பஞ்சாப் நேஷனல் வங்கி ஒரு ஆண்டில் 300 கிளைகளை மூட முடிவு.. ஊழியர்களின் நிலை என்ன?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பஞ்சாப் நேஷனல் வங்கி வரும் 12 மாதங்களில் 200 முதல் 300 நட்டம் அளித்து வரும் வங்கி கிளைகளை மூட அல்லது இடமாற்றம் செய்ய முடிவு செய்துள்ளது.

 

நாங்கள் இதுவரை 3 வங்கி கிளைகளைத் தான் மூடி இருக்கின்றோம் என்றும் ஒரு ஆண்டில் 200 முதல் 300 நட்டம் அளிக்கும் வங்கி கிளைகள் வரை மூட அல்லது இடமாற்ற திட்டமிட்டுள்ளதாகவும் இதற்காக ஒரு குழுவை அமைத்துள்ளதாகவும் பஞ்சாப் நேஷ்னல் வங்கியின் நிர்வாக இயக்குனர் சுனில் மேத்தா தெரிவித்தார்

வங்கி கிளைகள்

வங்கி கிளைகள்

2017-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு 6,937 வங்கி கிளைகள் இருந்தன. இதுவே ஏப்ரல், ஜூன் மாதத்தில் 6,946 ஆக அதிகரித்தது. இரண்டாம் காலாண்டில் மட்டும் 6 வங்கி கிளைகள் மூடப்பட்டு 6,940 ஆகக் குறைந்துள்ளது.

நட்டம் அளித்து வரும் வங்கி கிளைகளை லாபம் அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டு வருவதாக மேத்தா கூறினார்.

 

குழு

குழு

டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இந்தியாவின் இரண்டாம் மிகப் பெரிய வங்கி நிறுவனமான பஞ்சாப் நேஷனல் வங்கி மூத்த அதிகாரிகள் குழு ஒன்றை அமைத்து வங்கி கிளைகள் பற்றி ஆராய்ந்து வருகின்றது.

ஏடிஎம் மையங்கள்
 

ஏடிஎம் மையங்கள்

பஞ்சாப் நேஷனல் வங்கி சென்ற 6 மாதத்தில் 10,681 ஆக இருந்த ஏடிஎம் மையங்களின் எண்ணிக்கையில் 928 மையங்களை மூடிவிட்டு 9,753 ஆகக் குறைத்துள்ளதாக 2 காலாண்டு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

ஊழியர்களின் நிலை

ஊழியர்களின் நிலை

வங்கி கிளைகளை டிஜிட்டல் மையமாக்குவது போன்ற பணிகளிலும் வங்கி தரப்பு இயங்கி வருவதால் ஊழியர்களின் வேலை வாய்ப்புகள் பறிபோகவும் வாய்ப்புள்ளது.

ஆர்பிஐ

ஆர்பிஐ

இந்திய ரிசர்வ் வங்கியும் மே மாதம் வங்கிகளுக்கு இடம் மற்றி அமைக்க, வங்கி கிளைகளை மூட அனுமதிகளை வழங்கியுள்ளது. இதனால் எங்கு வாடிக்கையாளர்களுக்கு வங்கி தேவைகள் உள்ளதோ அங்குச் சிறப்பான சேவை அளிக்க முடியும் என்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

விலக்கு அளிக்கப்பட்டுள்ள வங்கி கிளைகள்

விலக்கு அளிக்கப்பட்டுள்ள வங்கி கிளைகள்

பஞ்சாப் நேஷ்னல் வங்கி கிளைகள் மூடும் பட்டியலில் கிராமப் பிற கிளைகள் மற்றும் செமி அர்பன் கிளைகள் போன்றவற்றுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

In a year Punjab National Bank to close or shift 300 loss making branches

In a year Punjab National Bank to close or shift 300 loss making branches
Story first published: Wednesday, November 8, 2017, 18:33 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X