ஆதார் அட்டையுடன் கட்டாயம் இணைக்க வேண்டிய ஆறு முக்கிய ஆவணங்கள்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒவ்வொரு இந்திய குடிமகனின் ஆதாரமாக விளங்கும் ஆதார் அட்டை ஒருசில முக்கிய ஆவணங்களுடன் இணைக்க வேண்டியது அவசியம் என்று அரசு வலியுறுத்தி வருகிறது. இந்த இணைப்பு நடந்தால் மட்டுமே அரசின் சலுகைகளைப் பெற முடியும் என்ற நிலை உள்ளது.

ஆதார் அட்டையை இந்த ஆவணங்களுடன் இணைப்பது மிக எளிதாக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் என இரண்டிலும் இணைக்கலாம்

 ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டிய ஆவணங்கள்:

ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டிய ஆவணங்கள்:

வங்கி கணக்குகள்
பான் கார்டு
வாக்காளர் அடையாள அட்டை
எல்பிஜி கேஸ் இணைப்பு
ரேசன் கார்டு
மொபைல் எண்

மேற்கண்ட ஆறு ஆவணங்களை ஆதார் அட்டையுடன் இணைப்பது எப்படி என்பதையும் அதன் பயனையும் தற்போது பார்ப்போம்

 

வங்கி கணக்கு

வங்கி கணக்கு

வங்கி கணக்குடன் ஆதார் அட்டை எண் இணைக்க வேண்டும் என்றால் உங்களுக்கு முதலில் நெட் பேங்கிக் வசதி இருக்க வேண்டும்.

எப்படிச் செய்வது?

எப்படிச் செய்வது?

* முதலில் நெட் பேங்கிங் லாகின் சென்று பின்னர் அதில் உள்ள Update Aadhaar Card Details' அல்லது ‘Aadhaar Card Seeding' என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்
* உங்கள் ஆதார் விபரங்களை அதில் பதிவு செய்து பின்னர் அதை மீண்டும் வெரிஃபை செய்து பின்னர்ச் சப்மிட் கொடுக்கவும்
* உங்கள் ஆதார் விபரங்களை வங்கி உறுதி செய்ததும் உங்களுக்கு மெயில் மூலமோ அல்லது நீங்கள் பதிவு செய்த தொலைப்பேசி எண்ணுக்கோ தகவல் வரும்
* ஆஃப்லைனில் இதைச் செய்ய வேண்டும் என்றால் ஆதார் விண்ணப்பத்தை டவுன்லோடு செய்தோ அல்லது உங்களது வங்கிக்கு நேரடியாகச் சென்றும் பெற்றுக் கொள்ளலாம்
* விண்ணப்பத்தைப் பூர்த்திச் செய்து அத்துடன் ஆதார் அட்டையின் ஜெராக்ஸ் காப்பி ஒன்றினை இணைத்து வங்கியிடம் ஒப்படைத்துவிடுங்கள்

பயன்கள்

பயன்கள்

நீங்கள் ஆதார் அட்டையை வங்கி கணக்குடன் இணைப்பதால் அரசின் நலத்திட்டச் சலுகைகள், ஓய்வு பெற்றவர்களுக்கான சலுகைகள், நலத்திட்ட நிதிகள், உள்பட அனைத்து வித சலுகைகளும் நேரடியாக உங்கள் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும்

பான்கார்டு

பான்கார்டு

ஆதார் அட்டையுடன் பான்கார்டை இணைப்பது கட்டாயம் மட்டுமின்றி ஜூலை 31க்குள் இணைக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

எப்படிச் செய்வது?

எப்படிச் செய்வது?

ஆதார் அட்டையைப் பான் எண்ணுடன் இணைக்க முதலில் நீங்கள் http://www.incometaxindiaefiling.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று அதில் உள்ள ‘Link Aadhaar tab' என்பதை க்ளிக் செய்யுங்கள்
பின்னர் உங்கள் பான் எண் மற்றும் ஆதார் எண்ணை அதற்குரிய இடத்தில் பதிவு செய்யுங்கள்.

இதை ஆஃப்லைனில் செய்ய UIDPAN என்று டைப் செய்து 567678 அல்லது 56161 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்புங்கள்

 

பயன்கள்

பயன்கள்

இதை இணைப்பதால் முறைகேடுகள் மற்றும் மோசடியைத் தவிர்க்கலாம். நமது பான் எண் போன்று போலியாகத் தயாரித்துச் செய்யப்படும் மோசடி தவிர்க்கப்படுகிறது. மேலும் வரி செலுத்துபவர்கள் கண்காணிக்கப்படுவதோடு கருப்புப்பணம் புழக்கத்தையும் இது கட்டுப்படுத்துகிறது

வாக்காளர் அடையாள அட்டை

வாக்காளர் அடையாள அட்டை

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது மிகவும் எளிய நடைமுறை ஆகும். இதை இணையத்திலோ அல்லது உங்கள் போனில் இருந்து எஸ்.எம்.எஸ் அனுப்புவதன் மூலமோ அல்லது போன் அழைப்பு செய்தோ இணைக்கலாம்

எப்படிச் செய்வது?

