இந்திய வங்கிகள் ஏன் தொடர்ந்து ஏடிஎம் மையங்களை மூடி வருகின்றன எனத் தெரியுமா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் முதன் முறையாக ஜூன் மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் 358 ஏடிஎம் மையங்கள் மூடப்பட்டுள்ளது. அதாவது 0.16 சதவீத ஏடிஎம் மையங்கள் மூடப்பட்டுள்ளது. இது ஏன் என்ற காரணங்களை இங்கு விளக்கமாகப் பார்ப்போம்.

 

கவனிக்க வேண்டியவை

கவனிக்க வேண்டியவை

கடந்த 4 ஆண்டுகளாக 16.4 சதவீத ஏடிஎம் மையங்கள் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வந்தன. சென்ற ஆண்டு 3.6 சதவீதம் வரை புதிய ஏடிஎம் வைப்பது குறைந்து இருந்தது. ஆனால் இந்த ஆண்டுத் தான் முதன் முறையாக மூடப்பட்டுள்ளது.

பண மதிப்பு நீக்க நடவடிக்கை

பண மதிப்பு நீக்க நடவடிக்கை

பண மதிப்பு நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட பிறகு ஏற்பட்ட தட்டுப்பாடுகள் பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்ததை அடுத்துத் தான் ஏடிஎம் மையங்கள் குறைக்கப்பட்டுள்ளது. அதுமட்டும் இல்லாமல் ரூபாய் நொட்டு அளவீடுகள் மாறியதை அடுத்து இயந்திரங்களில் திருத்தம் செய்ய வேண்டிய பணிகள் நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.

மூடப்பட்ட ஏடிஎம் எண்ணிக்கைகள்
 

மூடப்பட்ட ஏடிஎம் எண்ணிக்கைகள்

இந்தியாவில் அதிக ஏடிஎம் மையங்கள் கொண்ட எஸ்பிஐ வங்கியில் 59291 ஏடிஎம் மையங்களாக இருந்தது 59,00 ஆகக் குறைந்துள்ளது, பஞ்சாப் நேஷனல் வங்கி ஏடிஎம் மையங்கள் 10,502-ல் இருந்து 10,083 ஆகக் குறைந்துள்ளது, எச்டிஎப்சி வங்கி ஏடிஎம் மையங்கள் 12,230-ல் இருந்து 12,225 ஆகக் குறைந்துள்ளது.

வாடகை

வாடகை

ஏடிஎம் மையங்களை விமான நிலையங்கள் மற்றும் மும்பையின் முக்கிய இடங்களில் வைக்க வாடகைக்கு மட்டும் மாதத்திற்கு 40,000 ரூபாய் வரை செலவு ஆகின்றது. இதுவே சென்னை மற்றும் பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் 8,000 ரூபாய் முதல் 15,000 ரூபாய் வரை செலவாகின்றது.

சம்பளம்

சம்பளம்

ஏடிஎம் மையங்களின் காவலாளிகளுக்கான சம்பளம், ஏடிஎம் ஆப்ரேட்டர்களுக்கான சம்பளம், பராமரிப்புக் கட்டணம், இணையதளக் கட்டணம், மின்சாரக் கட்டணம் என மாதம் 30,000 ரூபாய் முதல் 1 லட்சம் ரூபாய் வரை செலவாகின்றது. அதில் முக்கியமானது ஏசிக்காகச் செலவு செய்வது ஆகும்.

கிராமப்புறங்கள்

கிராமப்புறங்கள்

10 ஏடிஎம் மையங்களில் 8 நகரங்களில் தான் உள்ளது, பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு டிஜிட்டல் பரிவர்த்தனையினை அதிகளவில் பயன்படுத்து இங்கு அதிகரித்துள்ளது. நாட்டில் உள்ள மொத்த ஏடிஎம் மையங்களில் 15 சதவீதம் தான் கிராமப்புறங்களில் உள்ளது. அதே நேரம் அங்குத் தான் அதிகப் பணப் பரிவர்த்தனைகள் தேவைப்படுவதால் ஏடிஎம் ஆப்ரேட்டர்கள் கிராமப்புறங்களில் கவனத்தினைச் செலுத்த வேண்டும் என்று டாடா கம்யூனிகேஷன்சின் பேமெண்ட்ஸ் பிரிவு தலைமை நிர்வாக அதிகாரியான சஞ்சீவ் பட்டேல் கூறினார்.

மக்களே..! உஷார்..!

மக்களே..! உஷார்..!

மக்களே..! உஷார்..! நவம்பர் மாதம் இந்தப் பொருட்கள் எல்லாம் விலை உயரும்..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Why banks in India are shutting down there ATM'S

Why banks in India are shutting down there ATM'S
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X