் 40.8 சதவீதம் மக்கள் மட்டுமே எழுத, படிக்க தெரிந்தவர்களவும், கல்வியறிவு உடையவர்களாகவும் இருந்தனர். தற்போது இதன் அளவு 71 சதவீதமாக உயர்ந்துள்ளது.

காடுகள்

காடுகள்

காடுகளின் பரப்பளவு ஒரு நாட்டின் காற்று, குடிநீர், பருவகால மாற்றம் ஆகியவற்றை காக்கும் முக்கிய காரணியாகும். இந்நிலையில் கடந்த 25 வருடத்தில் இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் காடுகள் இருக்கும் இடம் கணிசமாக உயர்ந்துள்ளது.

1990ஆம் ஆண்டில் இதன் அளவு 21.5 சதவீதமாக மட்டுமே இருந்த நிலையில், 2015ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் 23.8 சதவீதமாக உயர்ந்துள்ளது.

புகைப்படம்: இந்தியாஸ்பென்ட்

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Independence day special: What has changed in 70 years in India

Independence day special: What has changed in 70 years in India
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X