இவுக அழகிலும் டாப்பு.. பணத்திலும் டாப்பு..!

By தேஜா
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பொழுதுபோக்குத் துறையில் பெண் பிரபலங்கள் மிகப் பெரிய புரட்சியை உருவாக்கியிருக்கிறார்கள். அவர்கள் அதிக அளவில் மரியாதையும் புகழையும் பெற்றிருக்கிறார்கள். திரைப்படங்களில் அவர்களுடைய கதாபாத்திரங்களுக்கு அல்லது குணாம்சங்களுக்கு மிக அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் ஆதிக்கத்தில் தற்போது நடிகைகள் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். இந்தியாவில் இந்த மாற்றம் சற்று தாமதமாகவே வந்தாலும் ஸ்திரமான தன்மையில் வந்துள்ளது.

 

இன்றைய சூழ்நிலையில் நடிகைகளின் நிகர சொத்து மதிப்பை பார்த்தால் நாளுக்கு நாள் அதிக பணக்காரர்களாகி வருகிறார்கள். இந்நிலையில் உலகின் முதன்மையான டாப் 10 பணக்கார நடிகைகள் மற்றும் அவர்களது சொத்து மதிப்பை பார்போம்.

10. நிக்கோல் கிட்மென்

10. நிக்கோல் கிட்மென்

நிக்கோல் கிட்மென் ஒரு ஆஸ்திரேலிய நடிகை ஆவார். ‘இன் டேஸ் ஆஃப் தண்டர்', ‘ஃபார் அண்ட் அவே', ‘மௌலின் ரோக்', ‘பேட் மேன்' போன்ற திரைப்படங்களில் அவருடைய அற்புதமான நடிப்பின் மூலம் பரவலாக அறியப்படுபவர். அவருடைய சிறந்த நடிப்புக்காக பல விருதுகளை வென்றுள்ளார். மேலும் அவர் படத் தயாரிப்பாளராகவும் மற்றும் விளம்பர மாடலாகவும் இருக்கிறார்.

நிக்கோல் கிட்மென் ‘ப்ளாஸம் ஃபிலிம்ஸ்' என்கிற அவரது சொந்த படத் தயாரிப்பு நிறுவனத்தையும் கொண்டிருக்கிறார். இவர் ஹாலிவுட்டின் மிக அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராவார். இவரது சொத்து மதிப்பு 130 மில்லியன் அமெரிக்க டாலர்களாகும்.

9. ஏஞ்சலினா ஜோலி
 

9. ஏஞ்சலினா ஜோலி

ஏஞ்சலினா ஜோலி உலகின் மிக அழகான கவர்ச்சிகரமான பெண்களில் ஒருவர். இவர் ஒரு நடிகை, தயாரிப்பாளர், இயக்குனர், மற்றும் மனிதநேய ஆர்வலர்.

மிஸ்டர் அண்ட் மிஸஸ் ஸ்மித், டாம்ப் ரெய்டர், வான்டட், சால்ட், மேல்ஃபிசன்ட் மற்றும் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார். இவர் ஹாலிவுட்டில் மிக அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக இருந்து வருகிறார், இவரது நிகர சொத்து மதிப்பு சுமார் 160 மில்லியன் அமெரிக்க டாலர்களாகும்.

ஏஞ்சலினா ஜோலி ஒரு அகாடமி விருது, மூன்று கோல்டன் குளோப் விருது, மற்றும் இரண்டு திரை நடிகர் சங்க விருது உள்ளிட்ட விருதுகளையும் மேலும் பல உயர்ந்த விருதுகளையும் வென்றுள்ளார். இதைத் தவிர்த்து, ஏஞசலினா மிகச் சிறந்த மனிதநேயர் மேலும் அமெரிக்க ஐக்கிய நாடுகளிலிருந்து குளோபல் மனித நேய நடவடிக்கை விருதினைப் பெற்றுள்ளார்.

8. ஜுலியா ராபர்ட்ஸ்

8. ஜுலியா ராபர்ட்ஸ்

ஜுலியா ராபர்ட்ஸ் முதன்மையான ஹாலிவுட் நடிகை ஆவார். இவர் 1967 ஆம் ஆண்டு அக்டோபர் 28 இல் அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் ஸ்மைர்னா நகரில் பிறந்தவர்.

இந்த அழகான அமெரிக்க நடிகை "ப்ரெட்டி வுமன்", "மை பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸ் வெட்டிங்", "எரின் ப்ரோன்கோவிச்", மிஸ்டிக் பீஸா போன்ற காதல் நகைச்சுவை படங்களில் தோன்றிய பிறகு ஹாலிவுட் நட்சத்திரமானார். 2017 ஆம் ஆண்டு நிலவரப்படி ஜுலியா ராபர்ட்ஸின் நிகர சொத்து மதிப்பு 160 மில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கிறது. பீப்பிள்ஸ் மேகஸைன் என்ற பத்திரிகையால் இவர் ஐந்து முறை ‘உலகின் மிக அழகான பெண்' என்று கௌரவிக்கப்பட்டுள்ளார்.

