இந்தியாவில் வேலைவாய்ப்பு இல்லாதது பொருளாதாரத்திற்கு நல்லதே.. பியூஷ் கோயல் கூறும் புது விளக்கம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சமீபத்தில் மத்திய அமைச்சரவை மாற்றத்தில் இந்திய ரயில்வே துறையின் அமைச்சராக நியமிக்கப்பட்டவர் பியூஷ் கோயல். இவர் சில நாட்களுக்கு முன்பு நடந்த உலகப் பொருளாதார அமைப்பின் இந்திய கூட்டத்தில், இந்தியாவில் வேலைவாய்ப்பு இல்லாதது பொருளாதாரத்திற்கு வளர்ச்சி மிகவும் நல்லதே எனச் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.

இந்தியாவில் வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதை அடுத்து உலக நாடுகளும், உலக முதலீட்டாளர்களும் தொடர்ந்து வருத்தும் தெரிவிப்பது மட்டும் அல்லாலமல், இந்தியாவில் பல லட்ச இளைஞர்கள் வேலையில்லாமல் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பியூஷ் கோயல் கூறியது அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருந்தாலும், அதற்கான அர்த்தத்தையும் அவரைக் கூறியுள்ளார்.

200 நிறுவனங்கள்

200 நிறுவனங்கள்

இக்கூட்டத்தில் பேசிய பார்தி ஏர்டெல் நிறுவன தலைவர் சுனில் மிட்டல் பேசுகையில், இந்தியாவில் இருக்கும் 200 முன்னணி நிறுவனங்கள் கடந்த சில வருடங்களாகப் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் விதைவிடவும் பணிநீக்கம் அல்லது வேலைவாய்ப்பு எண்ணிக்கையை அதிகளவில் குறைத்து வருகிறது.

வரத்தக சந்தை

வரத்தக சந்தை

நாட்டின் முன்னணி 200 நிறுவனங்களுக்மே வேலைவாய்ப்பை உருவாக்க முடியவில்லையெனில், இந்திய வர்த்தகச் சந்தை, சமுகத்தை மோசமான நிலைக்குத் தள்ளும்.

இவரின் கருத்துப் பதில் தெரிவிக்கும் வகையில் பியூஷ் கோயல் பேசினார்.

 

பியூஷ் கோயல்

பியூஷ் கோயல்

இந்தியாவில் வேலைவாய்ப்பு இல்லாதது பொருளாதாரத்திற்கு வளர்ச்சி மிகவும் நல்லதே எனக் கூறிவிட்டு, இந்தியாவில் இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாதது கவலை அளிக்கும் ஒரு விஷயமாக இருந்தாலும், இது இளைஞர்கள் சுய தொழில் அல்லது சுய வேலைவாய்ப்பை அமைத்துக்கொள்ளச் சரியான நேரமாக இருக்கும். அதுமட்டும் அல்லாமல் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் இது சாதகமாக அமையும் என விளக்கம் அளித்துள்ளார் பியூஷ் கோயல்.

இந்திய பொருளாதாரம்..

இந்திய பொருளாதாரம்..

இந்திய பொருளாதாரம் தற்போது இருக்கும் நிலையில், எந்தத் தொழில் செய்ய முடியும். பங்குச்சந்தை முதல் உள்ளூர் சந்தை வரையில் அனைத்திலும் பிரச்சனை. விவசாயத்திலும் குறைவான விலை நிலவரத்தால் குறைந்த அளவில் மட்டுமே வருமானம் கிடைக்கிறது.

இப்படி இருக்கும்போதும் நடத்தர மற்றும் கீழ்தட்டுக் குடும்பங்களில் இருக்கும் இளைஞர்கள் என்ன செய்ய முடியும்.

 

இளைஞர்கள்

இளைஞர்கள்

இதைத் தொடர்ந்து பியூஷ் கோயல் பேசியபோது, சனில் மிட்டல் கூறுவதைப் போல் நிறுவனங்கள் வேலைவாய்ப்பு எண்ணிக்கையைக் குறைத்து வருவது உண்மை என்றாலும், இன்றைய இளைஞர்கள் வேலைக்குச் செல்வதை விடப் பிறருக்கு வேலைவாய்ப்பு அளிக்கவே விரும்புகின்றனர். ஆகவே இது நாட்டின் ஒரு நல்ல சூழ்நிலையை உருவாக்கும் என்று பியூஷ் கோயல் தெரிவித்தார்.

கடன் திட்டம்..

கடன் திட்டம்..

இதுமட்டும் அல்லாமல் மத்திய அரசு சிறு தொழில் முனைவோருக்கு மோடி அறிவித்த முத்ரா திட்டத்தின் மூலம் 2015ஆம் ஆண்டுச் சுமார் 3.42 லட்சம் கோடி ரூபாய் கடன் அளிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் சுமார் 8 கோடி பேர் பயன்பெற்றுள்ளனர் என் பியூஷ் குறிப்பிட்டார்.

 

பணிநீக்கம்..

பணிநீக்கம்..

கடந்த வருடம் எல் அண்ட் டி நிறுவனத்தில் 14,000 பேர், எச்டிஎப்சி வங்கியில் 6,000 பேர், ஐடி துறையில் 50,000திற்கும் அதிகமானோர் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

அதேபோல் டெக்ஸ்டைல் துறையில் சுமார் 4581.97 யூனிட்கள் மூடப்பட்டுள்ளதால் சுமார் 17,600 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் தற்போது படித்து முடித்துவிட்டு லட்சகணக்கான பட்டதாரிகள் வேலைவாய்ப்புக்காகக் காத்திருக்கின்றனர்.

அது தான் தற்போதைய நிலை பியூஷ்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Piyush Goyal says job losses is a good sign for economy

Piyush Goyal says job losses is a good sign for economy - Tamil Goodreturns | இந்தியாவில் வேலைவாய்ப்பு இல்லாதது பொருளாதாரத்திற்கு நல்லதே.. பியூஷ் கோயல் கூறும் புது விளக்கம்..! - தமிழ் குட்ரிட்டன்ஸ்
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X