பள்ளிப்படிப்பை கூட முடிக்காத இவர் எச்டிஎப்சி வங்கிக்கே சவால் விடுகிறார்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மகாராஷ்டிர மாநிலத்தின் யவத்மால் மாவட்டத்தில் உள்ள தொலைதூரக் கிராமத்தைச் சேர்ந்த இந்த 24 வயது இளைஞர் 50,000 பேருக்கு வேலை வாய்ப்பை அளிக்கும் ஒரு நிறுவனத்தைத் தொடங்க வேண்டுமென்ற இலட்சியக் கனவைக் கொண்டிருந்தார்.

 

இந்த வறட்சி தாக்கிய பகுதியில் ஒரு விவசாயியின் மகனாகப் பிறந்த திலீப் பாட்டில் தனது இயல்பான தொழிலைச் செய்வதில் மிகக் குறைந்த ஆர்வம் கொண்டிருந்தார். எப்பொழுதும் புதிய விஷயங்களைச் செய்வதில் ஆர்வமும், மிகப் பெரிய கனவுகளும் கொண்டிருந்த அவர் அதன் தொடர்ச்சியாகத் தனது கனவுகளுக்குச் சிறகுகள் கொடுப்பதற்காக 1995 ஆம் வருடம் மும்பைக்கு நகர்ந்தார்.

சாய் ஆட்டோ மொபைல்ஸ்

சாய் ஆட்டோ மொபைல்ஸ்

பள்ளிப்படிப்பைக் கூட முழுமையாக முடிக்காத திலீப் பாட்டிலின் துணிகரக் கனவுகள் நனவாகும் தூரம் வெகு தூரத்தில் இல்லாத நிலையில், அவர் தற்போது சாய் ஆட்டோ மொபைல்ஸ் மையத்தின் வாகன விற்பனையாளராக இருக்கிறார். இந்த விநியோகஸ்த உரிமை 2002 ஆம் ஆண்டுத் தொடங்கப்பட்டது, மேலும் தற்சமயம் 3,000 பணியாளர்களைப் பணியில் அமர்த்தியுள்ளது.

1000 கோடி வருமானம்

1000 கோடி வருமானம்

இந்த நிறுவனம் ரூ. 1000 கோடி ஆண்டு வருவாயைக் கொண்டுள்ளது. சாய் பாயிண்ட்டின் விரைவான வளர்ச்சியின் வேகம் சரியான பாதையில் காணும் கனவுகள் சரியாகத்தான் இருக்கும் என்கிற உண்மையை நிலைநாட்டுகின்றது.

கட்டுமான தொழில்
 

கட்டுமான தொழில்

இதைக் கேட்பதற்கு ஆச்சரியமாக இருக்கலாம், ஆனால் உண்மையில் திலீப் நன்கு தீர யோசித்து இந்த ஆட்டோமொபைல் டீலர்ஷிப் வணிகத்தில் இறங்கவில்லை, மாறாக இது அவருக்கு ஒரு தற்செயலான பின்னடைவு தேர்வாகும். 1995 ஆம் ஆண்டு அவர் தந்தையிடமிருந்து ரூ. 25 இலட்சம் பணத்தைக் கடனாகப் பெற்றுக் கொண்டு அரசாங்கத்தில் குடியிருப்புக் கட்டுமானராகப் வேலை செய்வதற்காக மும்பைக்கு வந்தார்.

பிடிக்காமல் வெளியேறத் திட்டம்

பிடிக்காமல் வெளியேறத் திட்டம்

ஆனால் அந்த வேலையின் கலாச்சாரம் அவருக்குப் பொருந்தவில்லை. அதிகாரத்துவ அமைப்பு முறையும், முழங்கால் ஆழம் வரை பரவியுள்ள ஊழலும் அவரை அமைதியின்றியும் வருத்தப்படவும் செய்தது. எனவே அவர் இவற்றிலிருந்து விடுபட விரும்பினார், மேலும் இதர வாய்ப்புகளைத் தேடத் தொடங்கினார்.