எப்படிச் செய்வது?

*ஆன்லைனில் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க முதலில் நீங்கள் செய்ய வேண்டியது NVSP இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்
*இந்த இரண்டு ஆவணங்களையும் எஸ்.எம்.மூலம் இணைக்க ECILINK < EPIC_Number > < Aadhaar_Number > என்று டைப் எய்து 166 அல்லது 51969 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும்
*அல்லது நீங்கள் வார வேலை நாட்களில் 1950 என்ற கால் செண்டர் எண்ணுக்குப் போன் செய்து போன் மூலம் உங்களது ஆதார் மற்றும் வாக்காளர் அட்டை எண்கள் குறித்த விபரங்களைக் கூறலாம்
*இந்த இணைப்பை நீங்கள் ஆஃப்லைனில் செய்ய விரும்பினால் BLO என்ற பூத் லெவல் அதிகாரியிடம் விண்ணப்பம் வாங்கிப் பூர்த்திச் செய்தும் கொடுக்கலாம்

பயன்கள்

பயன்கள்

ஒரே நபர் பெயரில் பல வாக்காளர் அட்டை போலியாகத் தயாரிக்கப்படுவது, காரணமில்லாமல் நீக்கப்படுவது ஆகியவை தவிர்க்கப்படுகிறது. போலிகள் இல்லாத வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்படுவதால் கள்ள ஓட்டும் தவிர்க்கப்படுகிறது

எல்பிஜி

எல்பிஜி

ஆதார் அட்டையுடன் எல்ஜிபியை இணைக்க வங்கி கணக்கும் கண்டிப்பாகத் தேவை.

எப்படிச் செய்வது?

எப்படிச் செய்வது?

*நீங்கள் முதலில் செய்ய வேண்டியது பாரத் கேஸ், HP கேஸ் அல்லது இண்டேன் கேஸ் நிறுவனங்களின் இணையதளம் சென்று அல்லது http://petroleum.nic.in சென்று அதற்குரிய விண்ணப்பத்தை டவுன்லோடு செய்யவும்
*பின்னர் டவுன்லோடு செய்த விண்ணப்பத்தைப் பூர்த்திச் செய்து உங்கள் அருகில் உள்ள எல்பிஜி விநியொகிஸ்தரிடம் சென்று ஒப்படைக்கவும்
அல்லது நீங்கள் 18000-2333-555 என்ற எண்ணுக்கு டயல் செய்து அதில் வரும் குறிப்புகளை ஃபாலோ செய்யலாம்

பயன்கள்

பயன்கள்

இந்த இணைப்பால் உங்கள் எல்பிஜிக்கான அரசின் சலுகைகளைப் பெறலாம்

ரேசன் கார்டு

ரேசன் கார்டு

மற்ற இணைப்புகளைப் போலவே ரேசன் கார்டையும் ஆதார் அட்டையுடன் ஆன்லைன் அல்லது ஆஃபலைன் என இரண்டிலும் மிக எளிதாக இணைக்கலாம்.

எப்படிச் செய்வது?

எப்படிச் செய்வது?

*ஆதார் இணையதளத்திலேயே இதற்கான லிங்க் உள்ளது
*ஸ்டார்ட் நெள என்ற ஆப்சனை க்ளிக் செய்து பின்னர் அதில் கேட்கப்பட்டிருக்கும் விபரங்களைப் பதிவு செய்யுங்கள்
*இந்த வேலை முடிந்ததும் உங்களுடைய மொபைல் எண்ணுக்கு OTP எண் வரும்
*இந்த எண்ணை நீங்கள் பதிவு செய்ததும் உங்களுடைய விண்ணப்பம் ஏற்கப்பட்டுப் பின்னர் உங்களுக்கு ஏற்கப்பட்டதற்கான தகவல் வரும்
*இந்த இணைப்பை நீங்கள் ஆஃப்லைனில் செய்ய விரும்பினால் ரேசன் கார்டு ஜெராக்ஸ் காப்பியும், உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கான ஆதார் அட்டைகளின் ஜெராக்ஸ் காப்பிகளும் தேவைப்படும்
*அதேபோல் குடும்பத்தலைவரின் பாஸ்போர்ட் அளவு புகைப்படமும் வேண்டும். மேலும் வங்கிக்கணக்கை நீங்கள் இதுவரை ஆதார் அட்டையுடன் இணைக்காமல் இருந்தால் வங்கிக் கணக்கு எண்ணும் தேவைப்படும்
*இந்த ஆவணங்களை நீங்கள் பொருள் வாங்கும் ரேசன் கடையில் சமர்ப்பித்துவிட்டால் உங்களுக்கு மொபைலில் எஸ்.எம்.எஸ் அல்லது இமெயிலில் உங்கள் இணைப்பு ஏற்கப்பட்டதற்கான தகவல் வரும்

