இந்தியா ஏற்றுமதி செய்யும் டாப் 10 பொருட்கள்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுவதன் மூலம் பெறும் வருவாய் ஒவ்வொரு ஆண்டும் இரண்டு இலக்க எண்ணில் வளர்ச்சியைப் பெறுகின்றன. இதனை உறுதி செய்யும் படி 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை செய்யப்பட்ட 22,911.4 மில்லியன் டாலர் மதிப்பிலான ஏற்றுமதியின் அளவும் 2017 மார்ச் மாதம் வரை 29,232.05 மில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது.

 

இது 2015-2016 நிதி ஆண்டுடன் ஒப்பிடும் போது 27.59 சதவீத வளர்ச்சி ஆகும். எனவே இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் டாப் 10 பொருட்கள் யாவை என்றும் அவற்றின் மதிப்பு எவ்வளவு என்றும் விளக்கமாக இங்குப் பார்ப்போம்.

பெட்ரோலிய பொருட்கள்

பெட்ரோலிய பொருட்கள்

இந்தியாவில் இருந்து பெட்ரோலிய பொருட்களை இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்ரேஷன், பாரத் பெட்ரோலியம், ரிலையன்ஸ், ஓஎன்ஜிசி உள்ளிட்ட நிறுவனங்கள் செய்து வருகின்றன. 2016-2017 நிதி ஆண்டில் ஏற்றுமதி செய்யப்பட்ட மதிப்பு 61.2 பில்லியன் டாலர்கள் ஆகும்.

ஆபரணங்கள்

ஆபரணங்கள்

உலகத் தங்க சந்தையில் 20 சதவீதத்தினை இந்தியா பயன்படுத்துகின்றது. இதில் 75 சதவீதம் நகையாகச் செய்து பயன்படுத்துகின்றார்கள். ஆனால் இந்தியாவில் செய்யப்படும் 30 சதவீத தங்க நகைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன என்று உங்களுக்குத் தெரியுமா? 2016-2017 நிதி ஆண்டில் இந்தியாவில் இருந்து தங்கம் ஏற்றுமதி செய்யப்பட்ட மதிப்பு மட்டும் 41.2 பில்லியன் டாலர்களாகும்.

ஆட்டோமொபைல்
 

ஆட்டோமொபைல்

இந்தியாவின் ஆட்டோமொபைல் துறை 2008-2013 வரையிலான ஆண்டுகளில் 17 சதவீத வளர்ச்சியினை எட்டியது. உலகின் பல் முக்கிய நாடுகளுக்கு ஆட்டோமொபைல் உதிரிப்பாகங்களை ஏற்றுமதி செய்வதுடன் வாகனங்களையும் இந்திய நிறுவனங்கள் ஏற்றுமதி செய்கின்றன. 2016-2017 நிதி ஆண்டில் இவற்றின் மதிப்பு 145 பில்லியன் டாலர்கள் ஆகும்.

இயந்திரங்கள்

இயந்திரங்கள்

அதிகத் திறன் வாய்ந்த இயந்திரங்கள் தயாரிப்பில் வேகமாக முன்னேற்றம் அடைந்து வரும் இந்தியா சென்ற நிதி ஆண்டில் மட்டும் 10.5 சதவீத வளர்ச்சியுடன் 13.6 பில்லியன் டாலர் மதிப்பிலான இயந்திரங்களை ஏற்றுமதி செய்துள்ளது.

பையோ கெமிக்கல்ஸ்

பையோ கெமிக்கல்ஸ்

இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களில் இருந்து பையோ கெம்க்கல்ஸ் தயாரிப்பு நடைபெறுகின்றது. இவற்றின் ஏற்றுமதி மதிப்பு 12 பில்லியன் டாலர்கள் ஆகும்.

மருந்து துறை

மருந்து துறை

ஆய்வு சார்ந்த துறை என்றாலும் சன் பார்மா, லூபின், ரான்பாக்ஸி என்று உலகப்புகழ் வாய்ந்த மருந்து நிறுவனங்கள் இந்தியாவில் உள்ளன. இந்தத்துறையின் ஏற்றுமதி மதிப்பு 11.7 பில்லியன் டாலர்களாகும்.

தானியங்கள்

தானியங்கள்

இந்தியா ஒரு விவசாய நாடாகும். உலகளவில் தானியங்கள் ஏற்றுமதியில் முதல் இடத்தில் இந்தியா உள்ளது. 2016-2017 நிதி ஆண்டில் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட தானியங்களின் மதிப்பு 10.1 பில்லியன் டாலர்களாகும்.

இரும்பு மற்றும் ஸ்டீல்

இரும்பு மற்றும் ஸ்டீல்

இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பு இரும்பு மற்றும் ஸ்டீல் போன்றவற்றை இறக்குமதி தான் செய்து வந்தது. ஆனால் தற்போது 9 பில்லியன் டாலர் அளவுக்கு ஏற்றுமதி செய்து சாதனை படைத்து வருகின்றது.

ஜவுளி துறை

ஜவுளி துறை

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி என்றாலே ஜவுளி தான். உலகின் 63 சதவீத ஜவுளி சந்தை இந்தியாவிடம் உள்ளது. ஜூட் உற்பத்தியில் முதல் இடத்தில் உள்ள இந்தியா சென்ற ஆண்டு மட்டும் 9 பில்லியன் டாலர் மதிப்பிலான ஜவுளி பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளது.

எலெக்டிரானிக்ஸ்

எலெக்டிரானிக்ஸ்

எலெக்டிரானிக்ஸ் பொருட்கள் பொருத்த வரையில் இந்தியா இறக்குமதி செய்வது தான் அதிகம் என்றாலும் 9 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை ஏற்றுமதி செய்வது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Top 10 export products from India in Tamil

Top 10 export products from India in Tamil
Story first published: Monday, September 25, 2017, 9:33 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X