"ஒரு நாள் மாலாத்திலுள்ள சாய் ஹோண்டா மையத்தைத் தாண்டிச் சென்று கொண்டிருந்த போது இவரது மூளைக்குள் ஏதோ ஒன்று உறைத்தது, உடனே அந்த ஷோரூமிற்குள் நுழைந்து விநியாகஸ்த உரிமையாளரான திரு. கங்காதர் ஷெட்டியிடம் அந்த வியாபாரத்தைப் பற்றி விசாரித்தார். அவர் மிகவும் கனிவான அன்பானவராக இருந்தார். ஹோண்டாவுடன் தொடர்பு கொள்ள இவருக்கு உதவியுள்ளார். இப்படித்தான் சாய் பாயிண்ட் ஹோண்டா பிறந்தது. பின்னர் இதர வாகனங்களின் தயாரிப்பு மற்றும் நிதி சேவைகளாக விரிவுபடுத்தப்பட்டது.

 

அனுபவம் இல்லை

அனுபவம் இல்லை

இந்த வியாபாரத்தில் அனுபவம் இல்லாத போதிலும் மேலும் கிட்டத்தட்ட சுத்தமாக இதைப் பற்றிய அறிவு இல்லாத போதிலும் அவருடைய உறுதியான நம்பிக்கையும் மற்றும் விடாமுயற்சியும் தான் திலீப் பாடீலுக்குத் தானேவில் அவருடைய முதல் டீலர்ஷிப்பில் வெற்றி பெற உதவியது. "நான் இதில் மிகப் பெரிய அபாயத்தைத் துணிச்சலாகக் கையிலெடுத்தேன், இடத்திற்கான வாடகையே ரூ. 2 இலட்சமாகும். முதல் ஆறு மாதங்களுக்கு வாடகையைச் சமாளிப்பதே மிகக் கடினமாக இருந்தது. இருந்தாலும், இடத்தின் உரிமையாளர் மிக நல்ல மனிதராக இருந்தார். அவர் உண்மையில் எனக்கு உதவியாக இருந்தார்." என்று சொல்கிறார் திலீப் பாடீல்.

தொழிலில் ஏறுமுகம்

தொழிலில் ஏறுமுகம்

இறுதியில், இந்த டீலர்ஷிப் 2002 ஆம் ஆண்டு முதல் ஏறுமுகமாக இயங்கத் தொடங்கியது, முதல் வருடம் எங்கள் நிறுவனம் 900 எண்ணிக்கைகள் ஆக்டிவா வண்டிகளை விற்றது, இருந்தாலும் செலவுகளை எதிர்கொள்ள அது போதுமானதாக இல்லை. ஒரு வருடம் கழித்து ஹோண்டா நிறுவனம் திலீப்பின் சொந்த ஊரான யவத்மதலில் டீலர்ஷிப் எடுப்பதற்கு விண்ணப்பங்களை வரவேற்றது.

சொந்த ஊரில் ஷோரூம் துவங்கத் துணிச்சலான முடிவு

சொந்த ஊரில் ஷோரூம் துவங்கத் துணிச்சலான முடிவு

"எனது சொந்த ஊரைப் பற்றி நான் உணர்ச்சி வசப்பட்டு இருந்தேன். எனவே நான் இந்த டீலர்ஷிப்பை பெற்றே ஆக வேண்டும். இல்லையென்றால் தானேவில் உள்ள டீலர்ஷிப்பையும் நான் விட்டுவிடுகிறேன் என்றேன், கடவுளுக்கு நன்றி, நல்லவேளையாக அவர்கள் அதற்கு ஒப்புக்கொண்டார்கள்," என்று நினைவுகூருகிறார் திலீப். 2002 ஆம் ஆண்டு ரூ. 5 கோடி வருமானத்திலிருந்து, தற்போது இந்த நிறுவனம் ரூ. 1000 கோடி வருமானத்துடன் முன்னணி வரிசையில் உள்ளது.

