கார் விற்பனை சூட்டுப்பிடிக்கத் துவங்கியது..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஜிஎஸ்டி அமலாக்கத்திற்குப் பின் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கார்களின் விற்பனை மந்தமாக இருந்த நிலையில் செப்டம்பர் மாதத்தில் இதன் விற்பனை அதிகரித்துள்ளது.

பயணிகள் வாகனம்

பயணிகள் வாகனம்

செப்டம்பர் மாதத்தில் பயணிகள் வாகனங்களின் விற்பனை 11.32 சதவீதம் அதிகரித்து 3,09,955 வாகனங்களை விற்பனையாகியுள்ளது. கடந்த வருடம் இதேமாதத்தில் இதன் எண்ணிக்கை 2,78,428 ஆக மட்டும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

கார் விற்பனை

கார் விற்பனை

இதேகாலக்கட்டத்தில் கார்களின் விற்பனை 6.86 சதவீதம் அதிகரித்து 2,08,656ஆக உயர்ந்து துவண்டுபோன ஆட்டோமொபைல் சந்தைக்கு உயிர்ப்பை அளித்துள்ளது.

2 சக்கர வாகனம்

2 சக்கர வாகனம்

நான்கு சக்கர வாகனங்களை அடுத்து 2 சக்கர வாகன பிரிவில் பைக் விற்பனை 6.98 சதவீதம் அதிகரித்துச் சுமார் 12,69,612 வாகனங்களை விற்பனையாகியுள்ளது. கடந்த நிதியாண்டின் இதேகாலக்கட்டத்தில் இதன் அளவு 11,86,759 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

 கிராமங்கள்

கிராமங்கள்

பருவகால மழை சிறப்பாக இருந்த காரணத்தினால் கிராமப்புறங்களில் இரு சக்கர வாகன விற்பனையின் எண்ணிக்கை 9 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.

மொத்த விற்பனை

மொத்த விற்பனை

இந்நிலையில் செப்டம்பர் மாதத்தில் மட்டும் ஒட்டுமொத்த வாகனங்களின் எண்ணிக்கை 10 சதவீதம் உயர்ந்து 24,90,034 ஆக அதிகரித்துள்ளது. இது கடந்த வருடம் 22,63,620 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Car sales grow 7%, passenger vehicles up 11% in September

Car sales grow 7%, passenger vehicles up 11% in September
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X