பயன்கள்

பயன்கள்

ரேசன் கார்டை முறைகேடாகப் பயன்படுத்துவதை இந்த இணைப்பால் தவிர்க்கலாம்

மொபைல் எண்

மொபைல் எண்

தொலைத்தொடர்பு துறையின் புதிய விதியின்படி கடந்த மார்ச் முதல் புதிய மொபைல் கனெக்சன் பெற ஆதார் எண் அவசியம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மொபைல் எண்களை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்றும் தொலைத்தொடர்பு துறை வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்துத் தொலைத்தொடர்பு சேவை செய்யும் நிறுவனங்கள் அவ்வப்போது எஸ்.எம்.எஸ் அனுப்பி வாடிக்கையாளர்களின் மொபைல் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்க ஞாபகப்படுத்தி வருகிறது

மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க OTP முறை கண்டிப்பாகப் பின்பற்றப்படுகிறது. மொபைல் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்கக் கீழ்க்கண்ட வழிகளைப் பின்பற்ற வேண்டும்.

 

 எப்படிச் செய்வது?

எப்படிச் செய்வது?

*ஆதார் அப்டேட்/கரெக்சன் விண்ணப்பத்தை முதலில் இணையதளத்தில் இருந்து டவுன்லோடு செய்து பின்னர் அதைப் பிரிண்ட் எடுக்க வேண்டும்
*அப்டேட்/கரெக்சன் என்ற இடத்தில் குறிப்பிட்டுள்ளவற்றில் 'மொபைல்' என்ற இடத்தில் டிக் செய்ய வேண்டும்
*பின்னர் அதில் உள்ள விண்ணப்பத்தில் உங்கள் ஆதார் அட்டை விபரங்களைப் பதிவு செய்ய வேண்டும்
*பின்னர் உங்களது கையெழுத்து அல்லது பெருவிரல் ரேகை ஆகியவற்றில் ஒன்றை இட வேண்டும்
*பின்ன இந்த விண்ணப்பத்தை ஸ்கேன் செய்து ஆதார் அலுவலகத்தின் அஞ்சல் ஐடிக்கு அனுப்ப வேண்டும்

இந்த இணைப்பு முறையை நீங்கள் ஆதார் அட்டை வழங்கும் அலுவலகத்திற்குச் சென்று அதற்குரிய விண்ணப்பத்தைப் பெற்றுப் பூர்த்திச் செய்து நேரிலும் கொடுக்கலாம்

நீங்கள் ஏற்கனவே ஆதார் எண்ணுடன் மொபைல் எண்ணை இணைத்திருந்து தற்போது மொபைல் எண்ணை மாற்றும் நிலை ஏற்பட்டால் இதை இணையத்திலேயே எளிதில் செய்யலாம். அதே நேரத்தில் புதிய எண்ணை நீங்கள் இணைக்கும்போது அந்த எண் சேவை தொடங்கப்பட்டிருக்க வேண்டும்

புதிய எண்ணை ஆதாருடன் இணைக்க UIDAI இணையதளத்திற்குச் சென்று ஆதார் அப்டேட் என்ற பகுதிக்கு செல்ல வேண்டும். அதில் கேட்கப்பட்டிருக்கும் விபரங்களை நீங்கள் பதிவு செய்தவுடன் உங்களுடைய புதிய எண்ணுக்கு ஒரு OTP வரும். அந்த OTPஐ நீங்கள் பதிவு செய்துவிட்டால் உங்கள் புதிய எண், ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டிருக்கும்

 

பயன்கள்

பயன்கள்

உங்கள் அடையாளத்தை உறுதி செய்து கொள்ளவும், அரசின் சமூக மற்றும் பாதுகாப்பு அம்சங்களைப் பெற்றுக்கொள்ளவும் உதவும். மேலும் வங்கி கணக்கு ஆரம்பிக்கவும், வரி ரிட்டன் செய்வதற்கும் இது உதவும்.

டிரைவிங் லைசென்ஸ்

டிரைவிங் லைசென்ஸ்

மேலும் ஆதார் அட்டையுடன் டிரைவிங் லைசென்ஸையும் இணைக்கும் ஆலோசனை மத்திய அரசிடம் உள்ளது. அதுமட்டுமின்றிப் புதிய வாகனங்கள் பதிவு செய்யப்படும் போதும் ஆதார் அட்டை அவசியம் என்றும் கூறப்பட்டு வருகிறது. இதனால் போலி டிரைவிங் லைசென்ஸ் உருவாக்கப்பட்டு முறைகேடு செய்வது தவிர்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

These are the Documents Should be linked with your Aadhar card

These are the Documents Should be linked with your Aadhar card
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X