வாழ்க்கையை மாற்றிய ஆக்டிவா

வாழ்க்கையை மாற்றிய ஆக்டிவா

ஹோண்டா மோட்டார் சைக்கிள்ஸ் புதிய வாகன மாதிரிகளைச் சேர்க்கத் துவங்கியதும் அந்த அளவு இன்னும் அதிகரித்தது. இருப்பினும், திலீப் தனது வெற்றிக்குக் காரணம் ஹோண்டா என்று இப்பொழுதும் புகழ்கிறார். "ஆக்டிவா தான் எனது வாழ்க்கையை மாற்றி அமைத்தது மேலும் இது வரை நான் சுமார் 3.5 இலட்சம் ஹோண்டா ஆக்டிவாக்களுக்கு மேல் விற்றிருக்கிறேன்," என்கிறார்.

இலக்கு

இலக்கு

2002 ஆம் ஆண்டில் ஒரு வருடத்திற்கு 1 இலட்சம் யூனிட்டுகள் விற்பனை என்னும் அவருடைய துணிச்சலான விற்பனை என்கிற இலக்கை, ஹோண்டா மோட்டார் சைக்கிள் நிர்வாகத்தினர் அவ்வளவு தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை என்று அவர் நினைவுகூருகிறார். தற்போது, சாய் பாயிண்ட் நிறுவனம் ஒவ்வொரு வருடமும் 60,000 க்கும் அதிகமான ஹோண்டா இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்து வருகிறது. மேலும் 2020 ஆம் ஆண்டிற்குள் 1 இலட்சம் என்கிற குறியீட்டை சாதிக்க வேண்டும் என்று குறிக்கோளைக் கொண்டுள்ளது. தற்போது சாய் பாயிண்ட் இந்தியாவின் மிகப் பெரிய ஹோண்டா இரு சக்கர வாகன விற்பனையாளராக இருக்கிறது.

ஆட்டோமொபைல்ஸ் மீதான காதல்

ஆட்டோமொபைல்ஸ் மீதான காதல்

"இது ஏற்ற இறக்கங்கள் நிறைந்த ஒரு பயணம் ஆகும். என்னுடைய மாமா எனக்கு ஒரு மோட்டார் சைக்கிளைப் பரிசளித்த நொடிப்பொழுதிலிருந்து எனக்கு ஆட்டோமொபைல்ஸ் மீதான காதல் தொடங்கியது, இன்று நான் என்னுடைய 14 வயது மகனுக்கு ஒவ்வொரு வருடமும் ஒரு ஆடம்பரக் காரை பரிசளித்துக் கொண்டிருக்கிறேன்," என்று சொல்கிறார் திலீப்.

கிளைகள்

கிளைகள்

இன்று சாய் பாயிண்ட் ஆட்டோமொபைல்ஸ் தானே, பிவான்டி (தானே), மிரா சாலை (மும்பை), மும்ப்ரா (தானே), புர்னா (பர்பானி), யவத்மால் மற்றும் நாக்பூர் ஆகிய இடங்களில் இருக்கின்றது. இதன் பன்முகத்தன்மை வெறும் இருசக்கர வாகனங்களுடன் மட்டும் நின்றுவிடவில்லை.

கார் விற்பனை

கார் விற்பனை

சாய் பாயிண்ட் குழுமம் கோவாவில் 1.43% மாருதி சுஜுகி பிஎஸ்ஈ க்கு அதிகாரமளிக்கப்பட்ட விநியோகஸ்த உரிமையைப் பெற்றுள்ளது. மேலும், முன் உரிமைப் பெற்ற ஆடம்பரக் கார் பிரிவில் அந்தேரி (மும்பை) மற்றும் புனேவிலும் கவர்ச்சிகரமான அமைப்புளை ஏற்படுத்தி வெல்ல முடியாத வீரனாக இருக்கிறது.

ஃபைனான்ஸ்

ஃபைனான்ஸ்

சாய் பாயிண்ட் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் என்கிற பெயரின் கீழ் சாய் பாயிண்ட் குழுமம் இருசக்கர வாகனங்களுக்கு நிதியளிக்கும் துறையிலும் நுழைந்துள்ளது. இரண்டு வருட குறுகிய கால இடைவெளியில் இந்த வியாபாரத்திலும் தன்னை வலிமையானதாக நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. இந்தக் குழுமத்தால் விற்கப்பட்ட மொத்த இருசக்கர வாகனங்களில் சுமார் 35% வண்டிகள் சாய் பாயிண்ட் நிதி நிறுவனத்தால் நிதியுதவி பெற்றவையாகும்.

