தமிழ் நாட்டைப் பின்பற்றும் கர்நாடகா, ஜார்கண்டு, ராஜஸ்தான், ஆந்திரா, ஒடிசா.. எதில் தெரியுமா..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தமிழ்நாட்டில் 2013-ம் ஆண்டு அம்மா உணவகம் திறந்த காலத்தில் இந்தியா முழுவதும் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டது. இத்திட்டம் என்ன தான் அரசுக்கு நட்டத்தினை ஏற்படுத்துவதாகத் தமிழகத்தில் கூறப்பட்டாலும் பிற மாநிலங்கள் இதனை அறிமுகச் செய்யத் துவங்கியுள்ளன.

 

அந்தப் பட்டியலில் கர்நாடகா மாநிலமும் தற்போது இணைந்துள்ள நிலையில் எந்த மாநிலங்களில் எல்லாம் இந்தத் திட்டம் துவங்கப்பட்டுள்ளது என்று இங்குப் பார்ப்போம்.

நோக்கம்

நோக்கம்

சாப்பாட்டுக்காகப் போராடும் நகரங்களில் உள்ள தொழிலாள வர்க்கத்தை இந்த உணவகங்கள் நோக்கமாக்க ஆரம்பிக்கின்றன.

கர்நாடகா

கர்நாடகா

கர்நாடகா மாநிலத்தினை ஆலும் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் இந்திரா கேண்டின் என்ற பெயரில் ஆகஸ்ட் 16-ம் தேதி 101 உணவங்களைத் திறந்து வைத்துள்ளார்.

இங்குக் காலை உணவு 5 ரூபாய் முதலும், மதிய உணவும் 10 ரூபாய்க்கும் கிடைக்கின்றது. அதுமட்டும் இல்லாமல் டீ, காப்பி உள்ளிட்டவற்றை விற்கப்படுகின்றது. பெங்களூரு முழுவதும் 198 கேண்டின் திறக்க இந்த அரசு முடிவு செய்துள்ளது.

 

தமிழ் நாடு
 

தமிழ் நாடு

2013-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அவர்களாஇ துவக்கி வைக்கப்பட்ட அம்மா கேண்டின் திட்டம் நாடு முழுவதும் பிரபலம் ஆகும். இங்குத் தினமும் இட்லி, பொங்கல், சப்பாத்தி, சாம்பார் சாதம் என்று துவக்கத்தில் பரப்பாஅக இயங்கி வந்தாலும் தற்போது முறையாக வினியோகம் நடைபெறுவதில்லை என்பது பொதுமக்கள் குற்றச்சாட்டு. அதே நேரம் இதனால் அரசுக்கு ஒவ்வொரு மாதமும் பல கோடிகள் நட்டம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ராஜஸ்தான்

ராஜஸ்தான்

அன்னபூரனா ராசோசிஸ் என்ற பெயரில் ராஜஸ்தானிலும் காலையில் 5 ரூபாய்க்கும், மதிய உணவு 8 ரூபாய் எனவும், மூன்று வேலையும் உணவை வழங்கி வருகின்றது.

ராஜஸ்தான் அரசு வீட்டில் சமைக்கும் உணவை போன்று வெளியில் உணவை அளிக்கவேண்டும் என்று இத்திட்டத்தினை அறிமுகம் செய்துள்ளது.

 

 ஜார்காண்டு

ஜார்காண்டு

ஜார்காண்டு மாநிலம் 2011-ம் ஆண்டு முதல் முக்கிய மந்திரி தால் பாட் யோஜனா என்ற பெயரில் குறைந்த ளவில் சமைக்கப்பட்ட உணவை வழங்கும் திட்டத்தினைச் செயல்படுத்தி வருகின்றது.

இங்கு உள்ள முதியோர்கள் ஒரு நாளைக்கு 5 ரூபாய் செலுத்தி வரம்பில்லா அளவில் அரிசி, பருப்பு வகைகள் மற்றும் காய்கறி அல்லது சோயாபீன் கறி மற்றும் பச்சை மிளகாய் மற்றும் உப்பு எனத் தினமும் 60,000 நபர்கள் பெற்று பயன்பெறுகின்றனர்.

 

ஒடிசா

ஒடிசா

ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் அவர்களாம் தொடங்கப்பட்ட ஆஹார் திட்டம் அரிசி மற்றும் தால்மா எனப்படும் பருப்பு மற்றும் காய் கறிகளுடனான உணவை 5 ரூபாய்க்கு வழங்கி வருகின்றது.

ஆந்திரா

ஆந்திரா

சந்திரபாபு நாயுடுவின் ஆந்திர அரசும் அன்னா உணவகம் என்ற பெயரில் குறைந்த விலை உணவகத்தினை நடத்தி வருகின்றது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Why low rice canteens are an instant hit in India

Why low rice canteens are an instant hit in India
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X