விமான பயணிகளே டிக்கெட் ரத்து செய்தால் இனி கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: கடந்த ஒரு ஆண்டில் விமான டிக்கெட் ரத்து செய்யும் கட்டணம் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதால் கடைசி நிமிடத்தில் விமான டிக்கெட் ரத்து செய்யும் போது ஒரு ரூபாய் கூடத் திரும்பிப் பெற முடியாத நிலைக்குப் பயணிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

 

குறைந்த விலையில் பயணிகளுக்கான விமானப் போக்குவரத்து சேவை அளித்து வரும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் புதன்கிழமை முதல் டிக்கெட் ரத்துச் செய்வதற்கான கட்டணத்தினை உயர்த்தியுள்ளது.

டிக்கெட் ரத்துக் கட்டணம் எவ்வளவு

டிக்கெட் ரத்துக் கட்டணம் எவ்வளவு

ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் டிக்கெட் ரத்துக் கட்டணத்தினை 3,000 ரூபாய் முதல் 3,500 ரூபாய் வரை வசூலிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. இதுவே சென்ற மாதம் வரை 2,205 ரூபாய் முதல் 2,500 ரூபாய் வரை என இருந்தது.

ஒரு வருடத்திற்கு முந்தைய நிலை

ஒரு வருடத்திற்கு முந்தைய நிலை

2016-ம் ஆண்டு ஜனவரி மாதம் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் டிக்கெட் ரத்துக் கட்டணம் 1,800 ரூபாயாக இருந்தது. கோஏர் நிறுவனத்தில் 2,225 ரூபாயாக டிக்கெட் ரத்துக் கட்டணம் இருந்தது குறிப்பிடத்தக்கது.

சலுகை விலை டிக்கெட்
 

சலுகை விலை டிக்கெட்

இதுவே சலுகை விலையில் டிக்கெட் வாங்கிய பிறகு ரத்து செய்தால் 1 ரூபாய் கூட வாடிக்கையாளர்களால் திரும்பிப் பெற முடிவதில்லை.

விமானப் போக்குவரத்து டிராப்பிக்

விமானப் போக்குவரத்து டிராப்பிக்

ஒரு பக்கம் டிக்கெட் ரத்துக் கட்டணம் உயர்ந்து வந்தாலும் இந்தியாவில் விமானப் போக்குவரத்தின் டிராப்பிக் இரண்டு இலக்க எண்ணாக அதிகரித்துள்ளது. ஆகஸ்ட் மாதம் வரை 16 சதவீதமக இந்தியாவில் டிராப்பிக் அதிகரித்துள்ளது எனச் சர்வதேச விமானப் போக்குவரத்துக் கழகம் அறிவித்து உள்ளது.

மூன்றாம் இடத்தை நோக்கி இந்தியா

மூன்றாம் இடத்தை நோக்கி இந்தியா

இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளைப் பின்னுக்குத் தள்ளி 2025-ம் ஆண்டுக்கும் மூன்றாம் மிகப் பெரிய விமானப் போக்குவரத்துச் சந்தையாக இந்தியா இருக்க வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பாடு வருகின்றது. 2036-ம் ஆண்டில் இந்தியாவில் ஆண்டுக்கு 478 மில்லியன் நபர்கள் பயணம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தியன் ஏர்லைன்ஸ்

இந்தியன் ஏர்லைன்ஸ்

இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திடம் 800க்கும் அதிகமான விமானங்கள் உள்ளன, 2021-ம் ஆண்டுக்குள் மேலும் 300 முதல் 400 விமானங்கள் அதிகரிக்கும் என்று கூறப்படுகின்றது.

மேற்கத்திய நாடுகளுடன் ஒப்பீடு

மேற்கத்திய நாடுகளுடன் ஒப்பீடு

மேற்கத்திய நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்திய விமானப் போக்குவரத்து நிறுவங்கள் முன்கூடியே டிக்கெட் புக் செய்யும் போது அதிகச் சலுகைகளை வழங்குவதில்லை. எனவே டிக்கெட் ரத்துக் கட்டணம் உயர்ந்தால் விமானப் போக்குவரத்தினை விரும்புபவர்களும் குறைவார்கள் என்று ஒரு ஆய்வு கூறுகின்றது.

ரயில் டிக்கெட் ரத்துக் கட்டணம்

ரயில் டிக்கெட் ரத்துக் கட்டணம்

5 வருடங்களுக்கு முன்பு சாதரான வகுப்பு ரயில் டிக்கெட் ரத்து செய்யும் போது 10 ரூபாய் என இருந்த கட்டணம் இன்று 30 ரூபாய் என அதிகரித்துள்ளது. அதே நேரம் முன்கேட்டியே புக் செய்யும் டிக்கெட்களுக்கு நேரத்திற்குத் தகுந்தார் போல டிக்கெட் ரத்துக் கட்டணம் வசூலிக்கப்படுகின்றது. தட்கல் முறையில் டிக்கெட் புக் செய்து சீட்டு கிடைத்துவிட்ட பிறகு ரத்து செய்தால் இரு ரூபாய் கூடத் திரும்பக் கிடைக்காது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Now air tickets cancelling will cost passengers more

Now air tickets cancelling will cost passengers more
Story first published: Sunday, November 5, 2017, 12:53 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X