ஏச்சிஎப்சி உடன் போட்டி போடும் நோக்கம்

ஏச்சிஎப்சி உடன் போட்டி போடும் நோக்கம்

எங்களது நோக்கம் ஹெச்டிஎஃப்சி யை விட ஒரு பெரிய நிதியியல் நிறுவனமாக ஆக வேண்டும் என்பதே, சில ஆண்டுகளில் நாங்கள் அதை அடைவோம் என்று நம்புகிறோம், "எனத் திலீப் உறுதிப்படத் தெரிவித்தார். அவரது நம்பிக்கையும், தைரியமுமான இலக்குகள் அவரது சகோதரர்கள் மற்றும் குடும்பத்தினரால் நன்கு அறியப்பட்டவை.

மகன் திலீப்

மகன் திலீப்

"நான் என் அப்பாவின் நம்பிக்கையையும் உறுதி மிகுந்த மனநிலையையும் நேசிக்கிறேன், மேலும் எனக்குள்ளும் அந்தப் பண்புகளை வளர்த்துக் கொள்ள விரும்புகிறேன்." என்கிறான் திலீப்பின் பள்ளி செல்லும் மகன்.

பணியாளர்களின் குடும்பத் தேவைகள்

பணியாளர்களின் குடும்பத் தேவைகள்

திலீப் தனது வெற்றியின் மிகப் பெரிய பங்களிப்பாளராக மக்களைக் கருதுகின்றார். "மக்களைக் கையாளுவதற்கான முக்கிய யுக்தி அவர்களுடைய திருப்தியான விலைகளுக்கு ஏற்றவாறு இணங்க வேண்டும். இதற்காக நாங்கள் பணியாளர்களின் குடும்பத் தேவைகளைப் புரிந்துகொண்டு சரியான நேரத்தில் நிவாரண நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கினோம். இதனால் பிரச்சனைகள் சமாளிக்க முடியாத அளவிற்கு வளரும் முன் எங்களால் முளையிலேயே கிள்ளிவிட முடிகிறது." என்கிறார்.

மனித ஆற்றலுக்கான செலவு

மனித ஆற்றலுக்கான செலவு

தற்போது எங்கள் நிறுவனத்தின் பங்கில் 40 சதவிகிதத்தை மனித ஆற்றலுக்காகச் செலவிடுகிறது. மேலும் இது மிகப்பெரிய பணச் செலவாகும்.

 மாதம் 2 லட்சம் சம்பாதிக்கும் ஊழியர்கள்

மாதம் 2 லட்சம் சம்பாதிக்கும் ஊழியர்கள்

சாய் பாயிண்ட் எப்பொழுதும் அதன் மக்களின் பொறுப்பு மற்றும் பங்களிப்பை உடனடியாக அடையாளம் கண்டு அங்கீகரிக்கிறது. அனைத்துத் துறைத் தலைவர்களும் - (அது சேவை, விற்பனை, கணக்கியல் இப்படி எந்தத் துறையாக இருந்தாலும்) அந்த நபர்கள் நிறுவனம் தொடங்கப்பட்ட ஆரம்ப நாட்களிலேயே நிறுவனத்தில் இணைந்தவர்களாவர். "தொடக்கத்தில் எங்கள் நிறுவனத்தில் ரூ. 3,000 சம்பளத்திற்கு வேலைக்குச் சேர்ந்தவர்கள் தற்போது மாதத்திற்கு ரூ. 2 இலட்சம் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்," என்கிறார் திலீப்.

