ஜியோவுக்கு சாதகமான டிராயின் முடிவு.. அதிர்ச்சியில் ஏர்டெல், ஐடியா..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மொபைல் கால் கட்டணங்கள் விரைவில் மேலும் குறைய இருக்கின்றது. ஜியோ நெட்வொர் சேவை அறிமுகம் ஆனதில் இருந்தில் இருந்த தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இடையில் இண்டர்கனக்ட் கட்டணங்களை வசூலிப்பதில் பிரச்சனை ஏற்பட்டது.

ஜியோ மற்றும் டொக்கோமோ உள்ளிட்ட நிறுவனங்கள் இண்டர்கனக்ட் கட்டணங்களை நாங்கள் அளிக்க மாட்டோம், அதே போன்று எங்களது போட்டி நிறுவனங்களும் அதனை அளிக்கத் தேவையில்லை என்று கூறிவந்தன.

கட்டண குறைப்பு

கட்டண குறைப்பு

தற்போது அதற்கான கட்டணத்தைக் குறைத்து டிராய் அறிவித்து இருப்பது ஜியோ மற்றும் டொகோமோ நிறுவனத்திற்கு ஆறுதலாகவும், ஏர்டெல் மற்றும் ஐடியா போன்ற போட்டி நிறுவனங்களுக்கு அதிர்ச்சியாகவும் அமைந்துள்ளது. அதே நேரம் வாடிக்கையாளர்களுக்குத் தங்களது அழைப்புக் கட்டணங்கள் குறைய வாய்ப்புள்ளது.

இண்டர்கனக்ட் கட்டணங்கள் என்றால் என்ன?

இண்டர்கனக்ட் கட்டணங்கள் என்றால் என்ன?

இண்டர்கனக்ட் பயன்பாடு கட்டணங்கள் என்பது ஒரு நிறுவனத்தின் வாடிக்கையாளர் பிற நிறுவனத்தின் வாடிக்கையாளர்களைத் தொடர்பு கொள்ளும் போது அழைப்புச் செய்யப்படும் நிறுவனம் எதிர் தரப்பு நிறுவனத்திற்குச் செலுத்த வேண்டிய கட்டணமாகும்.

எவ்வளவு குறைந்துள்ளது?

எவ்வளவு குறைந்துள்ளது?

முன்பு ஒரு அழைப்பிற்கு 14 பைசாவாக இருந்த இண்டர்கனக்ட் கட்டணம் 6 பைசாவாகக் குறைக்கப்பட்டுள்ளது. இது கிட்டத்தட்ட 57 சதவீத குறைவாகும்.

எப்போது முதல் புதிய கட்டண முறை அமலுக்கு வரும்?

எப்போது முதல் புதிய கட்டண முறை அமலுக்கு வரும்?

இந்தப் புதிய இண்டர்கனக்ட் கட்டண முறை வருகின்ற அக்டோபர் 1 முதல் அமலுக்கு வரும் என்று டிராய் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஜியோ

ஜியோ

போட்டி நிறுவனங்களிடம் இண்டர்கனக்ட் கட்டணங்களை அளிக்க மாட்டோம் என்று கூறி வந்த ஜியோ நிறுவனம் இது வாடிக்கையாளர்களுக்கு அதிகப் பயன் அளிக்கும் என்பதால் முழுமையாக நீக்க வேண்டும் என்று டிராய் கோரிக்கை வைத்து இருந்தது.

 டெர்மினேஷன் கட்டணங்கள்

டெர்மினேஷன் கட்டணங்கள்

லேண்டு லைன் - மொபைல் மற்றும் மொபைல் - லேண்டு லைன் அழைப்புகளுக்கு எல்லாம் உள்ள டெர்மினேஷன் கட்டணங்கள் ஏதும் இல்லை.

இதுவே மொபைல் நெட்வொர்க் இடையிலான அழைப்புகளுக்கு டெர்மினேஷன் கட்டணங்கள் செலுத்த வேண்டும்.

 

2020 இலக்கு

2020 இலக்கு

டெர்மினேஷன் கட்டணங்கள் 2020 ஜனவரி 1 முதல் உள்நாட்டு அழைப்புகளுக்கு முழுமையாக நீக்கப்படும் என்றும் டிராய்த் தெரிவித்தது.

ஏர்டெல்

ஏர்டெல்

ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் இடையில் இண்டர்கனக்ட் கட்டணங்கள் குறித்து உள்ள சிக்கல் பற்றி டிராய் விசாரணை செய்த போது ஜியோ நிறுவனம் வேண்டும் என்றே கட்டணங்களைச் செலுத்தத் தவறுகின்றது, இதனால் சேவையில் குறைபாடுகள் அதிகரித்து வருகின்றது என்று ஏர்டெல் கூறியது.

ஜியோ

ஜியோ

ஏர்டெல் நிறுவனத்தின் அனைத்து விவாதங்களும் உண்மைகளை அடிப்படையாகக் கொண்டவை அல்ல, ஏர்டெல் தவறாக வழிநடத்துகின்றது. இதற்கு அவர்கள் மீது டிராய் நடவடிக்கை எடுக்க வெண்டும் என்று ஜியோ பதில் அளித்துள்ளது.

வோடாபோன்

வோடாபோன்

இதே போன்று வோடாபோன் குழும தலைமை நிர்வாக அதிகாரி விட்டோரியோ கொலோவும் மத்திய அரசை அணுகி டெர்மினேஷன் கட்டணங்களைக் குறைக்கக் கூடாது என்று கோரிக்கை வைத்துள்ளார்.

ஸ்பெக்டர்ம் ஏலம்

ஸ்பெக்டர்ம் ஏலம்

மொபைல் நெட்வொர்க் டவர் அமைத்தல் மற்றும் ஸ்பெக்டர்ம் ஒதுக்கீடு செய்யும் முறை போன்றவற்றை மேலும் எளிமை ஆக்கும் விதமாக முழுமையாக இணையதளச் சேவையாக மாற்றும் திட்டத்தில் உள்ளதாகவும் டிராய் கூறியுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

TRAI Slashed Mobile Call Connect Charges upto 57 percent. How It Affects You

TRAI Slashed Mobile Call Connect Charges upto 57 percent. How It Affects You
Story first published: Wednesday, September 20, 2017, 13:20 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X