18சதவீத ஜிஎஸ்டி முட்டாள்தனமா?.. மோடி அரசை விலாசும் பி.சிதம்பரம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நாட்டின் மறைமுக வரியை முழுமையாக மாற்றியமைத்த சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி-யை மோடி தலைமையிலான பாஜக அரசு இந்தியாவில் அமலாக்கம் செய்தது. ஆனால் காங்கிரஸ் கட்சி, தான் ஆட்சியில் இருக்கும்போதே இதற்கான திட்டவடிவத்தையும், வரி அளவீடுகளையும் தயாரித்து நடைமுறைப்படுத்த போராடி வந்தது, ஆனால் முடியவில்லை.

மோடி அரசு ஜிஎஸ்டி வரியை அமலாக்கம் செய்தவதிற்கு எவ்விதமான எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என்றாலும், அதிகப்படியான வரியை விதிக்கப்பட்டுள்ளது என்பதை ஆரம்பம் முதலே காங்கிரஸ் மற்றும் இக்கட்சித் தலைவர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தனர். இதில் முன்னாள் நிதியமைச்சரான ப.சிதம்பரம் முக்கியமானவர்.

மோடி பிரச்சாரம்

மோடி பிரச்சாரம்

குஜராத் மாநிலத்தில் நேற்று நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் மோடி, ஜிஎஸ்டி வரியை கப்பர் சிங் வரி எனக் கிண்டல் செய்த ராகுல் காந்தி குறித்தும், ஜிஎஸ்டி வரியை 18 சதவீதமாக மாற்ற வேண்டும் என அவர் கூறியதை மோடி முட்டாள்தனமானது எனக் கூறினார்.

18 சதவீத வரி

18 சதவீத வரி

இப்பிரச்சாரத்தில் மோடி, ராகுல் காந்தி கூறுவதைப் போல் 18 சதவீதம் வரியை நிர்ணயம் செய்தால் உப்புக்கும் 18 சதவீத வரி, 5 கோடி ரூபாய் மதிப்பிலான ஆடம்பர கார்களும் 18 சதவீதம் வரியா. ராகுல் கூறுவது எந்த விதத்தில் நியாயம் என்று கேள்வியை எழுப்பினார் மோடி.

டிவிட்டர்
 

டிவிட்டர்

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இன்று ப.சிதம்பரம் தனது டிவிட்டர் பக்கத்தில் ஜிஎஸ்டி வரி குறித்தும் வரி நிர்ணயம் செய்யும் அமைப்பில் இருந்த பொருளாதார வல்லுனர்கள், தலைமை பொருளாதார ஆலோகரான அரவிந்த் சுப்பிரமணியன் மற்றும் மோடி அரசையும் விலாசினார்.

முட்டாள்தனமானது

முட்டாள்தனமானது

18 சதவீத வரியை அதிகப்படியான வரியாக நிர்ணயம் செய்ய ஆலோசனை செய்யப்படுவது முட்டாள்தனமான யோசனை என்றால், தலைமை பொளுளாதார ஆலோசகரான அரவிந்த் சுப்பிரமணியன் மற்றும் பல பொருளாதார வல்லுனர்களும் முட்டாள்கள் தான். இதைத் தான் பிரதமர் கூறுகிறாரா..?

வருவாய் நடுநிலை விகிதம்

வருவாய் நடுநிலை விகிதம்

பிரதமர், தலைமை பொளுளாதார ஆலோசகரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள வருவாய் நடுநிலை விகிதம் குறித்துப் படித்தாரா? தலைமை பொளுளாதார ஆலோசகர் வருவாய் நடுநிலை விகிதத்தை 15-15.5 சதவீதமாகப் பரிந்துரைக்கவில்லையா?

15 சதவீத வரி

15 சதவீத வரி

பிறகு ஏன் சராசரி ஜிஎஸ்டி வரி 15 சதவீதமாகவும், ஆடம்பர பொருட்களுக்கு வருவாய் நடுநிலை விகிதம் மற்றும் கூடுதல் வரியுடன் சேர்த்து 18 சதவீதம் என ஏன் இருக்கக் கூடாது? எனக் கேட்டுள்ளார்.

பெட்ரோல், டீசல்

பெட்ரோல், டீசல்

பாஜக அரசின் முக்கியக் கொள்கையே வரியும் செலவிடும் தான். இதற்கு உதாரணமாகக் கச்சா எண்ணெய் விலை 50 சதவீதம் வரை குறைந்த போதும் பெட்ரோல் டீசல் விலை மாறாமல் அதே விலையில் இருந்தது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

18percent tax rate is Grand Stupid Thought? PChidambaram‏ on modi speech

18percent tax rate is Grand Stupid Thought? PChidambaram‏ on modi speech - Tamil Goodreturns | 18சதவீத ஜிஎஸ்டி முட்டாள்தனமா?.. மோடி அரசை விலாசும் பி.சிதம்பரம்..! - தமிழ் குட்ரிட்டன்ஸ்
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X