தலைமை நிர்வாக அதிகாரிகள் இல்லை

தலைமை நிர்வாக அதிகாரிகள் இல்லை

தகுதியால் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களால் பணியாளர்கள் மேற்பார்வை செய்யப்படுகிறார்கள். வெளிப்படையாக, சாய் பாயிண்டில் தலைமை நிர்வாக அதிகாரிகள் இல்லை. "எங்களுக்குத் தலைமை நிர்வாக அதிகாரிகள் தேவையில்லை, மேலும், விரும்பும் விளைவுகளைப் பெற வேண்டுமென்றால் தொழிலதிபர்களே தலைமை நிர்வாக அதிகாரிகளாகச் செயல்பட வேண்டும்," என்று கருத்துத் தெரிவித்தார் திலீப்.

குறிக்கோள்

குறிக்கோள்

கடினமான வேலை அல்லது கஷ்டங்களுக்கு மாற்றாக வேறு ஏதும் இல்லை, ஏனெனில் உலகத்தை எதிர்கொண்டு நாம் வெற்றிகரமாக வெளியேற்றுவதற்கு இந்த இரண்டும் நம்மைப் பலப்படுத்துகின்றன. "நான் வியாபாரத்தை ஆரம்பித்தபோது, வேலைவாய்ப்புகளை உருவாக்கக்கூடிய ஏதாவது ஒன்றை உருவாக்க வேண்டும் என்கிற பார்வை எனக்கு இருந்தது. இங்கே எல்லோரும் தொடக்க நிலையில் வேலை செய்யத் தொடங்கி, பேருந்தைத் தவற விடுவோம் என்கிற நினைப்பு கூட இல்லாமல் அவர்களது முன்நோக்கிய வழியில் வேலை செய்து வருகிறார்கள்," என்கிறார் திலீப், கூடுதலாக, "தற்போது நான் 50,000 மக்களுக்கு நிறுவனத்தில் வேலைவாய்ப்பை வழங்க வேண்டும் என்கிற குறிக்கோளைக் கொண்டிருக்கிறேன்," என்று தெரிவிக்கிறார்.

36 கடைகள் 3000 ஊழியர்கள்

36 கடைகள் 3000 ஊழியர்கள்

சாய் பாயிண்டில் தற்போது 36 கடைகள் உள்ளன, மொத்தம் 3,000 இங்குப் பேர் வேலை செய்கின்றனர். இந்த ஆண்டு 200 கோடி மதிப்புள்ள வாகனங்களுக்கு நிதி வழங்குவதை இலக்காகக் கொண்டுள்ளது, விரைவில் கார்களுக்கு நிதி உதவி சேவையும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

முக்கிய வருவாய் ஹோண்டாவில் இருந்து

முக்கிய வருவாய் ஹோண்டாவில் இருந்து

சாய் பாயிண்டின் மொத்த வருவாயில் ஹோண்டா இரு சக்கர வாகனங்கள் முதலிடத்தில் முக்கியப் பங்களிப்பாளராக இருக்கிறது, இவற்றில் பெரும்பான்மையான இலாபங்கள் விற்பனையிலிருந்து வருகின்றன, அதே நேரத்தில் உதிரிப் பாகங்கள் மற்றும் சேவைகள் 35 சதவிகிதம் பங்களிக்கிறது. சாய் பாயிண்டிற்கு இரு சக்கர வாகன உதிரிப் பாகங்கள் மற்றும் சேவைகளிலிருந்து சுமார் 25 கோடி ரூபாய் அதன் 25 பட்டறைகளிலிருந்து கிடைக்கிறது. சாய் பாயிண்டின் ஒட்டுமொத்த விற்பனை முதல் சேவை வருமான விகிதம் 1:9 ஆகும்.

மாருதி சுசூகி

மாருதி சுசூகி

ஆனால் மாருதி சுசூகி டீலர்ஷிப்பில் 50 சதவிகிதத்திற்கும் மேலாக உதிரி பாகங்கள் மற்றும் சேவைகளிலிருந்து லாபங்கள் கிடைக்கிறது. சாய் பாயிண்ட் குழுமம் சராசரியாக 4 சதவிகித லாபத்தைப் பெறுகிறது, ஏனெனில் இருசக்கர வாகனப் பிரிவில் இது மிக உயர்ந்த லாபமாகும்.

