பழைய திட்டத்தை புதுப்பிக்கும் மத்திய அரசு.. தபால் நிலையம் மூலம் கிராம மக்களுக்கு காப்பீடு திட்டம்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மத்திய அரசு இன்று கிராமங்களுக்கான காப்பீடு திட்டம் ஒன்றை 'சம்பூரண பீமா கிராம யோஜனா' என்ற பெயரில் வெளியிட்டுள்ளது. இந்தக் காப்பீடு திட்டம் இந்திய தபால் அலுவலகத்தின் காப்பீடு திட்டத்தின் கீழ் வழங்கப்படுகின்றது.

மேலும் இந்தப் பாலிசி ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்து ஒரு கிராமத்திற்கு வழங்கப்படும் என்று கூறப்படுகின்றது. இது குறித்த விரிவான தகவலை இங்குப் பார்க்கலாம்.

தபால் ஆயுள் காப்பீடு

தபால் ஆயுள் காப்பீடு

தபால் ஆயுள் காப்பீடு 1884-ம் ஆண்டுத் துவங்கப்பட்ட இந்தியாவின் மிகவும் பழமையான ஒரு திட்டமாகும். தற்போது இந்தத் திட்டத்தினை மீண்டும் மத்திய அமைச்சர் மனோஜ் சின்ஹா துவக்கி வைத்தார். மேலும் பிற காப்பீடு திட்டங்களை விடத் தபால் ஆயுள் காப்பீடு மிகவும் மலிவானது என்றும் அவர் தெரிவித்தார்.

 குறைந்த பிரீமியம் அதிகப் போனஸ்

குறைந்த பிரீமியம் அதிகப் போனஸ்

தபால் ஆயுள் காப்பீடு திட்டங்களில் இது வரை 2 லட்சம் கோடி நபர்கள் பாலிசி எடுத்துள்ளனர். குறைந்த பிரீமியம், அதிகப் போனஸ் உடன் இந்திய தாபால் காப்பீடு திட்டங்கள் உள்ளன.

யாரெல்லாம் இந்தப் பாலிசியில் முதலீடு செய்ய முடியும்

யாரெல்லாம் இந்தப் பாலிசியில் முதலீடு செய்ய முடியும்

முதலில் தபால் காப்பீடு திட்டங்கள் அரசு மற்றும் அரசு - தனியார் இணைந்து செயல் படும் துறை ஊழியர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு வந்தது. தற்போது அது தனியார் நிறுவன ஊழியர்களுக்கு வழங்கக்கூடியதாக மாற்றப்பட்டுள்ளது.

எனவே இந்தப் பாலிசிகளை இஞ்சினியர்கள், மருத்துவர்கள், கணக்காளர்கள், பங்குச் சந்தையில் பணிபுரியும் ஊழியர்கள் என அனைவரும் முதலீடு செய்யலாம்.

 

காப்பீடு தொகை

காப்பீடு தொகை

பிஎல்ஐ தபால் காப்பீடு திட்டங்கள் மூலம் அனைத்துத் தபால் நிலயங்களிலும் 20,000 ரூபாய் முதல் 50 லட்சம் ரூபாய் வரை காப்பீடு செய்ய முடியும். எல்ஐசி-ஐ விட இதில் பிரீமியமும் குறைவு. இந்தத் திட்டத்தினை இதற்கு முந்தைய அரசு மக்களிடம் கொண்டு செல்ல தவரிவிட்டது என்றும் மனோஜ் சின்ஹா தெரிவித்தார்.

 கிராமப்புற பயனாளிகள்

கிராமப்புற பயனாளிகள்

இதுவே கிராமப்புற பயனாளிகளுக்குக் குறைந்தபட்சம் ரூ.10,000 முதல் 10 லட்சம் ரூபாய் வரை காப்பீடு ஆர்பிஎல்ஐ மூலம் அளிக்கப்படுகின்றது.

இந்தத் திட்டத்திற்கு மருத்துவக் காப்பீடும் உண்டு, ஒருவேலை மருத்துவக் காப்பீடு வேண்டாம் என்றால் குறைந்தபட்ச காப்பீடு தொகை 25,000 ரூபாய் வரை கிடைக்கும். அதிகபட்ச வயது 35 ஆகும்.

 

மத்திய அமைச்சர்களுக்கான திட்டம்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய மந்திரிகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் 1 கிராமத்தினைத் தேர்வு செய்து 100 குடும்பங்களுக்கு ஆதார்ஷ் கிராம திட்ட பாலிசியை எடுக்க வைக்க வேண்டும் என்பது கட்டாயம் என்றும் மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Postal insurance scheme for Villagers called sampoorna bima gram yojana

Postal insurance scheme for Villagers called sampoorn bima gram yojana
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X