7. ஜெனிஃபர் அனிஸ்டன்

7. ஜெனிஃபர் அனிஸ்டன்

ஜெனிஃபர் அனிஸ்டன் உலகின் முதன்மையான 10 பணக்கார நடிகைகளில் ஒருவர். அவருடைய நிகர சொத்து மதிப்பு சுமார் 200 மில்லியன் அமெரிக்க டாலர்களாகும். ஜெனிஃபர் அனிஸ்டன் உலகப் புகழ்பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியான சிட்காம் ப்ரெண்ட்ஸில் (1994 முதல் 2004) அவருடைய காதாபாத்திரத்தினால் உலக அளவில் அடையாளம் காணப்பட்டார்.

மேலும் அவர் தனது ‘ஃப்ரெண்ட்ஸ்' தொடரில் நடிப்புக்காக ப்ராம் டைம் எம்மி விருது, ஒரு கோல்டன் குளோப் விருது, மற்றும் திரை நடிகர் சங்க விருது உள்ளிட்ட விருதுகளை வென்றுள்ளார். ஜெனிஃபர் ‘ஃப்ரெண்ட்ஸ் வித் மணி'(2006), ‘தி ப்ரேக் அப்' (2006), ‘மார்லே அண்ட் மீ' (2008), ‘ஜஸ்ட் கோ வித் இட்'(2011), ‘ஹாரிபிள் பாசஸ்' (2011), மற்றும் ‘வி ஆர் தி மில்லர்ஸ்' போன்ற இதர பல வெற்றித் திரைப்படங்களில் தோன்றியுள்ளார்.

6. மிலை சைரஸ்

6. மிலை சைரஸ்

அமெரிக்க பெண்ணான மிலே சைரஸ் ஒரு பாடகி, பாடலாசிரியர், மற்றும் நடிகையும் ஆவார். இவர் 1992 ஆம் ஆண்டு டெஸ்டினி ஹோப் சைரசில் பிறந்தார். பன்முகத் திறமை கொண்ட பாடகியும் நடிகையுமான இவர் சமூக ஊடகங்களில் மிக அதிகமாக மக்களால் பின்தொடரப்படும் பிரபலங்களில் ஒருவராவார். அவர் உலகின் மிகுந்த புகழ்பெற்ற பாடகிகளில் ஒருவராவார்.

2017 ஆம் ஆண்டில் அவரது நிகர சொத்து மதிப்பு 200 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது. மிலே சைரஸின் மொத்த சொத்து மதிப்பில் பெரும்பான்மையான பகுதி அவருடைய இசை நிகழ்ச்சிகளின் சிற்றுலாக்களிலிருந்து சம்பாதித்தவை.

5. விக்டோரியா ப்ரின்ஸிபல்

5. விக்டோரியா ப்ரின்ஸிபல்

விக்டோரியா ப்ரின்ஸிபல் ஒரு அமெரிக்க நடிகை, தொழிலதிபர் மற்றும் எழுத்தாளர் ஆவார். 1950 ஆம் ஆண்டில் ஜப்பானில் உள்ள ஃபுகுகோக்காவில் பிறந்தார். சிபிஎஸ் இரவுநேர நெடுந்தொடரான டல்லாஸ் (1978-87) மற்றும் "தி லைஃப் அண்ட் டைம் ஆஃப் ஜட்ஜ் ராய் பீன் திரைப்படம் (1972) ஆகியவற்றில் பமீலா பார்ன்ஸ் எவிங் என்ற அவரது கதாபாத்திரத்திற்காக பரவலாக அறியப்படுகிறார்.

அவர் தனது சொந்த தோல் பராமரிப்பு தொடர்பான ஒரு வணிக தொழில் முனைவோர். விக்டோரியா ப்ரின்ஸிபல் $200 மில்லியனுக்கு அதிபதி.

4. சான்டரா புல்லக்

4. சான்டரா புல்லக்

சான்டரா புல்லக் ஒரு அமெரிக்க நடிகை மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஆவார். இவர் $200 மில்லியன் நிகர சொத்துமதிப்பைக் கொண்டுள்ளார். சாண்ட்ரா புல்லக் தனது ஐந்து வயதில் நடிக்கத் துவங்கினார். தற்போது வரை ஸ்பீட், பிரின்ஸ் ஆப் ஈஜிப்ட், க்ராவிட்டி, மிஸ் கஞ்சென்னியாலிட்டி, மினியன்ஸ், தி ஹீட், தி ப்ரோபோசல் மற்றும் பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.