குடுமத்துடன் நேரத்தினைச் செலவிடுதல்

குடுமத்துடன் நேரத்தினைச் செலவிடுதல்

திலீப் பாட்டிலைப் பற்றிய மிக அற்புதமான விஷயம் என்னவென்றால், அவருக்கு எல்லா வேலைகளும் இருந்த போதிலும் அவரால் குடும்பத்திற்காகத் தாராளமாக நேரம் செலவிட முடிகிறது. மேலும் அவர் தினமும் மாலை 5.30 க்கு வீட்டிற்குச் சென்று விடுகிறார்.

திலீப் எங்களுடன் பகிர்ந்து கொண்ட சில முக்கியக் கருத்துக்கள் உள்ளன, அவருடைய சொந்த வார்த்தைகளில் அவற்றைக் கீழே வைக்கிறோம்.

 

 திலீப் பாடீலின் கதை

திலீப் பாடீலின் கதை

செல்வாக்கான விவசாயக் குடும்பத்தில் பிறந்த எங்களைக் கவனித்துக் கொள்ள வேலையாட்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். எனது பணியாள் சம்பளம் வாங்கும் நாளில் மகிழ்ந்த விதம், நான் கவனித்த மிக ஈர்ப்பான ஒரு விஷயமாகும். இது எனக்கு ஒரு தூண்டுகோலாக இருந்தது.

பணியாளர்களுக்குச் சம்பளம் அளிக்கும் போது மகிழ்ச்சி

பணியாளர்களுக்குச் சம்பளம் அளிக்கும் போது மகிழ்ச்சி

ஒரு பணியாளருக்குச் சம்பளம் கொடுக்கப்படும் போது அதுவும் நேரந்தவறாமல் கொடுக்கப்படும் போது அவர் மிகுந்த மகிழ்ச்சியடைகிறார் என்பதை அந்தச் சம்பவம் எனக்கு நேர்மறையான விதத்தில் தெரிவித்தது. அப்போது அந்தப் பணியாளர் தன் சம்பள நாளை எதிர்நோக்கி வேலை பார்க்கிறார், மேலும், பெரும்பாலும் திறமையுடன் வேலையைக் கையாள்கிறார்.

இன்றைய வெற்றி இவர்களுக்குச் சமர்ப்பணம்

இன்றைய வெற்றி இவர்களுக்குச் சமர்ப்பணம்

தற்போது, கிட்டத்தட்ட மறைந்து போன முறையான கூட்டுக்குடும்பப் பின்னணியிலிருந்து வந்த நான் கூட்டுக்குடும்ப முறையிலிருந்து இரத்த உறவுகளுக்கு அப்பாற்பட்ட நபர்களைக் கொண்ட ஒரு குடும்பத்தைக் கட்டுமானிக்க வேண்டும் என்கிற உள்ளுணர்வைக் கொண்டிருந்தேன். என்னுடைய தொழில் நிறுவனத்தின் இன்றைய வெற்றி இங்கிருக்கும் ஒவ்வொரு பங்களிப்பாளர் வழங்கிய வலிமையே ஆகும். மற்றொரு தொழில் இரகசியம் மக்களுக்கு அதிகாரம் அளிப்பதாகும், இதனால் அவர்கள் வளர்ச்சிக்கான ஆலோசனைகளை வழங்க முடியும். உங்கள் திறமையை மேம்படுத்த அளிக்கப்படும் தொடர்ச்சியான பயிற்சி சாய் பாயிண்ட்ஸ்க்கு நன்றாக வேலை செய்கிறது.

முயற்சியின் விளைவு

முயற்சியின் விளைவு

தவறாகிப் போன விஷயங்கள் அலட்சியத்தால் நடந்தவை அல்ல, அறியாமையால் நடந்தவை. சரியாக நடந்த விஷயங்கள் எல்லாம் முழுமையாக ஊக்கமளிக்கப்பட்ட ஒரு முயற்சியின் விளைவுதான். நாங்கள் வாடிக்கையாளர் திருப்தியை திட வடிவச் சொத்துக்களை விட அதிக மதிப்புடைய உணர்வுப்பூர்வமான சொத்துக்களாகக் கருதுகிறோம்.

