பாரடைஸ் பேப்பர்ஸ்: பிரிட்டிஷ் இளவரசி உட்பட 714 இந்தியர்கள் வரி ஏய்ப்பில் சிக்கினர்..!

Posted By: Tamilarasu
Subscribe to GoodReturns Tamil

பனாமா பேப்பர்ஸ் மூலம் உலகின் முன்னணி பிரபலங்கள் தங்களது சொத்துக்களை மறைத்து வரி ஏய்ப்பு செய்த விபரங்களை வெளிச்சத்திற்கு வந்த அதிர்வுகளே இன்னமும் குறையமால் இருக்கும் நிலையில் தற்போது பாரடைஸ் பேப்பர்ஸ் என்ற பெயரில் அடுத்த அதிரடியை களமிறக்கியுள்ளது ரகசிய அமைப்பு.

பல்வேறு ஆவணங்கள் அடங்கிய இப்பட்டியலில் சுமார் 714 இந்தியர்கள் அடங்கியுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது.

ஆப்பிள்பை

வெளிநாட்டு சட்ட உதவி செய்யும் ஆப்பிள்பை என்ற நிறுவனத்திடம் இருந்து ரகசியமாகச் சேகரிக்கப்பட்ட தகவல்கள் ஆவணங்கள் ஆகியவற்றின் மூலம் பல இந்தியர்கள் உட்பட, கார்பரேட் நிறுவனங்கள், முதலீட்டு நிறுவனங்கள் ஆகியவை எப்படி வரியை ஏமாற்றிச் சொத்துக்களைச் சேர்த்துள்ளது என்ற தகவல்கள் கிடைத்துள்ளது.

180 நாடுகள்

தற்போது வெளியான பாரடைஸ் பேப்பர்ஸ் மூலம் சுமார் 180 நாடுகளைச் சேர்ந்த நபர்கள் மறைக்கப்பட்ட சொத்து விபரங்கள் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதில் இடம்பெற்றுள்ள நபர்களின் எண்ணிக்கையை வைத்துப் பார்க்கும்போது இந்தியா 19வது இடத்தில் உள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்ட செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

இந்தியர்கள் தான் டாப்பு

118 நாடுகளுக்கு ஆப்ஷோர் சேவையை அளித்து வரும் ஆப்பிள்பே நிறுவனத்தில் இருந்து பெறப்பட்ட தகவல்கள் மூலம் சுமார் 714 இந்தியர்கள் பெறப்பட்டது மட்டும் அல்லாமல் இந்நிறுவனத்திற்கு இந்தியர்கள் தான் 2வது பெரிய வாடிக்கையாளர்கள் என்பதும் தற்போது தெரிய வந்துள்ளது.

கருப்புப் பணம் தினம்

கடந்த வருடம் நவம்பர் 8ஆம் தேதி மோடி தலைமையிலான அரசு பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளைத் தடை செய்து பணமதிப்பிழப்பு நடவடிக்கையைக் கொண்டு வந்தது. இதன் முதல் வருட கொண்டாட்டத்தை அடுத்த 2 நாளில் கொண்டாட திட்டமிட்டுள்ள நிலையில் பாரடைஸ் பேப்பரஸ் வெளியாகியுள்ள கருப்பு பண ஆசாமிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

முக்கிய வாடிக்கையாளர்கள்

சர்வதேச புலனாய்வு பத்திரிக்கையாளர்கள் என்ற அமைப்புச் சேகரித்த தகவல்கள் மலம் அமெரிக்க வர்த்தகச் செயலாளர் வில்பர் ராஸ் மற்றும் ரஷ்ய அதிபர் புடின்-இன் மருமகன் Kirill Shamalov ஆகியோர் ஆப்பிள்பே நிறுவனத்தின் முக்கிய வாடிக்கையாளர்கள் எனத் தெரியவந்துள்ளது.

பிரிட்டிஷ் இளவரசி

மேலும் பிரிட்டிஷ் இளவரசியான 2வது எலிசபெத் வெளிநாட்டு வரி ஆதாயம் கொண்ட திட்டத்தில் சுமார் 10 மில்லியன் பவுண்டு பணத்தை முதலீடு செய்துள்ளார் எனப் பாரடைஸ் பேப்பரஸில் வெளியான தகவல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ICIJ

பனாமா பேப்பர்ஸ் வெளியானதிற்கு முக்கியக் காரணமாக விளங்கிய சர்வதேச புலனாய்வு பத்திரிக்கையாளர்கள் அமைப்புப் பாரடைஸ் பேப்பர்ஸ் வெளியானதிற்கும் முக்கியக் காரணம் என அறியப்படுகிறது.

மேலும் இதில் இடம்பெற்றுள்ள இந்தியர்கள் மற்றும் அவர்களது சொத்து மதிப்புக் குறித்த தகவல்களைக் கூடிய விரைவில் வெளியாகும்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

After Panama Papers now Paradise Papers: 714 Indians were listed

After Panama Papers now Paradise Papers: 714 Indians were listed - Tamil Goodreturns
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns