5,000 ஊழியர்களின் நிலை என்ன..? ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் கடந்து வந்த மோசமான பாதை..

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரிலையனஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் ஒரு மாதத்தில் தங்களது வைரலெஸ் வணிகத்தினை இழுத்து மூட முடிவு செய்துள்ளதால் 1,200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் நடுத்தெருவில் விடப்பட்டுள்ளனர் என்று கூறலாம்.

 

ஆர்காம் நிறுவனம் தனது ஊழியர்களுக்குச் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் நவம்பர் 30-ம் தேதியுடன் நிறுவனத்தினை விட்டு வெளியேறுமாறு கேட்டுக்கொண்டது, அதே நேரம் டெலிகாம் சந்தையில் இவர்களுக்கு வேலை வாய்ப்பும் குறைந்த அளவிலேயே உள்ளது.

மூத்த ஊழியர்களுக்கு அபாயம்

மூத்த ஊழியர்களுக்கு அபாயம்

இப்படிப்பட்ட ஒரு இக்கட்டான சூழலில் 8 வருடங்களுக்கும் அதிகமான அனுபவம் உள்ள ஊழியர்களுக்கு வேலைக் கிடைப்பது மிகவும் கடினம் என்று கூறப்படுகின்றது. அனுபவம் குறைந்த ஊழியர்களுக்கு டெலிகாம் சந்தை சிறப்பாக உள்ளபோது எளிதாக வேலை கிடைத்துவிடும்.

சவால்

சவால்

நிறுவனத்தினை விட்டு வெளிவரும் ஊழியர்களுக்கு மிகப் பெரிய சவாலாக இருக்கும், தாங்கள் எவ்வளவு சம்பளம் வாங்கி வந்து வந்திருந்தாலும், எந்தப் பதவியை வகித்து வந்திருந்தாலும் கிடைக்கும் வேலையில் சேர வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

பணியார்கள் எண்ணிக்கை
 

பணியார்கள் எண்ணிக்கை

ஆர்காம் நிறுவனத்தில் 3,000 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர், அவர்களில் 1,000 முதல் 1,200 நபர்கள் வரை வேலை வாய்ப்பை இழக்க நேரிடும். ஆனால் முறைமுக ஊழியர்கள் எனக் கணக்கு போட்டால் இந்தப் பட்டியல் 5,000 பேரைத் தாண்டும். ஆனால் இது குறித்த கேள்விக்கு நிறுவனம் பதில் அளிக்க மறுத்துவிட்டது.

சம்பளம்

சம்பளம்

வேலை இழப்பு மட்டும் இல்லாமல் நவம்பர் மாதம் சம்பளம் ஒன்றை மாதங்கள் தாமதமாகக் கிடைக்கும் என்பது ஊழியர்களுக்கு மிகப் பெரிய இடியாக இருக்கும்.செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாத சம்பளம் சரியான தேதியில் கிடைத்துள்ள போதிலும் கடைசி மற்றும் முழுமையான சமபல நிலுவை தொகை ஜனவர் 15-க்கு பிறகே கிடைக்கும்.

ஜியோ

ஜியோ

அதே நேரம் குறிப்பிட்ட ஊழியர்களை ஜியோ நிறுவனத்தின் பணிகளுக்கு மாற்றம் செய்யும் வேலைகளும் நடைபெற்று வருகின்றது. சில ஊழியர்களைத் தங்களது நிறுவனத்தின் பிற பிரிவுகளில் பணிக்கு விண்ணப்பிக்கவும் அனுமதி அளித்துள்ளனர்.

ஆர்காம்

ஆர்காம்

2002-ம் ஆண்டுத் துவங்கப்பட்ட ஆர்காம் நிறுவனம் முதலில் சிடிஎம்ஏ மொபைல் சேவையினை மட்டுமே வழங்கி வந்தது. ஆனால் 501 ரூபாய்க்கு 2 போன் என்று எல்லாம் அறிவித்துத் தொலைத்தொடர்பு துறையில் பெறும் புரட்சியை நிறுவனம் செய்தது.

 அனில் அம்பானி

அனில் அம்பானி

பின்னர் 2006-ம் ஆண்டு நடந்த சொத்துத் தகராற்றில் ஆர்காம் நிறுவனம் அனில் அம்பானி வசம் வந்தது. மேலும் மொபைல் விற்பனையில் 4,500 கோடி நட்டம் அடைந்தது.

 2008

2008

ஜிஎஸ்எம் சேவையினை அளிப்பதற்காகக் காற்றலைகளை வாங்கியது. ஆப்ரிக்காவின் எம்டிஎன் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட எடுத்த முடிவு தோல்வியில் முடிந்தது, ஆனால் அதனை முகேஷ் அம்பானி தட்டி சென்றார்.

2009

2009

2009-ம் ஆண்டு யாரும் எதிர்பாராத நேரத்தில் போட்டி நிறுவனங்கள் மிரளும் அளவிற்கு 0.5 நிமிடம் உள்ளூர் தொலைப்பேசி அழைப்புகள் என்ற திட்டத்தினை வெளியிட்டார்.

2010

2010

ஆனால் முகேஷ் அமானியின் வளர்ச்சிக்கு ஈடுகொடுக்க முடியாமல் கடனில் சிக்கித் தவித்து வந்தார்.

 2013

2013

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துடன் இணைந்து ஆப்டிக் ஃபைபர் மற்றும் டெலிகாம் டவர் சேவைகளை அளிக்க ஒப்பந்தம் போடப்பட்டது.

2014

2014

கடனைக் குறைக்க ஜிஎஸ்எம் மற்றும் சிடிஎம்ஏ இரண்டு சேவையினையும் தனியாகப் பிரித்துப் பிரீமியம் வாடிக்கையாளர்களைக் கவர முயற்சி எடுத்தது.

2015

2015

கடனைக் குறைப்பதற்காகத் தேவையில்லாத துறை சார்ந்து நிறுவனங்களை விற்க முடிவு செய்தது.

2016

2016

ரிலையன்ஸ் ஜியோ உடன் ஸ்பெக்டர்ம் பகிர்வுக்கு ஒப்புக்கொண்டது. ஏர்செல் மற்றும் புரூக்ஃபீல்டு நிறுவனங்களுடன் இணை திட்டம் அறிவித்தது.

 ஏர்செல்

ஏர்செல்

ஏர்செல் நிறுவனத்துடனான இணைவு தோல்வி அடைந்ததால் டெலிகாம் துறையினை விட்டு வெளியேற முடிவு செய்தது.

டிடிஎச்

டிடிஎச்

முதலில் 2 சதவீத டிடிஎ சந்தையின் உரிமம் முடிவடைவதால் அதைத் தொடர் விருப்பம் இல்லாமல் வெளியேற முடிவு.

 2ஜி

2ஜி

லாபம் வருகின்ற வரை ஆர்காம் நிறுவனம் ஐஎல்டி குரல் சேவை, வாடிக்கையாளர் குரல் அழைப்பு சேவை மற்றும் 4ஜி டாங்கில் போஸ்ட்பெய்டு சேவை மற்றும் மொபைல் டவர் சேவை போன்ற வணிகத்தினைச் செய்யும் என்று முடிவு செய்யப்பட்டது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

What is the status of 1,200 RCom employees? Reliance Communications Journey

What is the status of 1,200 RCom employees? Reliance Communications Journey
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X