சலுகைகள்

சலுகைகள்

திடச் சொத்துக்கள் ஒரு வாடிக்கையாளருக்குத் தள்ளுபடிகள், சலுகைகள், இலவச பாகங்கள் மற்றும் இதர சிலவற்றை ஆட்டோ தொழிற்பிரிவில் பெற இன்றியமையாததாகும். அதே சமயம், இவை நிறுவனத்தின் வருமானத்தை ஓரளவிற்கு வற்ற செய்துவிடும், மேலும் அவை வருவாயை அதிகரிக்கவும் செய்கிறது.

உணர்வுப்பூர்வமான சொத்து

உணர்வுப்பூர்வமான சொத்து

மறுபுறம், வாடிக்கையாளர் திருப்தி என்னும் உணர்வுப்பூர்வமான சொத்து, உண்மையில் நிஜமான நட்பு என்கிற அடிப்படையில் வருகிறது.

மகாராஷ்டிரா மட்டும் இல்லாமல் பிற மாநிலங்கள்

மகாராஷ்டிரா மட்டும் இல்லாமல் பிற மாநிலங்கள்

நான் எனது வியாபாரத்தை விரிவுபடுத்தவும் அத்துடன் தேவைக்கேற்ப பன்மயமாக்கவும் இயற்கையாகவே முன்நோக்கி எதிர்பார்க்கிறேன். நாங்கள் மகாராஷ்டிரா மற்றும் கோவாவுடன் பல்வேறு மாநிலங்களிலும் எங்கள் இருப்பைக் கொண்டிருக்கிறோம். மாநிலங்களின் எண்ணிக்கை, அதனுடன் தொடர்புடைய விநியோகஸ்த உரிமைகள் மற்றும் கூட்டாளிகளை விரிவுபடுத்த விரும்புகிறோம்.

 கின்னஸ் சாதனை இலக்கு

கின்னஸ் சாதனை இலக்கு

எங்கள் வியாபாரத்தின் தற்போதைய அளவு, வருடத்திற்குச் சுமார் 60,000 க்கும் கூடுதலான வாகனங்களாகும். இது 2020 ஆம் ஆண்டில் இரட்டிப்பாக அமைக்கப்படவுள்ளது. அப்போது வருடத்திற்கு 1,00,000 த்திற்கும் அதிகமான வாகனங்களை விற்பனை செய்து கின்னஸ் உலகச் சாதனை புத்தகத்தில் இடம் பெற விரும்புகிறோம். சாய் பாயிண்ட் ஏற்கனவே அதற்கான செயல்திட்டத்தில் இறங்கியுள்ளது.

முடிவு எடுப்பது யார்?

முடிவு எடுப்பது யார்?

ஒரு விற்பனை தொழிலதிபராக வேண்டுமென்று முடிவெடுத்த நாளிலிருந்து நான் தான் நிறுவனத்தின் முடிவுகளை எடுப்பவனாக இருந்து வருகிறேன். உங்கள் நிபுணத்துவத்தின் வழியாக முடிவுகள் அவசியம் எடுக்கப்பட வேண்டுமென்று சொல்லும் விதிமுறையின் படி நான் செல்கிறேன். மேலும் நீங்கள் முடிவுகளை எடுப்பது குறித்துக் குழப்பமடையக் கூடாது.

நம்பிக்கை

நம்பிக்கை

ஏனென்றால் எடுக்கப்படும் முடிவுகள் மட்டுமே உங்களை முன்னோக்கி எடுத்துச் செல்லும். இதுவரை எனது முடிவுகள் மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தியதாக நான் கருதவில்லை. இது கண்டிப்பாக என் மேல் நான் வைத்திருக்கும் இறுதி நம்பிக்கை மற்றும் நான் சேகரித்து வைத்திருக்கும் மக்கள் சக்தியின் விளைவாக இருக்க வேண்டும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

This school drop out Challenges HDFC from Maharashtra village built Rs 1,000 crore auto dealership

This school drop out Challenges HDFC from Maharashtra village built Rs 1,000 crore auto dealership
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X