நாசாவில் வேலை வேண்டும் என்பது கனவா? இதைப் படித்துவிட்டு முடிவு செய்யுங்கள்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நசாவில் வேலை வாங்குவது ஒன்றும் அவ்வளவு சுலபம் இல்லை.

 

அன்மையில் நடைபெற்ற புதிய விண்வெளி ஆராய்ச்சியாளர்களுக்கான தேர்வுக்கு விண்ணப்பித்த 18,300 விண்ணப்பதாரர்களில் 12 நபர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டனர்.

எனவே நாசவில் வேலைப் பெற உங்களுக்கு என்ன தகுதிகள் எல்லாம் வேண்டும் என்று இங்குப் பார்ப்போம்.

படிப்பு

படிப்பு

அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணக்கு என ஏதேனும் ஒரு பாடத்தில் பட்டம் பெற்று இருக்க வேண்டும். மேலும் முதுகலைப் பட்டம், பணி அனுபவம் அல்லது 1000 மணி நேரம் வரை விமானங்களில் பயணம் செய்த அனுபவங்கள் தேவை.

உடற் தகுதி

உடற் தகுதி

நாசாவில் வேலை பார்க்க உடற் தகுதிகளும் கட்டாயம் ஆகும். விண்ணப்பிக்கும் நபர் 5.2 முதல் 6.3 அடி வரை உயரம் இருக்க வேண்டும். சாதாரணமாக இரத்த அழுத்தம் 140/90 ஆக இருக்க வேண்டும்.

அடுத்ததாக, விண்ணப்பதாரர்கள் தங்கள் உடல் தகுதியினை நிரூபிக்க ஒரு கடினமான பொறுமை சோதனை வைக்கப்படும்.

இரண்டு வருடப் பயிற்சி
 

இரண்டு வருடப் பயிற்சி

இதுவும் நான்கு வருடக் கல்லூரி படிப்பு போன்று இரண்டு வருடம் நீச்சல், தண்ணீரில் நடனம் போன்ற திறன் கற்றல்களைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

ஸ்பேஸ் சான்றிதழைப் பெறுவது, ரஷிய மொழி கற்றுக்கொள்வது மற்றும் நீரில் அதிக நேரம் எப்படி இருப்பது போன்றவற்றைக் கற்றுக்கொள்ள வேண்டும்.

விண்வெளி பயிற்சி

விண்வெளி பயிற்சி

விண்வெளியில் நீங்கள் எப்படி இருப்பீர்கள் என்பதற்கான பயிற்சி. இந்தப் பயிற்சியின் போது ஸ்பேஸ் உடைகளை அணிந்து தலை கீழ் பறப்பது போன்றவற்றுக்கான பயிற்சிகள் அளிக்கப்படும்.

6 மாதங்களுக்கு வாரத்திற்கு 1 நாள் மட்டும் விடு முறையுடன் முழுப் பயிற்சியில் இருக்க வேண்டும்.

சம்பளம் எவ்வளவு கிடைக்கும்

சம்பளம் எவ்வளவு கிடைக்கும்

ஆண்டுக்கு 66,000 முதல் 144,500 டாலர்கள் வரை விண்வெளி வீரர் சம்பளம் பெற முடியும். இதுவே அனுபவம் வாய்ந்தவர்களாக இருப்பின் கூடுதல் சம்பளம் பெறுவார்கள். பணிக்குச் சேர்ந்துவிட்டால் புத்தகம் எழுதுவது, பொது மக்களுடன் உரையாடுவது அல்லது பிற நிறுவனங்களில் இருந்து பரிசு பெறுவதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Dreaming to work in NASA? Read this and decide!

Dreaming to work in NASA? Read this and decide!
Story first published: Tuesday, September 19, 2017, 17:12 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X