விமானப் பயணங்களின் போது ஸ்மார்ட்போன் உள்ளிட்டவை தீப்பற்றி எரிவதால் சர்வதேச விமானப் போக்குவரத்து ஏஜென்சிகள் லேப்டா போன்ற பொருட்களைச் செக் இன் செய்யும் போது கொண்டு செல்ல தடை முடிவு செய்துள்ளது,
அமெரிக்காவின் ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (FAA) இது தொடர்பான முன்மொழிவைக் கொண்டு வந்துள்ளது.

லேப்டாப்
லேப்டாப்பின் ரீசார்ஜபிள் லித்தியன் அயன் பேட்டிரி ரீசார்ஜ் செய்யும் போது சூடாவதாகவும் அப்போது ஏரோசல் ஸ்ப்ரே அருகில் இருந்தால் தீப்பற்றுகின்றது என்று அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

விமானத்தின் நிலை
தீ விபத்து ஏற்பட்டால் அந்த விமானத்தினையே பயன்படுத்த முடியாமல் போகும் என்றும் அந்த அறிக்கையில் அமெரிக்காவின் ஃபெடரல் ஏவியேஷன் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியா
எனவே இந்த விதிமுறைகள் நடைமுறைக்கு வந்தால் இந்தியா விமானப் போக்குவரத்து துறையும் கடைப்பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

ஐரோப்பா
ஏற்கனவே ஐரோப்பிய விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு வாரியமும் நீண்ட துர விமானப் பயணங்களின் போது லித்தியம் அயன் பேட்டிரிகளால் தீ விபத்து ஏற்பட வாய்ப்புகள் உள்ளது என்று எச்சரித்துள்ளது.

சாம்சங் கேலக்ஸி நோட் 7
சென்ற ஆண்டு முக்கிய விமான நிறுவனங்கள் சாம்சங் கேலக்ஸி நோட் 7 ஸ்மார்ட்போனால் தீ விபத்து ஏற்படுகின்றது உலகளவில் இந்தப் போனை விமானப் பயணங்களின் போது கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்பு இதேப்போன்று ஹோவர் போர்டுகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா
பாதுகாப்பு காரணங்களுக்காக அமெரிக்க அரசு 10 மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வரும் விமானங்களில் லேப்டாப் பயன்படுத்த தடை விதித்துள்ளது. பின்னர் இந்த விதிகள் ஜூலை மாதம் திரும்பப் பெறப்பட்டது.