சான்டரா புல்லக் அகாடமி மற்றும் கோல்டன் குளோப் விருதுகளுடன் திரைப்படம் சார்ந்த பல விருதுகளையும் பெற்றுள்ளார். 2015 ஆம் ஆண்டில் பீப்பிள் இதழில் 'மிக அழகிய பெண்' எனவும் அவர் அறிவிக்கப்பட்டார்.

3. ஜூலியா லூயிஸ்-ட்ரீஃபஸ்

3. ஜூலியா லூயிஸ்-ட்ரீஃபஸ்

ஜூலியா லூயிஸ்-ட்ரீஃபஸ், பெரும் பணக்காரரான ஜெரார்ட் லூயிஸ்-ட்ரீஃபூஸின் மகள். இவர் ஒரு அமெரிக்க நடிகை, தயாரிப்பாளர் மற்றும் நகைச்சுவை நடிகர் ஆவார். அவர் தன் நடிப்பால் புகழடைந்த படங்கள் எனோப் செட், பிளேன்ஸ், டீகன்ஸ்ட்ராக்ட்டிங் ஹார்ரி, ஜெனீரோஸிட்டி ஆப் ஐ, ஹன்னாஹ் அண்ட் ஹெர் சிஸ்டர்ஸ் மற்றும் பல. அவர் பல திரைப்பட விருதுகளைப் பெற்றுள்ளார்.

அவற்றுள் ஒன்பது எம்மி விருதுகளும், ஏழு ஸ்க்ரீன் ஆக்டர்ஸ் கில்ட் விருதுகள் மற்றும் கோல்டன் குளோப் விருதும் அடங்கும். ஜூலியா சுமார் $200 மில்லியன் நிகர சொத்துமதிப்புக் கொண்டு உலகின் முதல் 10 பணக்கார நடிகைகளில் எங்கள் பட்டியலில் மூன்றில் நிற்கிறார்.

2. ஜெசிகா ஆல்பா

2. ஜெசிகா ஆல்பா

ஜெசிகா ஆல்பா ஒரு அமெரிக்க நடிகை, மாடல் மற்றும் தொழிலதிபர். அவர் சின் சிட்டி (2005), ஹனி (2003) குட் லக் சக் (2007), ஃபெண்டாஸ்டிக் ஃபோர் (2005), டார்க் ஏஞ்சல், இன்டோ தி ப்ளூ (2005) போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். இந்த 36 வயதான அதிரடி நடிகை தனது நடிப்பிற்காக பல விருதுகளை வென்றுள்ளார்.

இதில் சாய்ஸ் நடிகை டீன் சாய்ஸ் விருது மற்றும் தொலைக்காட்சி சிறந்த நடிகைக்கான சாடர்ன் விருது ஆகியவை அடங்கும். ஜெசிகா ஆல்பா வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தின் துணை நிறுவனர் ஆவார். அவர் உலகில் இரண்டாவது பணக்கார நடிகை ஆவார். அவர் $350 மில்லியன் நிகர சொத்து மதிப்புடையவர்.

1. ஜாமி கெர்ட்ஸ்

1. ஜாமி கெர்ட்ஸ்

ஜாமி கெர்ட்ஸ் ஒரு அமெரிக்கக் கொடையாளர் மற்றும் நடிகை ஆவார். இவர் 1965 ஆம் ஆண்டில் சிகாகோ, இல்லினாய்ஸ் என்ற இடத்தில் பிறந்தார். அவரது ஆரம்பகால கதாபாத்திரங்களில், க்ராஸ்ரோட்ஸ், தி லாஸ்ட் பாய்ஸ், குவிக்சில்வர் மற்றும் லஸ் டான் ஜீரோ போன்ற படங்கள் மூலம் நன்கு அறியப்பட்டவர். ஜாமி கெர்ட்ஸ் $2 பில்லியன் நிகர சொத்து மதிப்புடன் உலகின் பணக்கார நடிகையாக அறியப்படுகிறார்.

இருப்பினும் அவரது நிகர சொத்து மதிப்பு அனைத்தும் அவரது நடிப்பு வாழ்க்கையிலிருந்து வரவில்லை. ஜாமி கெர்ட்ஸின் நிகர சொத்து மதிப்பின் பெரும்பகுதி, லாஸ் ஏஞ்சல்ஸை அடிப்படையாக கொண்ட பில்லியனர் டோனி ரெஸ்லருடனான திருமணத்திலிருந்து வந்தது.

தமிழ்நாடு

தமிழ்நாடு

இந்தியாவின் பணக்கார மாநிலங்களில் தமிழ்நாட்டுக்கு எந்த இடம் தெரியுமா..?

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Top 10 Richest Actresses in the World 2017

Top 10 Richest Actresses in the World 2017 - Tamil Goodreturns | இவுக அழகிலும் டாப்பு.. பணத்திலும் டாப்பு..! - தமிழ் குட்ரிட்டன்ஸ்
Story first published: Saturday, October 28, 2017, 13:08 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X